Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

டூவீலர் ஸ்டாண்டுகளில் ஹெல்மெட்டுக்கு 'கப்பம்'

Print PDF

தினமலர் 18.02.2010

டூவீலர் ஸ்டாண்டுகளில் ஹெல்மெட்டுக்கு 'கப்பம்'

திருப்பூர் : திருப்பூரில் டூவீலர் ஓட்டுவோர் அவசியம் ஹெல்மெட் அணிந்து செல்வது நலம் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். பெரும்பாலானோர் ஹெல்மெட் அணிந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில், டூவீலர் ஸ்டாண்டுகளில் ஹெல்மெட்டுக்கு ஒரு ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தொழில் நகரமான திருப்பூரில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் பணியாற்றுகின்றனர். கோவை, பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம், காங்கயம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் பணிக்காக வருகின்றனர். வேலையின் தன்மைக்கேற்ப, டூவீலர் வைத்திருக்கின்றனர். தினமும் டூவீலரிலேயே ஊருக்குச் செல்ல முடியாது என்பதால், ஸ்டாண்டுகளில் விட்டுச் செல்கின்றனர்.
பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான டூவீலர் ஸ்டாண் டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங் கள் நிறுத்தப்படுகின்றன. இடப்பற்றாக் குறை ஏற்பட்டால், அருகிலுள்ள தனியார் ஸ்டாண்டுகளில் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர்.

தற்போது, டூவீலர் ஓட்டுவோர் ஹெல் மெட் அணிந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால், ஹெல்மெட் அணிவது அதிகரித்து வருகிறது. ஸ்டாண்டுகளில் டூவீலர் நிறுத்துவோரிடம் இருந்து, ஹெல்மெட்டுக்கென தனியாக கட்டணம் நிர்ணயித்து வசூலிக் கின்றனர். வாகனங்களில் ஹெல்மெட் "லாக்' வசதியிருந்தால் கட்டணமில்லை; அதிலேயே "லாக்' செய்து கொள்ளலாம். "லாக்' வசதி இல்லாமல், "பத்திரமாக வைத்திருங்கள்; நாளை வாங்கிக் கொள்கிறேன்' என்று கூறினால், அதற்கு ஒரு ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள மாநகராட்சி ஸ்டாண்டில் இடப் பற்றாக்குறை ஏற்படுவதால், தனியார் ஸ்டாண்டுகளை நாடிச் செல்ல வேண்டிஉள்ளது. வெளியூருக்குச் செல்லும் போது, ஹெல்மெட்டை கையோடு எடுத்துச் செல்ல முடியாது; ஸ்டாண்டுகளில் வைத்துச் செல்ல வேண்டும்.
பாதுகாப்பு கருதி, டோக்கன் எண்ணுடன் ஹெல்மெட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. இதற்காக ஒரு ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். தனியார் ஸ்டாண்டுகளில் 12 மணி நேரத்துக்கு வாகனம் நிறுத்த ஐந்து ரூபாய், ஹெல்மெட் பாதுகாக்க ஒரு ரூபாய் வசூலிக்கின்றனர். ஒரு நாள் முழுவதும் ஹெல்மெட்டுடன் வாகனத்தை நிறுத்திச்சென்றால் 12 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. திருப்பூர் பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் டூவீலரை நிறுத்திச் செல்ல சிரமமாக உள்ளது. எனவே, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் கூடுதலாக டூவீலர் ஸ்டாண்டுகளை உருவாக்க முயற்சிக்க வேண்டும், என்றனர

 

Last Updated on Thursday, 18 February 2010 07:44
 

மூன்று ஆண்டு தூக்கம் கலைந்தது : விழித்தது, நகராட்சி நிர்வாகம்

Print PDF

தினமலர் 18.02.2010

மூன்று ஆண்டு தூக்கம் கலைந்தது : விழித்தது, நகராட்சி நிர்வாகம்

திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சியில் கடந்த மூன்றாண்டுகளாக வரி செலுத்தாதவர் களின் குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பூர் அருகே உள்ள 15 வேலம்பாளையம் நகராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறையால், கடந்த மூன்றாண்டுகளாக வரி செலுத்தாதவர்கள் மீது "கவனம்' செலுத்தப்படவில்லை. இதுவரை இவர்களை கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம், தற்போது தான் அதுகுறித்து சிந்திக்கவே துவங்கியுள்ளது. நகராட்சியின் மெத்தனத்தால், வார்டு கவுன்சிலர் உட்பட பலரும் வரி ஏய்ப்பு செய்து வந்துள்ளனர். இந்நிலையில், வரி வசூலை தீவிரப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப் பட்டது.

இதைத்தொடர்ந்து, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில் வரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும், பிப்., 15க்குள் செலுத்த வேண்டுமென நகராட்சி செயல் அலுவலர், அறிவிப்பு வெளியிட்டார். வார்டு பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் தினமும் அறிவிப்பு செய்யப்பட்டது. விதிக்கப்பட்ட கெடு முடிந்ததைத் தொடர்ந்து, செலுத்தப்படாத வரியினங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக, நகராட்சியில் உள்ள முதல் ஐந்து வார்டுகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில், ஐந்தாவது வார்டு கவுன்சிலர் கல்யாணி உட்பட 11 பேர் மூன்று ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இருப்பது தெரியவந்தது. இதில் இரண்டு பேரின் குடிநீர் இணைப்புகள் துண்டிக் கப்பட்டன. இதையறிந்து, மீதியுள்ள ஒன்பது பேரும் வரியினங்களை அவசரமாகச் சென்று செலுத்தி விட்டனர். நகராட்சியின் அதிர்ச்சி வைத்திய நடவடிக்கையால், ஒரே நாளில் 60 ஆயிரம் ரூபாய் வசூலானது.

நகராட்சி பொறியாளர் மல்லிகை கூறிய தாவது: ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை வீட்டு வரி, தொழில் வரி, நான்கு முறை குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படும். 15 வேலம்பாளையம் நகராட்சி எல்லைக்குள் 2,000க்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள், 8,000 குடிநீர் இணைப்புகள் உள்ளன. வரி செலுத்தாதவர்கள் மீது, இம்மாத கடைசி வாரத் திலும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப் படும், என்றார்.

Last Updated on Thursday, 18 February 2010 07:43
 

பேரூராட்சி மன்ற கூட்டம்

Print PDF

தினமலர் 18.02.2010

பேரூராட்சி மன்ற கூட்டம்

சங்கராபுரம் : சங்கராபுரம் பேரூ ராட்சி கூட்டம் தலைவர் முனுசாமி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் சங்கரா புரம் பஸ் நிலையத்திற்கு அருகில் தற்போது வாரச் சந்தை இயங்கும் இடத்தை உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்து, வாரச் சந்தை இயங்கும் புதன்கிழமை தவிர மற்ற வார நாட்களில் உழவர் சந்தை இயங்கவும், உழவர் சந்தை இயங்க தேவையான கட்ட மைப்பு வசதிகளை செய்து தருவது. சங்கராபுரம் பேரூ ராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்க ளுக்கு சீருடைகள், காலணிகள், சோப்புகள் வழங்குவது. சங்கராபு ரம் ஆற்றுப் பாதை தெருவில் உள்ள பிரதான நீரேற்றும் குடிநீர் குழா யில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விநி யோகம் பாதிப்பதால் சரி செய்வது. சங்கராபுரம் வள்ளலார் நகர், இந்திரா நகர், பூட்டை ரோடு பகுதிக்கு மயானம் அமைக்க சங்கராபுரம் கல்லுக்கட்டி ஏரி குன்று புறம்போக்கில் 4 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து தரும்படி கலெக்டரை கேட்டுக் கொள்வது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

Last Updated on Thursday, 18 February 2010 07:21
 


Page 662 of 841