Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சியில் தட்டச்சர் காலிப் பணியிடம் அறிவிப்பு

Print PDF

தினமணி              10.12.2013

மாநகராட்சியில் தட்டச்சர் காலிப் பணியிடம் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் பணியில் சேருவது தொடர்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: சென்னை மாநகராட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் காலிபணியிடத்துக்கு தகுதியானவர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. கல்வித் தகுதியுடைய தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் உயர்நிலையும், சுருக்கெழுத்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏதாவது ஒன்றில் உயர்நிலையும் மற்றொன்றில் இளநிலையும் தேர்ச்சி பெற்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் இந்த பணியிடத்திற்கு தேர்வுச் செய்யப்படவுள்ளனர். தகுதியுடைய நபர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநரை உரிய சான்றிதழ்களுடன் அலுவலக வேலை நாள்களில் டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ளவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

துப்புரவு பணியாளர்களுக்கு சலவைப்படி வழங்க வலியுறுத்தல்

Print PDF

தினகரன்                09.12.2013

துப்புரவு பணியாளர்களுக்கு சலவைப்படி வழங்க வலியுறுத்தல்

கரூர், : பள்ளப்பட்டி பேரூராட்சி ஊழியர்கள் சங்க கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தங்கராஜ் தலைமை வகித்தார். சங்க பொருளாளர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் தலைவராக தங்கராஜ், செயலாளராக பழனிசாமி, பொருளாளராக காளியம்மாள் உட்பட பல்வேறு நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர்.

பள்ளப்பட்டி பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு குடியிருக்க வீடுகள் கட்டித்தர வேண்டும். பள்ளப்பட்டி பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும். அரசாணையின்படி பேரூராட்சி பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு சலவைப்படி வழங்க வேண்டும். பெண்களுக்கு சீருடை தையற்கூலி ரூ.200 உயர்த்தி வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

கீழப்பாவூர் பகுதியில் ஆதார் அட்டைக்கு போட்டோ எடுப்பு

Print PDF

தினகரன்                09.12.2013

கீழப்பாவூர் பகுதியில் ஆதார் அட்டைக்கு போட்டோ எடுப்பு

பாவூர்சத்திரம், : கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்ட பகுதிகளில் ஆதார் அட்டை போட்டோ எடுக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நலத்திட்டங்கள் மக்களை நேரிடையாக சென்று அடையும் வகையில் இனிவரும் காலத்தில் ஆதார் அட்டை பயன்படும் முக்கியத்துவம் பெறுவதாக அமையும் என்பதால் பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டை பெற  ஆவலாக   உள்ள னர்.

இந்த ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் தீவிரமாக நடந்து வருகிறது. பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 27ம் தேதி முதல் போட்டோ எடுத்து வருகின்றனர்.

நேற்று 12வது வார்டுக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடந்தது. மற்ற வார்டுகளுக்கும் புகைப்படம் எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.

 


Page 67 of 841