Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கோடைகாலம் வரும் பின்னே... பிளாஸ்டிக் குடம் வரும் முன்னே!

Print PDF

தினமலர் 09.02.2010

கோடைகாலம் வரும் பின்னே... பிளாஸ்டிக் குடம் வரும் முன்னே!

ஈரோடு: கோடை காலம் துவங்குவதற்கு முன்பே ஈரோட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பிளாஸ்டிக் குடம் விற்பனை சூடுபிடித்துள்ளது. கோடையின் போது, நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை ஈடு செய்யும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி, சிமென்ட் தொட்டி மற்றும் பெரிய டிரம்களில் குடிநீரை நிரப்பி வைப்பர். வசதியில்லாதவர்கள் காலி பிளாஸ்டிக் குடங்கள், வாளிகளில் தண்ணீர் பிடித்து வைப்பர். குடம் விற்பனையும் விறுவிறுப்பாக நடக்கும். நடப்பாண்டு ஈரோட்டில் தற்போதே பிளாஸ்டிக் குடம் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால், ஒரு வாரமாக ஈரோட்டில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்ற வாரம் முன் குடிநீர் ஆதாரத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து 2,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால், குடிநீர் விநியோகம் செய்ய திணறிவந்த உள்ளாட்சி அமைப்புகள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளன. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் நீர் திறந்துவிடப்பட்டாலும், உள்ளாட்சி அமைப்புகள் வினியோகம் செய்யும் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதுடன், கலர் கலராக குடிநீர் உள்ளது. சமீபத்தில் ஈரோடு மாநகராட்சி சார்பில் வினியோகிக்கப்பட்ட குடிநீர் கழிவுநீர் கலந்து வந்ததாக கவுன்சிலர் ராதாமணி பாரதி சென்ற வாரம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். குறிப்பாக கருங்கல்பாளையம் பகுதியில் நான்கு நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

கோடைக்கு முன்னரே ஈரோட்டில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், தண்ணீரை சேமித்து வைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், பிளாஸ்டிக் குடம் விற்பனை அதிகரித்துள்ளது. தவிர, தண்ணீர் டேங்குகள், தொட்டிகள் விற்பனை சுறுசுறுப்படைந்துள்ளது. பிளாஸ்டிக் குடங்கள் 40 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையான விலையில் விற்கப்படுகின்றன.

Last Updated on Tuesday, 09 February 2010 10:30
 

மாநகராட்சி துணை கமிஷனர் இடமாற்றம்

Print PDF

தினமலர் 09.02.2010

மாநகராட்சி துணை கமிஷனர் இடமாற்றம்

மதுரை:மதுரை மாநகராட்சி துணை கமிஷனராக இருந்தவர் சிவராசு. மூன்று மாதங்கள் இப்பதவியில் இருந்த, மாநகராட்சி வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். ரிங் ரோடு டோல்கேட்டுகளில் நடந்த முறைகேடுகளை தடுத்து, கண்காணிப்பை பலப்படுத்தினார்.இவர் தற்போது காஞ்சிபுரம் மாவட்ட டி.ஆர்..,வாக மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவருக்குப் பதில் துணை கமிஷனர் இன்னமும் நியமிக்கப்படவில்லை.

Last Updated on Tuesday, 09 February 2010 10:27
 

80 மாநகராட்சி கடைகள் ஏலம்: வருவாயை பெருக்க நடவடிக்கை

Print PDF

தினமலர் 09.02.2010

80 மாநகராட்சி கடைகள் ஏலம்: வருவாயை பெருக்க நடவடிக்கை

மதுரை:பல ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த 80 கடைகளை ஏலம் விட, மதுரை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட், மேலவெளி வீதி, மங்கம்மாள் சத்திரம், தமிழ்ச்சங்கம் ரோடு, கான்சா மேட்டு தெரு, ஜான்சிராணி பூங்கா, நன்மை

தருவார் கோயில் தெரு, எழுத்தாணிக்காரத் தெரு, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில், முன் கட்டப்பட்ட 80 மாநகராட்சி கடைகள் உள்ளன. இவற்றை நடத்தியவர்களில் பலர் எங்கு இருக்கின்றனர் என தெரியவில்லை. பல கடைகளுக்கு பல ஆண்டுகளாக வாடகை வரவில்லை. இக்கடைகளை அருகில் இருந்த மற்ற கடைக்காரர்கள் பயன்படுத்தினர். எனவே, மாநகராட்சி வருவாயை பெருக்கும் பொருட்டு, இக்கடைகளை மீண்டும் ஏலத்திற்கு விட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு கடைக்கும் அளவைப் பொறுத்து, ஒரு லட்சம் ரூபாய் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். இதற்கு கடைசி நாள் பிப்.23. மறுநாள் டெண்டர் திறக்கப்படும். அதே நாளில் ஏலமும் நடத்தப்படும். டெண்டருக்கு விண்ணப்பித்தவர்களே ஏலத்திலும் கலந்துகொள்ள வேண்டும். டெண்டர் அல்லது ஏலத்தொகை, இதில் எது அதிகமோ, அந்த தொகையை குறிப்பிட்டவருக்கு கடை வழங்கப்படும். விண்ணப்பங்கள், மாநகராட்சி வருவாய் பிரிவில் வழங்கப்படுகின்றன.

Last Updated on Tuesday, 09 February 2010 10:25
 


Page 671 of 841