Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சியுடன் இணைப்பு: நாகமலை புதுக்கோட்டை பகுதி மக்கள் கருத்து

Print PDF

தினமலர் 18.02.2010

மாநகராட்சியுடன் இணைப்பு: நாகமலை புதுக்கோட்டை பகுதி மக்கள் கருத்து

சென்னையைச் சுற்றியுள்ளபல்வேறு நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, அம்மாநகராட்சியுடன் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. மதுரையைச் சுற்றியுள்ள உள்ளாட்சி அமைப்புகளையும் சேர்த்து அதே போல விரிவுபடுத்தும் திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. மதுரை மாநகராட்சியுடன் இணைந்தால், நிதி ஒதுக்கீடு அதிகம் கிடைக்கும். பாதாள சாக்கடை, புதிய சாலை, தெரு விளக்குகள், குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகள் கிடைக்கும்.மதுரை மாநகராட்சியுடன் நாகமலைபுதுக்கோட்டையை இணைப்பது குறித்து இப்பகுதி மக்களின் கருத்து. என்.ஜி.., காலனி குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் கந்தன்(65): நாகமலைபுதுக்கோட்டை பகுதியை மதுரை மாநகராட்சியுடன் இணைக்க கோரி சில ஆண்டுகளுக்கு முன்பே குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மதுரை கலெக்டருக்கு பரிந்துரை மனு அனுப்பியுள்ளோம். மாநகராட்சியுடன் இணைத்தால் நல்ல நிர்வாகம் கிடைக்கும். குடிநீர், பாதாள சாக்கடை போன்றவற்றில் ரூ.பல கோடியில் பெரிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும். ஊராட்சி மன்றத்தால் இது முடியாது. .டி. பார்க் போன்று நிறைய கம்பெனிகள் தொழில் துவங்க முன் வருவர். உலகவங்கி போன்றவற்றின் நிதியுதவியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

விலைவாசி, வீட்டு வாடகை உயருதல் போன்ற சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் நன்மையே அதிகம். *பெண்கள் நலச்சங்க நிர்வாகி சாந்தி(50): மாநகராட்சியுடன் இணைத்தால் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள், கல்வி, பெண்கள்முன்னேற்றம், வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கிராம ஊராட்சியாக இருப்பதால் பெரியதொழில்கள் இல்லை. மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். ரேஷன் வினியோகம் முதல் அனைத்தும் சரியாக நடக்கும். குறைகளை களைய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுப்பர்.*ஓய்வு பெற்ற பேராசிரியர் வின்சென்ட்(58): ஊராட்சியில் அடிப்படை தேவைகள் குறித்த கோரிக்கைகளில் 50 சதவீதம் மட்டுமே நிறைவேறுகிறது. தற்போது குப்பைகள், கொசு ஒழிப்பு போன்றவை தாமதமாகின்றன. மாநகராட்சியுடன் இணைந்தால் அனைத்து வசதிகளும் கிடைக்கும்.*அண்ணாத்துரை(40): மாநகராட்சியுடன் இணைந்தால் மக்கள் நெருக்கம், சாக்கடை நீர் தெருவில் ஓடுவது போன்ற சுகாதாரக்கேடுகள் ஏற்படும். தற்போது குறைகளை ஊராட்சி மன்றத்தில் கூறுகிறோம். மாநகராட்சியுடன் இணைந்தால் அதிகாரிகளை தொடர்பு கொள்வது சிரமம். *விருமன்(38): 10 ஆண்டுகளாக இத்திட்டத்தை எதிர்பார்க்கிறோம். மார்க்கெட், நல்ல குடிநீர், சாக்கடை வசதிகள், கொசுத்தொலை ஒழிப்பு, புதிய வீடுகளுக்கு லே-அவுட் அப்ரூவல், கட்டங்கள் முறைப்படுத்துதல், மருத்துவ வசதிகள் போன்ற வசதிகள் கிடைக்கும். *சேது(30): தற்போது ரோடு, சாக்கடை வசதிகள் செய்து தருமாறு கோரிக்கை விடுத்தால் பல ஆண்டுகளுக்கு பின்னரே நிதி ஒதுக்கப்படுகிறது. மாநகராட்சியுடன் இணைத்தால் இந்நிலை மாறும்.

Last Updated on Thursday, 18 February 2010 07:04
 

கடலூரில் கொசு தொல்லை : நகராட்சி தீவிர நடவடிக்கை

Print PDF

தினமலர் 18.02.2010

கடலூரில் கொசு தொல்லை : நகராட்சி தீவிர நடவடிக்கை

கடலூர் : கடலூர் நகரில் பெருகி வரும் கொசுவை ஒழிக்க நகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடலூர் நகரத்தில் நாளுக்கு நாள் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. கொசுவை ஒழிப்பதற்காக நகராட்சி சார்பில் 4 லட்சம் ரூபாய் மதிப்பில் கொசு மருந்து வாங்கப் பட்டது. கமிஷனர் குமார் உத்தரவின் பேரில் மாலை நேரத் தில் இயந்திரம் மூலம் ஃபாக்கிங் (புகை மருந்து) செய்யப்பட்டு வருகிறது. காலை நேரத்தில் சாக்கடை கால்வாயில் லார்வா உருவாவதை தடுப்பதற்கு திரவ மருந்து தெளிக்கப்படுகிறது. மேலும் செப்டிக் டேங் கில் இருந்து உருவாகும் கொசு காற்று போக்கிகள் மூலம் பரவுவதை தடுக்க இலவச பை வீடு தோறும் வழங்கப்படுகிறது. சாக்கடை நீர் தேங்கும் இடங்களையும், தேங்குவதற்கு காரணமானவர்களையும் கண்டறிந்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் கொசுவை அறவே ஒழிக்க முடியும்.

Last Updated on Thursday, 18 February 2010 06:57
 

மாநகராட்சி தேர்தல்: உச்ச நீதிமன்றத்தில் 2 கேவியட் மனுக்கள் தாக்கல்

Print PDF

தினமணி 17.02.2010

மாநகராட்சி தேர்தல்: உச்ச நீதிமன்றத்தில் 2 கேவியட் மனுக்கள் தாக்கல்

பெங்களூர், பிப்.16: பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தேர்தல் ஆணையமும், காங்கிரஸ் கட்சியும்

தாக்கல் செய்துள்ளன.

பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 30-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அத் தேர்தலுக்கான வார்டு இட ஒதுக்கீடு பட்டியலை பிப்ரவரி 20-ம் தேதிக்குள் அறிவித்து, பிப்ரவரி 22-ம் தேதி அந்தப் பட்டியலை மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைத்துவிட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் மாநகராட்சி தேர்தலை நடத்தும் சூழ்நிலையில் இப்போது மாநில அரசு இல்லை. எனவே, தேர்தலை சிறிது காலம் ஒத்திவைக்க அவகாசம் கோரியும் மே மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடித்துவிடுவதாகவும் கூறி சிறப்பு ரிட் அப்பீல் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசின் இந்த முடிவு இனியாவது தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த எதிர்க்கட்சிகளுக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காங்கிரஸ்

கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயர்கள் ரமேஷ், ராமச்சந்திரப்பா, ஹுச்சப்பா, சி.ஆர்.சிம்மா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் "கேவியட்' மனு ஒன்றை கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்திருந்தனர்.

அதுபோல் கேவியட் மனு ஒன்றை மாநில தேர்தல் ஆணையமும் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ளது. தேர்தலை ஒத்திவைக்க மாநில அரசு சிறப்பு

அப்பீல் மனு தாக்கல் செய்யும்பட்சத்தில் எங்களது கருத்தைக் கேட்காமல் எந்தவித உத்தரவையும் பிறப்பித்துவிடக் கூடாது என்பதை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவர கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சித் தேர்தலை ஒத்திவைக்க கால அவகாசம் கேட்டு மாநில அரசு சிறப்பு ரிட் அப்பீல் செய்யும்பட்சத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளவர்களிடமும், மாநில தேர்தல் ஆணையத்திடமும் கருத்துக்களை கேட்ட பிறகே மாநில அரசு மனு மீது உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும்.

இதற்கிடையே சிறப்பு ரிட் அப்பீல் மனுவை மாநில சட்டத்துறை தயாரித்துவிட்டது. அதில் உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் வகையில் பலமான

ஆதாரங்களை மாநில அரசு சேர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது. மாநகராட்சி தேர்தலை

ஒத்திவைக்க கால அவகாசம் கோருவது ஏன் என்பதற்கு பல காரணங்களை மாநில அரசு தயார் படுத்தி வைத்துள்ளது.

குறிப்பாக பிப்ரவரி 26-ம் தேதி மாநில சட்டப்பேரவை கூட்டம் துவக்கம், மார்ச் 5-ம் தேதி மாநில பட்ஜெட் தாக்கல், மார்ச் மாதம் 26-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுதல், மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பியூசி இறுதித் தேர்வு ஆகியவை நடைபெறுதல் ஆகிய காரணங்களால் தேர்தலை நடத்த அவகாசம் வேண்டும். மே மாதத்தில் கண்டிப்பாக மாநகராட்சி தேர்தலை அரசு நடத்தி முடிக்கும் என்று உறுதி அளித்து மனு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Last Updated on Wednesday, 17 February 2010 09:38
 


Page 663 of 841