Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சி தேர்தல்:முதல்வர் கருத்து

Print PDF

தினமணி 18.02.2010

மாநகராட்சி தேர்தல்:முதல்வர் கருத்து

பெங்களூர், பிப்.17: பள்ளித் தேர்வு அல்லது பெங்களூர் மாநகராட்சி தேர்தல் இரண்டில் ஒன்று நடக்கலாம், இரண்டையும் ஒன்றாக நடத்துவது சாத்தியமில்லை என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.

பெங்களூர் மாநகராட்சி தேர்தலை மார்ச் 30-ம் தேதிக்குள் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபடி தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு அப்பீல் மனுவை அரசு தாக்கல் செய்துள்ளது.

மாநகராட்சித் தேர்தலை அரசு தொடர்ந்து ஒத்திவைத்து வருவது குறித்து முதல்வர் எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்குப் பதில் அளித்து அவர் கூறியதாவது:

பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது சாத்தியமில்லை. மார்ச் மாதத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பியூசி தேர்வுகள் நடைபெறும்.

இந்த சமயத்தில் மாநகராட்சி தேர்தலை நடத்த போதிய வகுப்பறைகள் கிடைக்காது, ஊழியர்கள் கிடைக்க மாட்டார்கள். எனவே, தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம். இறுதியாக உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புப்படி செயல்படுவோம் என்றார்.

Last Updated on Thursday, 18 February 2010 09:35
 

மாநகராட்சி தேர்தல்: அரசின் அப்பீல் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Print PDF

தினமணி 18.02.2010

மாநகராட்சி தேர்தல்: அரசின் அப்பீல் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

பெங்களூர், பிப்.17: பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலை நடத்த கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ள மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பியூசி தேர்வுகள் நடைபெறவுள்ளன, மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர் எனவே மார்ச் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த முடியாது என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.

எனவே, தேர்தலை நடத்த கால அவகாசம் அளிக்கக் கோரி அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசு இவ்வாறு அப்பீல் செய்யும் என்பதை முன்கூட்டியே எண்ணி, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பிலும், தேர்தல் ஆணையத்தின் சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலை நடத்த கால அவகாசம் அளிப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ள காங்கிரஸ் தரப்பு, மற்றும் தேர்தல் ஆணைய தரப்பு வாதங்களை உச்ச நீதிமன்றம் கேட்டறியும்.

அதன் பிறகே தேர்தலை நடத்த கால அவகாசம் அளிப்பதா அல்லது கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புப்படி தேர்தலை நடத்த உத்தரவிடுவதா என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கும்.

இதற்கிடையே கேவியட் மனு தாக்கல் செய்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயர்கள் பி.ஆர்.ரமேஷ், ராமச்சந்திரப்பா, ஹுச்பப்பா மற்றும் முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் ஆகியோர் புதன்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றனர்.

Last Updated on Thursday, 18 February 2010 09:33
 

ஆரணி பேரூராட்சி மன்றக் கூட்டம்

Print PDF

தினமணி 18.02.2010

ஆரணி பேரூராட்சி மன்றக் கூட்டம்

கும்மிடிப்பூண்டி
, பிப். 17: கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணி பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ÷பேரூராட்சி தலைவர் ஹேமபூஷணம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாபு, செயல் அலுவலர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

÷இக் கூட்டத்தில் பேரூராட்சியின் வரவு செலவு கணக்கு, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் குறித்த விவரங்கள் மன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர். பேரூராட்சி பகுதியில் தடையில்லா குடிநீர், போதிய தெரு விளக்குகள் மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

Last Updated on Thursday, 18 February 2010 09:28
 


Page 661 of 841