Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மோட்டார் வைத்து உறிஞ்சியதால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினமணி 12.02.2010

மோட்டார் வைத்து உறிஞ்சியதால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர்
, பிப்.11: குழாயில் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சியதை அடுத்து திருப்பூரில் ஒரு வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

÷திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் குடிநீர்க் குழாயில் மின்மோட்டார் வைத்து உறிஞ்சப் படுவதால் பெரும்பாலான இடங்களில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதாக புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

÷
அப்போது, திருப்பூர், ஊத்துக்குளி சாலை, காயத்ரி நகர், 2-வது வீதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் வீட்டில் குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த மின்மோட்டாரை பறிமுதல் செய்த அதிகாரிகள் குடிநீர் இணைப்பை யும் துண்டித்தனர்.

÷பொதுமக்கள் இதுபோல் குடிநீர்க் குழாயில் மோட்டார் வைத்து உறிஞ்சுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated on Friday, 12 February 2010 10:28
 

குடிநீர் மோட்டார் பறிமுதல்

Print PDF

தினமலர் 12.02.2010

குடிநீர் மோட்டார் பறிமுதல்

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், சட்டத்துக்கு புறம்பாக மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. காயத்ரி நகர் இரண்டாவது வீதியில் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தவரின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மோட்டார் பறிமுதல் செய்யப் பட்டது.ஊத்துக்குளி ரோடு, காயத்ரி நகர் இரண்டாவது வீதியில் வசிக்கும் பாலசுப்ரமணியம், தனது வீட்டு குடிநீர் இணைப்பில் நேரடியாக மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சி எடுத்தார்; மாநகராட்சி ஊழியர்கள், அங்கு சென்று மோட்டாரை பறிமுதல் செய்து, வீட்டு குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.வீட்டுக்குடிநீர் குழாய் இணைப்பில் நேரடியாக மோட்டார் பொருத்தி, குடிநீரை உறிஞ்சினால், மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு, இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது

Last Updated on Friday, 12 February 2010 07:51
 

செங்கல்பட்டு நகராட்சியில் ஓராண்டிற்கு பின் வளர்ச்சிப் பணிகள் துவக்கம்

Print PDF

தினமலர் 12.02.2010

செங்கல்பட்டு நகராட்சியில் ஓராண்டிற்கு பின் வளர்ச்சிப் பணிகள் துவக்கம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு நகராட்சியில், கடந்த ஓராண்டிற்கு பின் மீண்டும் வளர்ச்சிப் பணிகள் துவங்கியது.செங்கல்பட்டு நகராட்சித் தலைவராக அ.தி.மு..,வைச் சேர்ந்த ஜெயா உள்ளார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சித் தலைவர் பதவி ஆதிதிராவிடர் பெண் பிரிவிற்கு ஒதுக்கப்பட்டது. மொத்தமுள்ள 33 வார்டுகளில் தி.மு.., கூட்டணி பெரும்பான்மையான இடங்களைப் பிடித்தும் ஜெயா தலைவர் பதவியை கைப்பற்றினார். மூன்று ஆண்டுகளாக மன்றக் கூட்டம் சுமூகமாக நடந்து வந்தது.இந்நிலையில், தலைவர் ஜெயா கிறிஸ்தவ மதத் தைச் சேர்ந்தவர், அவரது பெயர் அலோடின்மேரி என ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் சுப்பிரமணி அரசுக்கு புகார் அனுப்பினார்.அவரை பின்பற்றி தி.மு.., கவுன்சிலர்களும் புகார் அனுப்பினர்.

புகார் அனுப்பியபின் மன்றக் கூட்டங்களை தி.மு..,வைச் சேர்ந்த 18 கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.இதனால், கடந்தாண்டு மார்ச் மாதத்திற்கு பின் எவ்வித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை.நகராட்சி நிர்வாகம் முடங்கியது. அரசு மன்றத்தை ஏன் கலைக்கக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப் பியது.பதவி பறிபோய்விடுமோ என பயந்த கவுன்சிலர்கள் கூட்டம் நடத்த ஒத்துழைப்பு கொடுத்தனர்.கடந்த மாதம் கூட்டம் நடந்த போது, கடந்த 11 மாதங்களாக நிலுவையிலிருந்த பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, கிடப்பிலிருந்த பணிகளுக்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன. கடந்தாண்டு மழையின்போது ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் செய்ய நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட 22 லட்ச ரூபாயில் முதல் கட்டமாக ஜே.சி.கே., குறுக்கு தெருவில் தார்ச் சாலை அமைக்கப்பட்டது. தற்போது பழுதடைந்த வரதனார் தெருவில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சாலை அமைக்கும் பணியை நகராட்சி கமிஷனர் திருநாவுக்கரசு, பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

Last Updated on Friday, 12 February 2010 07:19
 


Page 669 of 841