Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: ரூ.66 கோடியில் பணிகள்

Print PDF

தினமணி 17.02.2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: ரூ.66 கோடியில் பணிகள்

கோவை, பிப்.16: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடையொட்டி கோவையில் ரூ.66.17 கோடியில் பணிகள் மேற்கொள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சியில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் மேயர் ஆர்.வெங்கடாசலம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா முன்னிலை வகித்தார்.

அரசு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் சாலைகளை புதுப்பித்தல், பள்ளிகளில் கழிவறைகளை அபிவிருத்தி செய்தல், செம்மொழி மாநாடு நடைபெறும் மாநாடு திடலை சுற்றிலும் தொடர் குடிநீர் விநியோகம் செய்தல், நவீன வசதியுடன் கூடிய நடமாடும் கழிவறைகள் அமைத்தல், தாற்காலிக துப்புரவாளர்கள் நியமித்தல், மாநகராட்சி திருமண மண்டபங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.

இதைதவிர மாநகராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.24.82 கோடியில் செயல்படுத்தப்படும் பணிகளுக்கும், தனியார் பங்களிப்புடன் ரூ.8 கோடியில் செயல்படுத்தப்படும் பூங்கா அமைக்கும் பணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் துணை மேயர் நா.கார்த்திக், எதிர்கட்சித் தலைவர் வெ..உதயக்குமார், ஆளும்கட்சித் தலைவர் ஆர்.எஸ்.திருமுகம், பிற கட்சி குழுத் தலைவர்கள் ராஜ்குமார் (அதிமுக), கே.புருசோத்தமன் (இந்திய கம்யூனிஸ்ட்), சி.பத்மநாபன் (மார்க்சிஸ்ட்), மண்டல தலைவர்கள் பைந்தமிழ் பாரி, வி.பி.செல்வராஜ், எஸ்.எம்.சாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 17 February 2010 09:11
 

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது.

Print PDF

தினமலர் 17.02.2010

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது.

விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி முருகன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள், இதனால் ஏற்படும் கொசு உற்பத்தி மற்றும் பாதிப்புகள், சகாதர பணியில் ஏற்படும் மந்தமான நிலை, வசூல் ஆகாத தண்ணீர் பணம் வசூலில் ஏற்படும் பிரச்சனைகள், இதில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காதது போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.மேலும் மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் விற்பனை செய்வதை தடைசெய்ய அமுல்படுத்த கோரியும், மீறி விற்பனை செய்வர்கள் மற்றும் பயன்படுத்துவோர்களுக்கு அபராதம் விதிக்கவும். இதுகுறித்து வரும் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நகராட்சி துணை தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.

 

பலமாடி 'பார்க்கிங் டிசைன்' தயார்:ரூ.9.2 கோடியில்

Print PDF

தினமலர் 17.02.2010

பலமாடி 'பார்க்கிங் டிசைன்' தயார்:ரூ.9.2 கோடியில் அமைகிறது

மதுரை : தற்போதுள்ள மதுரை சென்ட்ரல் மார்க்கெட் இடத்தில் 9.2 கோடி ரூபாயில் பலமாடி வாகன காப்பக வளாகத்திற் கான டிசைன் தயார் செய்யப்பட்டுள்ளது.மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலையும், மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி சுகாதார கேட்டையும் ஏற்படுத்தும் சென்ட்ரல் மார்க்கெட் விரைவில் மாட்டுத்தாவணிக்கு இடம் மாற உள்ளது. இந்த இடத்தில் கோயிலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்த வகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள் கிடப்பில் இருந்தது. இப்போது அதற்கு உயிர் வந்துள்ளது.சென்ட்ரல் மார்க்கெட் அமைந்துள்ள இடம் ஐந்து ஏக்கர் பரப்பளவுள்ளது. இதில் தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகளுடன் வாகன காப்பகம் அமைக்கப்படும். வாகனம் நிறுத்துமிடத்தின் பரப்பு, 90 ஆயிரம் சதுர அடி. இதில் ஒரே நேரத்தில் 150 கார்கள், 200 இரு சக்கர வாகனங்கள், 10 பஸ்களை நிறுத்தலாம்.வரவேற்பறை, கழிப்பறை, குடிநீர், வாகனங்கள் செல்லும் வழி போன்றவை அமைகின்றன. சுற்றுலாவாசிகள் மட்டுமல்லாது அப்பகுதியை சேர்ந்தவர்களும் வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம். இத்திட்டத்திற்கு மாநில அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது. தற்போது மத்திய சுற்றுலா துறையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. புராதன சின்னங்களை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ், நூறு சதவீத உதவியின் கீழ் இத்திட்டத்திற்கு, மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது.தற்போதுள்ள சென்ட்ரல் மார்க்கெட், மாட்டுத்தாவணிக்கு இடம் மாறிய பிறகு, இத்திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated on Wednesday, 17 February 2010 05:28
 


Page 664 of 841