Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

துப்புரவு பணியாளர் தின விழா

Print PDF

தினமலர் 23.02.2010

துப்புரவு பணியாளர் தின விழா

ஓசூர்: ஓசூர் நகராட்சியில் டைட்டான் நிறுவனத்தின் சமுதாய பணியில் விழிப்புணர்வு குழந்தைகள் இயக்கம் சார்பில் துப்புரவு பணியாளர்கள் தின விழா நடந்தது. டைட்டான் நிறுவன அதிகாரி வேணுகோபால் தலைமை வகித்தார். நகராட்சி துணை தலைவர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் சத்யா, துப்புரவு பணியாளர்ளை பாராட்டி இலவச ஸ்வெட்டர்கள் மற்றும் ரோஜா மலர்களை வழங்கினார். கவுன்சிலர்கள் குமார், ரமேஷ், சீனிவாசன், இந்திராணி, துப்புரவு ஆய்வாளர்கள் தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 23 February 2010 07:12
 

நகராட்சி சொத்துவரியை செலுத்துவதில்லை: அரக்கோணம் வணிகர் சங்கம் முடிவு

Print PDF

தினமணி 22.02.2010

நகராட்சி சொத்துவரியை செலுத்துவதில்லை: அரக்கோணம் வணிகர் சங்கம் முடிவு

அரக்கோணம், பிப் 21:அரக்கோணம் நகராட்சியில் சொத்துவரி நூறு சதவீதம் உயர்த்தப்பட்டதை கண்டித்து சொத்துவரியை தாற்காலிகமாக செலுத்துவதில்லை என அரக்கோணம் அனைத்து வணிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு அதன் தலைவர் கே.எம்.தேவராஜ் தலைமை தாங்கினார். செயலர் சுப்பிரமணி, நகர மளிகை வியாபாரிகள் சங்கச் செயலர் அசோகன், மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் கஜேந்திரன், ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர் இளங்கோ, பாத்திர வியாபாரிகள் சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியன், அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் துரைவேலு, சாமில் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஐ.அந்தோணிசாமி, சங்க இணைச் செயலர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 100 சதவீத வரி உயர்வை மறுபரிசீலனை செய்து குறைக்க வலியுறுத்தி தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளிப்பது, அரக்கோணம் நகராட்சிக்கு நிரந்தர ஆணையரை உடனடியாக நியமிக்க வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Monday, 22 February 2010 10:00
 

மக்கள் தொகை கணக்கெடுக்க தற்காலிக ஊழியர்

Print PDF

தினமலர் 22.02.2010

மக்கள் தொகை கணக்கெடுக்க தற்காலிக ஊழியர்

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில், மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிக்காக, கூடுதலாக தற்காலிக பணியாளர்கள் இருவரை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி விரைவில் துவக்கப்பட உள்ளது. இப்பணியை கவனிக்க ஒரு இளநிலை உதவியாளர், ஒரு உதவியாளர் என இரண்டு தற்காலிக பணியாளர்களை 2011 ஜூன் 30 வரை 18 மாதங்களுக்கு மட்டும் பணியில் ஈடுபடுத்த, தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் அனுமதி அளித்துள்ளார்.இளநிலை உதவியாளருக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய்; உதவியாளருக்கு மாதம் 12 ஆயிரம் ரூபாய் வீதம் தொகுப்பூதிய சம்பளம் வழங்கப்படும். மாநகராட்சி நிதியில் இருந்து இச்சம்பளம் வழங்கப்பட்டு, பின், அரசிடம் இருந்து இத்தொகையை ஈடு செய்து கொள்ள, வரும் 25ம் தேதி நடக்கும் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

Last Updated on Monday, 22 February 2010 06:36
 


Page 656 of 841