Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சென்னையில் பிறக்கும் குழந்தைகள் பெயரில் வீடு தோறும் மரக்கன்றுகள்: மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

Print PDF

மாலை மலர் 12.02.2010

சென்னையில் பிறக்கும் குழந்தைகள் பெயரில் வீடு தோறும் மரக்கன்றுகள்: மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னையில் பிறக்கும்      குழந்தைகள் பெயரில்      வீடு தோறும் மரக்கன்றுகள்:       மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் சென்னை, பிப். 12-

சென்னை நகரை பசுமையாக்க மரம் நடும் திட்டத்தை புதிய முறையில் மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது. பிறக்கும் குழந்தைகள் பெயரில் ஒவ்வொருவரும் மரம் நடும் இந்த புதிய திட்டத்தை கடந்த செப்டம்பர் 15-ந் தேதி முதல்- அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்கீழ் கடந்த 3 மாதங்களில் சென்னையில் பிறந்த 41 ஆயிரத்து 471 குழந்தைகள் பெயரில் மரக் கன்றுகள் நடும் விழா ராஜா அண்ணாமலைபுரத்தில் இன்று நடந்தது. அங்குள்ள விளையாட்டு திடலில் 20 குழந்தைகள் பெயரில் மரக் கன்றுகளை மேயர் மா.சுப்பிரமணியன் நட்டார்.

ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரிடமும் ஒரு மரக்கன்று மற்றும் அந்த குழந்தையின் பெயர் பொறித்த வாழ்த்து சான்றிதழ் ஆகியவை வாங்கப்பட்டன. மரக்கன்றை பாதுகாப்பதற்கான இரும்பு வேலியும் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

பிறந்த குழந்தைகள் பெயரில் மரக்கன்றுகள் நடும் திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் ஜனவரி 31-ந்தேதி வரை 41 ஆயிரத்து 471 குழந்தைகள் பிறந் துள்ளன. இந்த குழந்தைகள் பெயரில் மரக்கன்றுகள் இன்று நடப்படுகிறது.

இனிமேல் மாதந்தோறும் ஒவ்வொரு வட்டத்திலும் கவுன்சிலர்கள் தலைமையில் அந்த பகுதியில் பிறக்கும் குழந்தைகள் பெயரில் மரக்கன்றுகள் நடப்படும். மாநகராட்சியின் 200-க்கும் மேற்பட்ட விளையாட்டு திடல்கள், 3,500 கட்டிடங்கள், 1,500 பூங்காக்களில் மரங்கள் நடலாம். அவரவர் வீடுகள் முன்பு இடம் இருந்தால் மரக்கன்றுகள் நடலாம்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் நட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி யவர் முதல்- அமைச்சர் கலைஞர். அவர் தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து மரம் நட்டு தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

மரத்தை நாம் வளர்த்தால், மரம் நம்மை வளர்க்கும் என்பது கலைஞரின் பொன் மொழி. அந்த வாசகம் பொறிக்கப்பட்ட வாழ்த்து சான்றிதழ் மாநகராட்சி சார் பில் வழங்கப்படும். அதில் குழந்தையின் பெயர் மற்றும் பெற்றோரின் பெயரும் இடம் பெற்று இருக்கும்.

இன்று 41 ஆயிரத்து 471 மரங்கள் நடுகிறோம். சென்னையில் ஆண்டுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ஒரு மரம் நட்டால் உலகிலேயே மரங்கள் நிறைந்த மாநகரமாக சென்னை மாறும்.

முதல் -அமைச்சர் கலைஞர், துணை முதல்- அமைச்சர் மு..ஸ்டா லின் ஆகியோரின் வழிகாட்டு தல்படி பல நல்ல திட்டங்களை மாநகராட்சி நிறைவேற்றி வருகிறது.

எல்லா திட்டங்களையும் விட மனநிறைவையும் மகிழ்ச்சியையும் இந்த திட்டம் தந்துள்ளது. பொருட்களாக தருவதெல்லாம் விரைவில் மறந்து விடும். ஆனால் இன்று நடப்படும் மரங்கள் எதிர்காலத்தில் இந்த பூமியை பாதுகாக்கும்.

இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

நிகழ்ச்சியில் கமிஷனர் ராஜேஷ் லக்கானி, துணை மேயர் சத்யபாமா, எஸ்.வி.சேகர் எம்.எல்.., ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதைரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

முஸ்லிம்கள் தொழுகை நடத்த பேரூராட்சி இட ஒதுக்கீடு

Print PDF

தினமணி 12.02.2010

முஸ்லிம்கள் தொழுகை நடத்த பேரூராட்சி இட ஒதுக்கீடு

உளுந்தூர்பேட்டை
, பிப். 11: உளுந்தூர்பேட்டையிலுள்ள முஸ்லிம்கள் பண்டிகைக் காலங்களில் தொழுகை நடத்துவதற்கு அவர்களின் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கீடு செய்து கொடுத்து, அதற்கான உத்தரவுக் கடிதத்தை பேரூராட்சித் தலைவர் வெ.இராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை வழங்கினார்.

÷உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 3 ஜமாத்துகள் உள்ளன. இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பண்டிகைக் காலங்களில் தொழுகை நடத்துவதற்கு ஒரு பொது இடம் ஒதுக்கித் தரக்கோரி 7-வது வார்டு கவுன்சிலர் ப.காதர்சேட்டுவிடம் கோரிக்கை வைத்தனர். ÷

அவர் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டத்தின்போது முஸ்லிம்கள் பண்டிகைக் காலங்களில் தொழுகை நடத்துவதற்கு ஒரு பொது இடம் ஒதுக்கித் தரக்கோரி தலைவர் வெ.இராதாகிருஷ்ணனிடம் மனு கொடுத்தார்.

÷அதன்பேரில் பேரூராட்சி நிர்வாகம் பரிசீலனை செய்து அவர்கள் தொழுகை செய்வதற்கு ஊ.கீரனூர் தட்டான்குளம் அருகில் பஞ்சாயத்துக்கு சொந்தமான 66.5 செண்ட் இடம் ஒதுக்கீடு செய்து கொடுத்து பண்டிகைக் காலங்களில் மட்டும் தொழுகை நடத்துவதற்கான உத்தரவுக் கடித்தத்தை பேரூராட்சி தலைவர் வெ.இராதாகிருஷ்ணன், உளுந்தூர்பேட்டை ஜமாத் நிர்வாகிகளிடம் வழங்கினர்.

Last Updated on Friday, 12 February 2010 11:29
 

மார்ச் 30-க்குள் பெங்களூர் மாநகராட்சிக்கு தேர்தல்: உயர் நீதிமன்றம்

Print PDF

தினமணி 12.02.2010

மார்ச் 30-க்குள் பெங்களூர் மாநகராட்சிக்கு தேர்தல்: உயர் நீதிமன்றம்

பெங்களூர், பிப்.11: பெருநகர பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கு மார்ச் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

÷முன்னதாக தேர்தலை நடத்த 6 மாத காலம் அவகாசம் கோரிய அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

÷
பெங்களூர் மாநகராட்சிக்கு பிப்ரவரி 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படுமென மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் வார்டு வாரியாக இட ஒதுக்கீடு செய்து மாநகராட்சிக்குத் தேர்தல் நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, ஏற்கெனவே அறிவித்த தேர்தல் கால அட்டவணையை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் திடீரென ரத்து செய்தது.

÷இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயர்கள் பி.ஆர்.ரமேஷ், ராமச்சந்திரப்பா, உச்சப்பா, சிம்மா உள்ளிட்டோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த அரசு, தேர்தலை நடத்த 6 மாத காலம் அவகாசம் வேண்டுமென கேட்டிருந்தது.

÷தேர்வுகள், கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகியவை அடுத்தடுத்து நடக்க உள்ளதால், அந்தப் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவார்கள் என்பதால் ஜூன் வரை தேர்தலை நடத்த இயலாது என மாநிலத் தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்திருந்தது. இவ்வாறு பல்வேறு காரணங்களைக் கூறி தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பதாக அரசை, நீதிபதிகள் இருமுறை கடிந்துகொண்டனர்.

÷இந்நிலையில் இந்த வழக்கில் வியாழக்கிழமை இறுதித் தீர்ப்புக் கூறப்பட்டது.

÷நீதிபதிகள் வி. கோபால கெüடா மற்றும் ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. அரசுத் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் நடராஜ் ஆஜராகி வாதாடினார். அப்போது, மாநகராட்சித் தேர்தலை நடத்த 6 மாத கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார்.

÷ஆனால் அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் கூறிய தீர்ப்பின் விவரம்: ÷பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கு மூன்றாண்டுகளாகத் தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பான வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தபோது ஏற்கெனவே அரசுக்கு 6 மாதம் கால அவகாசம் வழங்கியது நீதிமன்றம். ஆனால் திரும்பத்திரும்ப பல்வேறு காரணங்களைக் கூறி தேர்தலை நடத்தாமல் ஒத்தி வைத்துக்கொண்டே செல்வதை இனிமேலும் நீதிமன்றம் ஏற்காது.

÷
எனவே, அரசு ஏற்கெனவே தயார் செய்த சாதி வாரியான இட ஒதுக்கீட்டு பட்டியலில் திருத்தங்கள் செய்து வரும் பிப்ரவரி 20-ம் தேதிக்குள் புதிய பட்டியலை தயார் செய்து மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். அதன்படி தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த வேண்டும்.

÷அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22-ம் தேதிக்குள் தேர்தல் கால அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். மார்ச் 30-ம் தேதிக்குள் மாநகராட்சிக்குத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.

÷மார்ச் 30-ம் தேதிக்கு மேல் ஒரு நாள் கூட தாமதமாக தேர்தலை நடத்த முயற்சிக்கக்கூடாது. தேர்தலை நடத்த இயலவில்லை என மீண்டும் பல நொண்டி சாக்கு போக்குகளை நீதிமன்றத்திடம் தெரிவிக்கக்கூடாது. தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையத்திற்கு அரசு செய்துதர வேண்டும் என்று நீதிபதிகள் கண்டிப்புடன் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர். பெங்களூர் மாநகராட்சி மன்றத்தின் பதவிக்காலம் 2006-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. அதன்பிறகு தேர்தல் நடத்தப்படவில்லை. இப்போதுதான் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் நடைபெறவுள்ளது.

Last Updated on Friday, 12 February 2010 10:50
 


Page 668 of 841