Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

திருச்செந்தார் கோவில் கடற்கரையை அழகுபடுத்த ரூ.4.3 கோடியில் திட்டம்

Print PDF

தினமலர் 20.02.2010

திருச்செந்தார் கோவில் கடற்கரையை அழகுபடுத்த ரூ.4.3 கோடியில் திட்டம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவில் கடற்கரையை அழகுபடுத்த மத்திய அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 4.3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. அதன்படி, கடற்கரையில் சிறுவர் பூங்கா, சுகாதார வளாகம், பக்தர்கள் தங்கும் விடுதி, ஹைமாஸ் விளக்குகள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. அறநிலையத்துறை மற்றும் பேரூராட்சி சார்பில் நடக்கும் இப்பணிகளை, தூத்துக்குடி கலெக்டர் கோ.பிரகாஷ், நேற்று நேரில் ஆய்வு செய்தார். பணிகளை இரண்டு மாதத்தில் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து ஓட்டல், லாட்ஜ், திருமண மண்டப உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்படும், என தெரிவித்தார். அவ்வாறு, பிளாஸ்டிக் தடை செய்தால், மத்திய அரசிடமிருந்து அடுத்த நிதியாண்டில் சுற்றுலா வளர்ச்சிக்காக கூடுதலாக நிதி பெறலாம், எனவும் கூறினார். ஆர்.டி.., பாக்கியம் தேவ கிருபை, தாசில்தார் இளங்கோ, நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சீனிவாசன், அதிகாரிகள் உடனிருந்தனர

Last Updated on Saturday, 20 February 2010 06:55
 

மாநகராட்சிக்கு வழங்கிய இடத்தை சென்னை பெண் அதிகாரி ஆய்வு

Print PDF

தினமலர் 20.02.2010

மாநகராட்சிக்கு வழங்கிய இடத்தை சென்னை பெண் அதிகாரி ஆய்வு

தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சி மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கிய இடத்திற்கு பதிலாக மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ள புதிய இடத்தை சென்னை மாநகராட்சி பெண் அதிகாரி ஆய்வு செய்தார்.தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான தருவைகுளம் உரக்கிடங்கிற்கு அருகே உள்ள சுமார் 10 ஏக்கர் இடத்தை புதிய சமத்துவபுரம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு மாநகராட்சி வழங்கியுள்ளது. இதன் அரசு மதிப்பு ஒரு ஏக்கருக்கு சுமார் ஒரு லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த இடத்திற்கு பதிலாக மாவட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான அரசு இடமான தருவைகுளம் கடலோர காவல்படை அலுவலகம் அருகே சுமார் 28 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. இந்த பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் அரசு மதிப்பு படி சுமார் 35 ஆயிரத்திற்கு மேல் போவதாக கூறப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் மாநகராட்சிக்கு வழங்க உள்ள இடத்தை சென்னை நகராட்சிகளின் நிர்வாக இணை ஆணையர் மகேஸ்வரி முழுமையாக ஆய்வு செய்தார். டி.ஆர்.ஓ துரை.ரவிச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன், இன்ஜினியர் ராஜகோபாலன், நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனர். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக மகேஸ்வரி ஆலோசனை நடத்தினார்.

Last Updated on Saturday, 20 February 2010 06:50
 

பேரூராட்சி கூட்டம்

Print PDF

தினமலர் 20.02.2010

பேரூராட்சி கூட்டம்

வடமதுரை : வடமதுரை பேரூராட்சி கூட்டம் தலைவர் முத்துலட்சுமி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் கணேசன், துணைத் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சியின் எட்டாவது வார்டில் தாட்கோ மூலம் அமைக்கப்பட்ட சிமென்ட் ரோட்டின் நடுவே அமைந்துள்ள மூன்று மின்கம்பங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதால் மாற்றி அமைக்கவும், தொட்டையகவுண்டனூருக்கு குடிநீர் விநியோக அகற்ற பைப் லைன் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

Last Updated on Saturday, 20 February 2010 06:32
 


Page 658 of 841