Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சித் தேர்தல் கால அவகாசம் கோரி உயர் நீதிமன்றத்தில் அரசு மனு

Print PDF

தினமணி 20.02.2010

மாநகராட்சித் தேர்தல் கால அவகாசம் கோரி உயர் நீதிமன்றத்தில் அரசு மனு

பெங்களூர்
, பிப்.19: பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலில் வார்டு இட ஒதுக்கீடு பட்டியலை அறிவிக்க கால அவகாசம் கோரி உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

÷மாநகராட்சித் தேர்தலை நடத்த கால அவகாசம் கேட்டு அரசு தாக்கல் செய்த சிறப்பு மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி கே

.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் அப்தாப் ஆலம், எஸ்.எச்.கபாடியா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அந்த மனுவை விசாரித்தது.

÷அப்போது நீதிபதிகள் கூறியதாவது: மாநகராட்சித் தேர்தல் தொடர்பாக எத்தனை முறைதான் உச்ச நீதிமன்றத்துக்கு வருவீர்கள்? உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிடுவது சரியல்ல. ÷

தேர்தல் தொடர்பாக ஏற்கெனவே உங்களுக்கு (மாநில அரசுக்கு) சரியான உத்தரவு பிறப்பித்துள்ளோம். அவ்வாறு இருந்தும் மீண்டும் மீண்டும் மனு தாக்கல் செய்வது சரியான நடைமுறையல்ல. பள்ளி நடைபெறும் சமயத்தில் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால், வாக்குப்பதிவை ஞாயிற்றுக்கிழமை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிய நீதிபதிகள், மனு மீது உத்தரவுப் பிறப்பிக்காமல் பிப்ரவரி 22-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். ÷இதற்கிடையே ஏற்கெனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி பிப்ரவரி 20-ம் தேதிக்குள் வார்டு இட ஒதுக்கீடு பட்டியலை அறிவித்து 22-ம் தேதிக்குள் அந்தப் பட்டியலை மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். ஆனால் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்காமல் விசாரணையை பிப்ரவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

÷எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத நிலையில் நீதிமன்ற அவமதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில், வார்டு இட ஒதுக்கீடு பட்டியலை அறிவிக்க கால அவகாசம் கேட்டு மாநில அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விவரம்தேர்தலை நடத்த கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் மீண்டும் பிப்ரவரி 22-ம் தேதி எடுத்துக் கொள்கிறது. இந்தச் சூழ்நிலையில் உயர் நீதிமன்றம் அறிவித்தபடி பிப்ரவரி 20-ம் தேதிக்குள் இட ஒதுக்கீடு பட்டியலை அறிவிக்க முடியவில்லை. எனவே அப்பட்டியலை அறிவிக்க அரசுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவை உயர்நீதிமன்றம் சனிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated on Saturday, 20 February 2010 10:52
 

உடன்குடி பேரூராட்சியில் ரூ. 51 லட்சம் செலவில் தார்சாலைகள்

Print PDF

தினமணி 20.02.2010

உடன்குடி பேரூராட்சியில் ரூ. 51 லட்சம் செலவில் தார்சாலைகள்

உடன்குடி, பிப்.19: உடன்குடி பேரூராட்சிப் பகுதியில் ரூ. 51 லட்சம் செலவில் தார்சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக பேரூராட்சித் தலைவர் சாகுல்ஹமீது தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு.

உடன்குடி பேரூராட்சியில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ. 50.82 லட்சம் செலவில் தார்ச் சாலைகள் அமைக்கப்பட உள்ளது.

இதன்படி ரூ. 19.68 லட்சம் மதிப்பீட்டில் காட்டுவாதட்டு முதல் மெஞ்ஞானபுரம் சாலை வரையுள்ள அனைத்து தெருக்கள், கிறிஸ்தியாநகரம் வடக்குத் தெரு, சுல்தான்புரம் வடக்குத் தெரு மற்றும் வைத்திலிங்கபுரம் தெரு ஆகிய பகுதிகளில் புதிய தார்ச் சாலைகள் அமைக்கவும், ரூ.17.68 லட்சம் மதிப்பீட்டில் புதுமனை மேலத்தெரு, கோட்டைவிளை காலனி மற்றும் வில்லிகுடியிருப்பு பகுதிகளில் புதிய தார்ச் சாலைகள் அமைக்கவும், ரூ. 13.46 லட்சம் மதிப்பீட்டில் கொத்துவாப்பள்ளித்

தெரு கிழக்குப் பகுதியிலிருந்து தோட்டக்காடு செல்லும் பகுதி வரை புதிய தார்ச் சாலைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

Last Updated on Saturday, 20 February 2010 10:49
 

சாலைகளில் கொடிக் கம்பம், தோரண வாயில் அமைக்க மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு: ஆணையர்

Print PDF

தினமணி 20.02.2010

சாலைகளில் கொடிக் கம்பம், தோரண வாயில் அமைக்க மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு: ஆணையர்

திருச்சி, பிப். 19: திருச்சி மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள முக்கியச் சாலைகளின் ஓரங்களில் கொடிக் கம்பங்கள், தோரண வாயில்கள் அமைக்க மாநகராட்சி மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக ஆணையர் த.தி. பால்சாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தார்ச் சாலைகள், சிமென்ட் கான்கிரீட் தளங்கள் மற்றும் நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால்கள் ஆகியவை மேம்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு விழாக்கள், நிகழ்ச்சிகளுக்காக சாலை ஓரங்களில் கொடிக் கம்பங்கள், அலங்கார வளைவுகள் அமைப்பதற்கு மாநகராட்சியின் அனுமதி பெறாமல், தன்னிச்சையாக குழி தோண்டுவதால் சாலைகள் பழுதடைந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்கவும், சாலைகளின் ஆயுள்காலத்தை நீட்டிக்கவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் சாலைகளின் ஓரங்களில் கொடிக் கம்பங்கள், தோரண வாயில்கள் அமைக்க நிரந்தரமாக இரும்புக் குழாய்கள் பதித்து அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இந்த வசதியை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், மாநகராட்சி நிர்ணயம் செய்யும் தொகையைச் செலுத்தி உரிய முன்அனுமதியுடன் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.

 


Page 657 of 841