Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

அரசு ஒதுக்கிய பணம் ரூ.2 லட்சம் விரயம் மணப்பாறையில் செயல்பாடின்றி முடங்கிய நாய்களுக்கான கு.க., அறுவை சிகிச்சை மையம்

Print PDF

தினமலர் 14.02.2010

அரசு ஒதுக்கிய பணம் ரூ.2 லட்சம் விரயம் மணப்பாறையில் செயல்பாடின்றி முடங்கிய நாய்களுக்கான கு.., அறுவை சிகிச்சை மையம்

மணப்பாறை: "மணப்பாறை நகராட்சியில் பெருகி வரும் நாய்த்தொல்லையை ஒழிக்க செயல்படாமல் உள்ள நாய் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையத்தை செயல்படுத்த வேண்டும்' என பொதுமக்கள் கோரிக்கை டுத்துள்ளனர்.
மணப்பாறை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் பெருகியு ள்ள நாய்களால் மக்கள் பாதித்த னர். வெறிநாய் தெருக்களில் அதிகம் நடமாடியதால் நடக்க, குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்ப பொதுமக்கள் பெரிதும் அச்சப்பட்டனர். தெருக்களில் கிடக்கும் உணவுப்பொருட்களுக்காக நாய்கள் சண்டையிடும் போது அவ்வழியே செல்பவர்களை பதம்பார்க் க தவறுவதில்லை. பெருகி வரும் நாய்தொல்லையிலிருந்து மக்களை காத்து, நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது. நகர்மன்ற காங்கிரஸ் கவுன்சிலர்கள் பிச்சை, சங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் சவுக்கத் அலி ஆகியோர் ஒவ்வொரு நகர்மன்ற கூட்டத்திலும் நாய்களால் ஏற்படும் பிரச்சினை குறித்து பேசி வந்தனர். நாய்களை கட்டுப்படுத்த குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய தமிழக அரசு முடிவு செய்து ஒரு நாய்க்கு 450 ரூபாய் வீதம் செலவு செய்தது. இத்திட்டத்தின் படி மணப்பாறை நகராட்சியும் செவலூர் ரோட்டில் மாமுண்டி ஆற்றங்கரையில் உள்ள பாலு வாட்டர் ஹவுஸ் கட்டிடத்தில் நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்து ஒருவாரம் அவைகளை பராமரிப்பதற்காக ஏற்பாடு சய்தது. அதற்காக இரண்டு லட்சம் ரூபாய் செலவில் உபகரணம் வாங்கப்பட்டன. நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய கால்நடை மருத்துவர் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டார்.

கடந்த ஓராண்டுக்கு முன் துவங்கப்பட்ட நாய் அறுவை சிகிச்சை திட்டம் சில நாட்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. அதில், நாற்பது நாய்களுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல நாய் அறுவை சிகிச்சை செய்யும் பணியை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. அறுவை சிகிச்சை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கட்டிடம் பராமரிப்பின்றி உள்ளது. கட்டிடம் பூட்டி வைக்கப்படாததால் உள்ளே உள்ள உபகரணங்கள் பாதுகாப்பின்றி உள்ளது. ஒதுக்குப்புறமாக உள்ள இக்கட்டிடத்தில் இரவு நேரங்களில் பாலியல் தொழில் களைகட்டி வருகிறது. நாய்களுக்கான அறுவை சிகிச்சை திட்டம் செயல்படாததால், நகரில் மீண்டும் நாய்கள் அதிகரித்துள்ளது.

இதை பிரதிபலிக்கும் விதமாக கடந்த ஜனவரி 12ம் தேதி நகராட்சி கூட்டத்திற்கு கவுன்சிலர் சவுக்கத் அலி, நாயுடன் வந்து ரபரப்பை ஏற்படுத்தினர். அப்போது பதிலளித்த அதிகாரிகள், ஒருமாதமாகியும் இதுவரை கிடப்பில் போடப்பட்ட நாய் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறையை மீண்டும் செயல்படுத்தவில்லை. மணப்பாறை நகராட்சியில் கிடப்பில் போடப்பட்ட நாய் அறுவை சிகிச்சை திட்டத்துக்காக வாங்கப்பட்ட உபகரணங்களுக்கான நிதி இரண்டு லட்சம் விரயமாக்கப்பட்டுள்ளது. நல்ல நோக்கத்துக்காக அரசு செலவு செய்யும் நிதி நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கால் அரசுக்கும், மக்களுக்கும் பயனில்லாமல் போனது. "நாய்த்தொல்லையிலிருந்து பொதுமக்களை காக்க மீண்டும் நாய் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்' என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தெருநாய்களை பிடிக்க டெண்டர்: கமிஷனர்

Print PDF

தினமலர் 14.02.2010

தெருநாய்களை பிடிக்க டெண்டர்: கமிஷனர்

மதுரை: மதுரை மாநகராட்சி பகுதிகளில் திரியும் தெருநாய்களை பிடித்து வனப்பகுதிகளுக்கு கொண்டு செல்ல டெண்டர் கோரப் பட்டுள்ளதாக, கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார். எஸ்.எஸ்.காலனி வித்யா மேல்நிலை பள்ளியில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை மேயர் தேன்மொழி துவக்கிவைத்தார். விழாவிற்கு கமிஷனர் எஸ்.செபாஸ்டின் முன்னிலை வகித்தார். சுகாதார குழு தலைவர் ராலியாபானு, உதவி நகர்நல அலுவலர் யசோதமணி, பி.ஆர்.., பாஸ்கரன் கலந்து கொண்டனர்.

 

கமிஷனர் கூறியதாவது: மதுரையை குப்பையில்லாத நகரமாக மாற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. நான்கு மாசி, வெளி வீதிகளில் பகல், இரவில் அதிகளவு பணியாளர்களை நியமித்து, குப்பைகள் அகற்றப்படுகின்றன. கொசுக்களை கட்டுப்படுத்த ஆட்டோ, வாகனங்கள் மூலம் வீரியமிக்க புகை மருந்து வார்டு வாரியாக அடிக்கப்படுகிறது. சாலை மற்றும் தெருவோரங்களில் தேங்கிய தண்ணீரை உடனுக்குடன் அகற்ற சுகாதார ஆய் வாளர் களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. தெருவில் திரியும் நாய்களை பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு செல்ல டெண்டர் விடப் பட்டுள்ளது. இரண்டு 24 மணி நேர மருத்துவமனைகள், 17 மகப்பேறு மருத்துவமனைகள் மூலம் மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வரும் முன் காப்போம் திட்டத்தின்கீழ் மூன்று லட்சம் பேர் பயனடைந்துள்ளனர், என்றார்.

 

தனலட்சுமி நகரில் ரூ.10 லட்சத்தில் பூங்கா துணை மேயர் கார்த்திக் தொடங்கி வைத்தார்

Print PDF

மாலை மலர் 12.02.2010

தனலட்சுமி நகரில் ரூ.10 லட்சத்தில் பூங்கா துணை மேயர் கார்த்திக் தொடங்கி வைத்தார்

கோவை, பிப். 12-

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 10-வது வார்டு தனலட்சுமி நகரில் ரூ.10 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்கான பணி இன்று தொடங்கியது.

இதனை துணை மேயர் கார்த்திக் தொடங்கி வைத்தார். கவுன்சிலர் தன்ராஜ் முன் னிலை வகித்தார். உதவி பொறியாளர் கலாவதி, குடியிருப்போர் நல சங்க தலைவர்கள் பரமசிவம், பிரகாசம், ஸ்ரீராம், ராமு, மணி, சாமிநாதன், வேணுகோபால், பழனிச்சாமி, ரங்கநாயகி, கொடுமுடி ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.

இதேபோல் 6-வது வார்டு சிங்கை நகரில் ரூ.25 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்படுகிறது. இந்த பணியையும் துணை மேயர் கார்த்திக் தொடங்கி வைத்தார். கிழக்கு மண்டல தலைவர் எஸ்.எம்.சாமி முன்னிலை வகித்தார்.

உதவி நிர்வாக பொறி யாளர் பார்வதி, நண்பர்கள் நல சங்க தலைவர்கள் சபாபதி, சுப்பிரமணியம், இனமுருகு, நிஜாம், வட்ட செயலாளர் சிங்கை ராமு, வேலுமணி, இளங்கோவன், நடராஜ், நித்யானந்தம், சுந்தர்ராஜ், ஆறுமுகம், கோவிந்தராஜ், சரவணன், கே.பி.சுந்தர்ராஜ் கலந்து கொண்டனர்.

 


Page 667 of 841