Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சி நெறிமுறைகளை கவுன்சிலர்கள் மீறக்கூடாது : மேயர் 'அட்வைஸ்'

Print PDF

தினமலர் 09.02.2010

மாநகராட்சி நெறிமுறைகளை கவுன்சிலர்கள் மீறக்கூடாது : மேயர் 'அட்வைஸ்'

கோவை : ""கவுன்சிலர்கள், மாநகராட்சி நெறிமுறைகளை மீறி செயல்படக்கூடாது,'' என்று மேயர் வெங்கடாசலம் அறிவுறுத்தியுள்ளார்.

அவர் நேற்று அளித்த பேட்டி: நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டுகளில் மாநகராட்சி சார்பில் திறக்கப்படும் கட்டடங்கள், பூங்காக்கள், மேல்நிலை தொட்டிகளுக்கு "உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நினைவு -2010' என்று பெயர் வைப்பதற்கான தீர்மானம், மாநகராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், 64 வது வார்டு கவுன்சிலர் மெகர்பான், அவரது வார்டில், கே.கே.புதூர், சின்னசுப்பண்ணன் தெருவில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள பூங்காவை தன்னிச்சையாக திறந்து வைத்துள்ளார். இது மாநகராட்சி விதிமுறைகள், நெறிமுறைகளுக்கு முரணானது. இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. கவுன்சிலர்கள், மாநகராட்சி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சி விதிமுறைகளின்படி மேயர், துணை மேயர், கமிஷனர், துணைக்கமிஷனர் ஆகியோரை கொண்டே திறப்பு விழா நடத்தப்பட வேண்டும்; தன்னிச்சையாக கவுன்சிலர்கள் நடத்தக்கூடாது. கவுன்சிலர் மெகர்பான், அதிகாரிகளை அழைத்து முறைப்படி திறப்பு விழா நடத்தாததால், மாநகராட்சி விதிமுறைகளின்படி அதிகாரிகளுடன் சென்று பூங்காவை திறந்து வைத்தோம்; இதில் கவுன்சிலர் பங்கேற்கவில்லை. இவ்வாறு, வெங்கடாசலம் தெரிவித்தார். பேட்டியின் போது, துணை மேயர் கார்த்திக் உடனிருந்தார்.

Last Updated on Tuesday, 09 February 2010 10:09
 

நகர ஊரமைப்பு துறை பிரச்னையா? இன்று நேரில் புகார் தெரிவிக்கலாம்

Print PDF

தினமலர் 09.02.2010

நகர ஊரமைப்பு துறை பிரச்னையா? இன்று நேரில் புகார் தெரிவிக்கலாம்

கோவை : லே-அவுட், ரிசர்வ் சைட், கட்டட அனுமதி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து நகர ஊரமைப்புத்துறை இயக் குனரிடம் இன்று புகார் தெரிவிக்கலாம்.கோவை உள்ளூர் திட்டக்குழுமத்தில் கோவை மாநகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இப்பகுதிகளில் புதிய லே-அவுட், வணிக கட்டடம் போன்றவற்றுக்கு இந்த குழுமமே அனுமதி தர வேண்டும்.

மாஸ்டர் பிளான் தயாரிப்பு, திட் டச்சாலை அமைப்பது, கட்டமைப்பு கட்டணம் வசூலிப்பது, அனுமதியற்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு கடமைகளும், இந்த உள்ளூர் திட்டக்குழுமத்துக்கு உள்ளது. ஆனால், இந்த குழுமம் ஆள் பற்றாக்குறையால் திண்டாடி வருகிறது.இதன் காரணமாக, கட்டடங்கள் மற்றும் நிலங்களை ஆய்வு செய்து அனுமதி வழங்குவதில் பெரும் காலதாமதம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, கட்டடம் மற்றும் லே-அவுட் அனுமதி வழங்குவதை, ஒற்றைச் சாளர முறையாக மாற்ற வேண்டுமென்றும் பல தரப்பில் இருந்தும் அரசுக்கு கோரிக்கை சென்றுள்ளது.இதுபோன்ற கோரிக்கைகளைக் கேட்க, நகர ஊரமைப்புத்துறை இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால், கோவையில் இன்று மக்களை நேரில் சந்திக்கிறார். கோவை சிவானந்தா காலனி மாநகராட்சி வணிக வளாகத்திலுள்ள நகர ஊரமைப்புத்துறை அலுவலகத்தில் இன்று காலை 11.00 மணியளவில் இயக்குனரைச் சந்தித்து பொது மக்கள் குறைகளைத் தெரிவிக்கலாம

Last Updated on Tuesday, 09 February 2010 10:03
 

மாநகராட்சித் தேர்தல்: 6 மாதகால அவகாசம் கோரி உயர்நீதிமன்றத்தில் அரசு மனு

Print PDF

தினமணி 09.02.2010

மாநகராட்சித் தேர்தல்: 6 மாதகால அவகாசம் கோரி உயர்நீதிமன்றத்தில் அரசு மனு

பெங்களூர், பிப்.8: பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலை நடத்த 6 மாதகால அவகாசம் கோரி உயர்நீதிமன்றத்தில் அரசு மனு தாக்கல் செய்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மாநகராட்சிக்கு பிப்ரவரி 21-ம் தேதி தேர்தல் நடக்குமென கடந்த டிசம்பரில் மாநிலத் தேர்தல் ஆணையம் கால அட்டவணையை வெளியிட்டது. இந்நிலையில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக இடஒதுக்கீடு செய்தது தவறு; வார்டு வாரியாக இடஒதுக்கீடு செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றம் கூறிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை அடுத்து ஜனவரி 29-ம் தேதி மாநகராட்சித் தேர்தலை திடீரென ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி முன்னாள் மேயர்கள் பி.ஆர். ரமேஷ், ராமச்சந்திரப்பா உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக உயர்நீதிமன்றத்தை மாநில அரசோ, தேர்தல் ஆணையமோ அணுகாமலேயே ஒருதலைப்பட்சமாக தேர்தலை திடீரென ரத்து செய்துள்ளது சரியல்ல என்று அவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவில்கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரிக்க 2 டிவிஷன் பெஞ்ச்கள் மறுத்தது. தலைமை நீதிபதி பி.டி. தினகரன் தலையிட்டதன்பேரில் நீதிபதிகள் மஞ்சுளா செல்லூர், அப்துல் நசீர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் கடந்த 5-ம் தேதி அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, தேர்தல் ஆணைய தரப்பில் ஆஜரான பனீந்திராவும், அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் அசோக் ஹாரனஹள்ளியும் தேர்தலை ரத்து செய்ததற்கான காரணம் குறித்து 8-ம் தேதி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்து விளக்கம் அளிப்பதாக தெரிவித்தனர். இதை அடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.எம். நாகராஜ், பொதுநல மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீட்டை மாற்றியமைக்க அதிக காலம் தேவைப்படுவதாக தேர்தல் ஆணையத்திடம் அரசு தெரிவித்ததால்தான் தேர்தலை மாநிலத் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. கடந்த மாதம் 28-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தலை நடத்த கால அவகாசம் தேவைப்பட்டால் கர்நாடக உயர்நீதிமன்றத்தை தேர்தல் ஆணையமும் அரசும் அணுகலாமென நீதிமன்றம் முழு சுதந்திரம் வழங்கியது.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய யோசனை குறித்து அரசு தற்போது ஆலோசனை செய்து வருகிறது. ஒரு தலைப்பட்சமாக அரசும், தேர்தல் ஆணையமும் முடிவெடுக்கவில்லை. எனவே, முன்னாள் மேயர்கள் தாக்கல் செய்துள்ள இந்த பொது நல வழக்கு சரியல்ல என்று வாதாடினார். ஆனாலும் தேர்தலை ரத்து செய்ததற்கான காரணத்தை அரசு தெரிவிக்காததால் வழக்கறிஞரை நீதிபதிகள் கடிந்துகொண்டனர்.ஜ்ஜ் இதைத் தொடர்ந்து பிற்பகலுக்கு மேல் அரசுத் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. வரும் மாதங்களில் பியூசி, எஸ்எஸ்எல்சி தேர்வுகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க உள்ளதால் மாநகராட்சித் தேர்தலை நடத்த இயலாது. எனவே, தேர்தலை நடத்த 6 மாத கால அவகாசம் தேவைப்படுகிறது என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதை அடுத்து மேற்கொண்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தனர்.

Last Updated on Tuesday, 09 February 2010 07:48
 


Page 672 of 841