Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நெல்லை டவுன் வழுக்கோடையில்ரூ.2 கோடி செலவில் பாலம்: அடுத்த மாதம் பணிகள் துவங்க முடிவு

Print PDF

தினமலர் 24.02.2010

நெல்லை டவுன் வழுக்கோடையில்ரூ.2 கோடி செலவில் பாலம்: அடுத்த மாதம் பணிகள் துவங்க முடிவு

திருநெல்வேலி:நெல்லை டவுன் வழுக்கோடையில் ரூ.2 கோடி செலவில் பாலம் அமைக்கும் பணிகள் அடுத்த மாதம் துவங்கும் என நெல்லை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் கூறினார்.நெல்லை டவுன் வழுக்கோடை பாலத்தில் மழை காலங்களில் மழைநீர் ரோட்டில் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கும், மக்கள் செல்வதற்கும் இடையூராக உள்ளது. இதைத் தடுக்கும் வகையில் வழுக்கோடை தாம்போதியில் பாலம் அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நெல்லை வந்த துணை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டது. வழுக்கோடை பகுதியை பார்வையிட்ட துணை முதல்வர் ஸ்டாலின், அந்த இடத்தில் பாலம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்க எஸ்டிமேட் போடப்பட்டது. அந்த இடத்தில் செல்லும் குடிநீர் குழாயை மாற்றியமைக்கவேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர். ஆனால் வேறு பிளானில் பாலம் அமைக்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து புதிய மதிப்பீடு போடப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இறுதியில் இதற்கான பணிகள் துவங்கும் என தெரிகிறது.

இணைப்புச் சாலை3ம் தேதி திறப்பு:வண்ணார்பேட்டை பி.எஸ்.என்.எல்.பகுதியில் இருந்து கொக்கிரகுளம் வரையிலான 1.2 கி.மீ இணைப்பு ரோடு ரூ.33 லட்சம் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த ரோடு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மார்ச் 3ம் தேதி திறந்துவிடப்படும்.இவ்வாறு மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் கூறினார்.

 

லக்கம்பட்டி டவுன் பஞ்சாயத்து அலுவலகம் மார்ச்சில் திறப்பு

Print PDF

தினமலர் 24.02.2010

லக்கம்பட்டி டவுன் பஞ்சாயத்து அலுவலகம் மார்ச்சில் திறப்பு

கோபிசெட்டிபாளையம்: கோபி லக்கம்பட்டி டவுன் பஞ்சாயத்தின் புதிய அலுவலகம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. கோபியை அடுத்த லக்கம்பட்டி டவுன் பஞ்சாயத்தில் 15 வார்டுகள் உள்ளது. தற்போது பஞ்சாயத்து அலுவலகம் கோபி சட்டசபை தொகுதி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து அதே பகுதியில் "உள்கட்டமைப்பு அடிப்படை' வசதிகள் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 20 லட்ச ரூபாய் செலவில் லக்கம்பட்டி பஞ்சாயத்து யூனியனுக்கு புதிய அலுவலகம் கட்டும் பணி ஆறு மாதத்துக்கு முன் தொடங்கப்பட்டது. புதிய கட்டிடத்தில் தலைவர் அறை, செயல் அலுவலர் அறை, கூட்ட அறை, பொறியாளர் அறை, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. லக்கம்பட்டி டவுன் பஞ்சாயத்தின் புதிய அலுவலகம் அடுத்த மாதம் முதல் செயல்பட தொடங்கும் என பஞ்சாயத்து தலைவர் நாராயணசாமி தெரிவித்தார்.

Last Updated on Wednesday, 24 February 2010 07:17
 

ஆற்காடு நகராட்சி:திட்டக்குழு கூட்டம்

Print PDF

தினமலர் 24.02.2010

ஆற்காடு நகராட்சி:திட்டக்குழு கூட்டம்

ஆற்காடு: ஆற்காடு நகராட்சியின் உள்ளூர் திட்டக்குழு உறுப்பினர்களின் கூட்டம் அதன் தலைவர் ஈஸ்வரப்பன் தலைமையில் நடந்தது.இதில், நகராட்சி கட்டட ஆய்வாளர் சியாமலதா, கவுன்சிலர் மற்றும் உள்ளூர் திட்டக்குழு உறுப்பினர்கள் சண்முகம், பாரத், சித்ரா, வெற்றிவேல், தமிழ்ச்செல்வி, கோபி, செல்வி, கருணா, கஸ்தூரி, ஆகியோர் கலந்து கொண்டனர். தீர்மானங்கள்: ஆற்காடு நகரில் 29 வீடுகள், 4 கடைகள் கட்ட அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதனை பரிசீலனை செய்து ஒப்புதல் அளிக்கப்படும். கட்டடங்கள் கட்ட அனுமதி கேட்டு மனு செய்பவர்கள் அனைத்து ஆவணங்களுடன் நகராட்சி தகவல் மையத்தில் மட்டுமே கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கும் மனுக்கள் பரிசீலனை செய்து 30 நாட்களுக்குள் ஒப்புதல் அளிப்பது, தவறும் பட்சத்தில் இது சம்பந்தமாக நகராட்சி சேர்மனிடம் விவரம் கேட்டு அறியலாம் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Wednesday, 24 February 2010 07:11
 


Page 654 of 841