Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சி மரத்தடியில் படித்து அரசு வேலை பெற்ற இளைஞர்கள்

Print PDF

தினமலர் 05.02.2010

மாநகராட்சி மரத்தடியில் படித்து அரசு வேலை பெற்ற இளைஞர்கள்

மதுரை:மதுரை மாநகராட்சி மத்திய அலுவலக வளாகத்தில், மரத்தடியில் படித்து சாதித்த 38 பேர் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.நகரின் மையத்தில் பரந்து விரிந்து அமைந்துள்ள மாநகராட்சி மத்திய அலுவலக வளாகத்தில் ஏராளமான மரங்கள் இருக்கின்றன. அலுவலகத்தின் பில்லர் ஹால், டூ வீலர் ஸ்டாண்ட், ஈகோ பார்க் போன்ற இடங்களில், போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை பார்க்கலாம்.

வெளி உலக சந்தடியின்றி, நிசப்தமாக இருக்கும் இந்த சூழ்நிலை, புத்தகமும் கையுமாக இருக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.சமீபத்தில் நடந்த டி.என். பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்காக பலர் இங்கு வந்து படித்தனர். இவர்களுக்காகவே மாநகராட்சி நிர்வாகமும், இரவு நீண்ட நேரத்திற்கு மின் விளக்குகளை எரிய விட்டது.

இவர்களில் 38 பேர், உள்ளூர் நிதி தணிக்கை, கூட்டுறவு மூத்த ஆய்வாளர், கருவூல கணக்குப் பிரிவு, வருவாய் துறை, சென்னை தலைமை செயலகம் ஆகிய துறைகளுக்கு தேர்வாகி உள்ளனர். இவர்களை மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன் பாராட்டினர்.

Last Updated on Friday, 05 February 2010 07:01
 

மக்கள் குறைதீர் கூட்டம் நலத்திட்ட உதவி வழங்கல்

Print PDF

தினமலர் 05.02.2010

மக்கள் குறைதீர் கூட்டம் நலத்திட்ட உதவி வழங்கல்

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் முகாமில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட கலெக்டர் சகாயம் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்டவை கோரி 300 மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார். தொடர்ந்து தமிழ்நாடு விவசாய நலவாரியம் சார்பில் இயற்கை மரணமடைந்த 4 பேருக்கு தலா 12,500 ரூபாய், இரண்டு பேருக்கு திருமண உதவித்தொகை, 20 பேருக்கு முதியோர் உதவித்தொகை என 26 பேருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நகராட்சி சேர்மன் ராமதாஸ், துணை சேர்மன் ரங்கசாமி, தாசில்தார் கந்தசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் திருஞானம், வட்ட வழங்கல் அலுவலர் ராஜா, ஆர்.., பாலசந்திரன், கவுன்சிலர்கள் பாலு, சீனிவாசன், சீரங்கன் உட்பட பலர் பங்கேற்றனர

Last Updated on Friday, 05 February 2010 07:00
 

மாநகராட்சியாக்க நகராட்சியில் தீர்மானம்

Print PDF

தினமலர் 05.02.2010

மாநகராட்சியாக்க நகராட்சியில் தீர்மானம்

திருவள்ளூர்:"பலரது உழைப்பும், முயற்சியும் இருந்தால் தான் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும்' என திருவள்ளூர் தொகுதி தி.மு.. எம்.எல்.., சிவாஜி தெரிவித்தார்.திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்றக் கூட்ட அரங்கம் 20 லட்ச ரூபாய் செலவில் குளிர்சாதன வசதி, புதிய இருக்கைகள், அழகான மண்டபம் என புது பொலிவுடன் சீரமைக்கப் பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவில் தொகுதி எம்.எல்.., ..பி.,சிவாஜி கலந்து கொண்டு புதிய அரங்கை திறந்து வைத்தார்.அவர் பேசுகையில்,"நகராட்சி உறுப்பினர்கள் இங்கு அமர்ந்து சிறப்பாக செயல் பட நல்ல சூழ்நிலை அமைய வேண் டும்.இப்போது இங்கு சிறந்த சூழல் உருவாக்கப் பட்டுள்ளது. அதன் மூலம் சிறப்பாக மக்கள் தொண் டாற்ற முடியும். பலரது உழைப்பும், முயற்சியும் இருந்தால் தான் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும்' என்றார்.

விழாவில், நகராட்சித் தலைவர் பொன்.பாண்டியன், திருவள்ளூர் ஊராட்சித் தலைவர் வி.எஸ். சண்முகம், முன்னாள் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவிற்கு பின் நடந்த முதல் நகர்மன்றக் கூட்டத்தில், "திருவள்ளூர் நகராட்சியைச் சுற்றி உள்ள பிற நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து திருவள்ளூர் மாநகராட்சி உருவாக்கப்பட வேண்டும்.

நகரில் பிளாஸ்டிக் கப், பை ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து பேப்பர் கப், பை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என இரு தீர்மானங்கள் நிறைவேறியது.

Last Updated on Friday, 05 February 2010 06:53
 


Page 676 of 841