Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

குடியாத்தம் நகராட்சியில் புதிய சேர்மன் பதவியேற்பு

Print PDF

தினமலர் 05.02.2010

குடியாத்தம் நகராட்சியில் புதிய சேர்மன் பதவியேற்பு

குடியாத்தம்: குடியாத்தம் நகராட்சி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஸ்கர் பதவியேற்றுக் கொண்டார். குடியாத்தம் நகரமன்ற தலைவர் தேர்தல் கடந்த 29ம்தேதி நடந்தது. இதில் அதிமுக பாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான பதவியேற்பு விழா நேற்று காலை நகராட்சி கூட்ட அரங்கத்தில் நடந்தது.

கமிஷனர் சுப்பிரமணியன் தலைமை வகித்து, பாஸ்கருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். உதவியாளர் சூரியபிரகாஷ் வரவேற்றார். இதில் வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் வீரமணி, நகர செயலாளர் பழனி, ஒன்றிய செயலாளர் கோதண்டன், கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராஜேந்திரன், நகராட்சி வக்கீல் பூபதி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ராமு, முன்னாள் எம்எல்ஏ., சூரியகலா, மதிமுக மாவட்ட செயலாளர் பன்னீர் உட்பட கவுன்சிலர்கள், அதிமுக நிர் வாகிகள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர

Last Updated on Friday, 05 February 2010 06:50
 

பேனர்களை வைக்க கட்டுப்பாடு: ஆற்காடு நகராட்சியில் தீர்மானம்

Print PDF

தினமலர் 05.02.2010

பேனர்களை வைக்க கட்டுப்பாடு: ஆற்காடு நகராட்சியில் தீர்மானம்

ஆற்காடு: ஆற்காடு நகரில் பேனர்கள் வைப்பதில் கட்டுப்பாடு கொண்டு வரப்படும் என்று நகராட்சி சேர்மன் ஈஸ்வரப்பன் கூறினார். ஆற்காடு நகராட்சி கூட்டத் திற்கு தலைவர் ஈஸ்வரப்பன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பொன்.ராஜசேகரன், கமிஷனர் பாரிஜாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

நந்தகுமார் (பா..): ஆற்காடு நகராட்சியில் அனுமதி பெற்ற திருமண மண்டபங்கள் எத்தனை? அனுமதி இல்லாத திருமண மண் டபங்கள் எத்தனை? அவர்களுக்கு எந்த அடிப்படையில் வரி வசூலிக்கப்படுகிறது. ஆற்காடு பஸ் நிலையம் எதிரில் உள்ள நகராட்சி கட்டடத்தில் உள்ள மதுபான கடை யார் மூலம் விடப்பட்டது.

சேர்மன்: திருமண மண்டபங்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன் வசூலிக்கப்பட்ட வரியை இப்போது, குறிப்பிட்ட சதவீதம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. பஸ் நிலையத் தில் உள்ள மதுபானக்கடை பொதுமக்களுக்கு இடையூராக இருந்தால் அதனை முறைப்படி அப்புறப்படுத்தப்படும்.

செல்வம் (பா..): தலைவர் பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி பணம் வசூல் செய்கிறார் கள். அவர்களிடம் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சேர்மன்: என்னைப்பற்றி உங்களுக்கும், பொதுமக்களுக்கும் நன் றாக தெரியும். உறுப்பினர்களின் அறிவுரைப்படி அவர்களிடம் ஜாக்கிரதையாக இருப்பேன்.

செல்வம் (பா..): எனது வார் டில் ரோடு போட டெண்டர் எடுத் தவர் 75 நாளாகியும் இதுவரையில் வேலை ஆரம்பிக்கவில்லை. அடுத்த கூட்டத்திற்குள் வேலை முடியாவிட்டால் அவரை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். நகராட்சிக்கு கெட்ட பெயர் வருகிறது என்றால் அது பொறியாளரால் தான். மேலும் நகரில் டிஜிட்டல் பேனர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும். நகராட்சிக்கு சொந்தமான ஈஸ்வரன் மாளிகையில் உள்ள கடைகளை நகராட்சி அனுமதி இல்லாமல் இடித்து மேலும் மேலும் கட்டடங்கள் கட் டுகிறார்கள் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கமிஷனர்: நகராட்சி கட்டட கடைகளை அனுமதி இல்லாமல் இடிப்பதும், கட்டுவதும் தவறு. உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். �லும் பேனர் வைக்க கலெக் டரிடம் அனுமதி வாங்க வேண் டும். அப்படி வாங்குகிறார்களா என்று இனி விசாரிக்கப்படும்.

துணை சேர்மன்: காந்தி, காமராஜர், அம்பேத்கர், வள்ளுவர் சிலையை சுற்றிலும் பேனர்களை வைத்து சிலைகளை மறைத்து விடுவதால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சேர்மன்: தலைவர்களின் சிலைகளை சுற்றியும் பேனர்கள் வைத்து சிலையை மறைத்து விடுகின்றனர். இது வருத்தத்தை அளிப்பதுடன் கண்டிக்கத்தக்கதும் கூட. அதனால் பேனர்களை வைக்க கட்டுப்பாடு கொண்டு வரப்படும்.

வேண்டா (அதிமுக): எனது வார்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மருத்துவமனை, சத்துணவு கூடம், மேநீர் தேக்க தொட்டிகள் உள்ளது. அங்கு 3 செல்போன் டவர்கள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது.

பூங்காவனம் (பா..): பஜார், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள பிளாட்பாரங்களில் பூக்கடை மற்றும் நடைபாதை, கைவண்டி கடைகள் அதிகம் உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மாங்காய் மண்டியின் உள்ளே உள்ள இடத்தில் சிசிறு கடைகள் கட்டி குறைந்த வாடகைக்கு விடலாம்.

ரகுநாதன் (அதிமுக): ஆற்காடு பாலாற்றில் இருந்து ஆரணிக்கு செல்லும் குடிநீர் பைப்பில் ஆங்காங்கே தண்ணீர் வெளியேறுகிறது. அந்த இடத்தில் சிலர் கழிவுப் பொருட்களை கொட்டுவதால் அந்த குடிநர் மாசுபடும் நிலை உள்ளது. ஆகவே உடனடியாக அங்கு கழிவுப் பொருள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சித்ரா (திமுக): எனது வார்டில் பொதுக்கழிப்பிடம் உள்ளது. அதை யாரும் பயன்படுத்தாதல் அதனை இடித்துவிட்டு வணிகவளாகம் கட்டிவருவாய்க்கு வழி செய்யலாம்.

நடராஜ் (திமுக) : ஆற்காடு பஸ் நிலையத்தில் காலை வேலையில் தொழிற்சாலைகள் பஸ், கல்லூரி மற்றும் பள்ளி பஸ்கள் ஒரே நேரத்தில் வருவதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. அவர்களிடம் நகராட்சி சுங்கம் வசூல் செய்யப்படுகிறதா? அப்படியென்றால் வசூலிப்பது யார்?

சேர்மன்: வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமை ஏலம் விடப்பட்டதால் ஏலம் எடுப்பவர்கள் வசூலிப்பார்கள். இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் சிவராத்திரி விழா, மயானக்கொள்ளை விழா நடைபெற இருப்பதால் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள், பாலாற்றில் சீர் செய்யும் பணிகளுக்காக 25 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Friday, 05 February 2010 06:46
 

சிதம்பரம் சாலைகளில் சுற்றி திரிந்த கால்நடைகளுக்கு அபராதம்

Print PDF

தினமலர் 05.02.2010

சிதம்பரம் சாலைகளில் சுற்றி திரிந்த கால்நடைகளுக்கு அபராதம்

சிதம்பரம் : சிதம்பரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றி திரிந்த கால்நடைகளை நகராட்சி அதிகாரிகள் பிடித்து அபராதம் விதித்தனர்.சிதம்பரம் நகராட்சி பகுதியில் முக்கிய வீதிகளான மேலவீதி, கீழ வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, எஸ்.பி கோவில் தெரு, மார்க்கெட் பகுதி, காசுக்கடை தெரு உள்ளிட்ட இடங்களில் ஆடு, மாடுகள் மேய்ந்துக்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தன. இது குறித்து நகராட்சி சார்பில் ஆடு, மாடுகளின் உரிமையாளர்களை பலமுறை கண்டித்தும் பயன் இல்லை. இதனால் நேற்று நகராட்சி கமிஷனர் ஜான்சன் உத்தரவின்பேரில் துப்புரவு ஆய்வாளர் குழந்தைவேலு தலைமையில் நகராட்சி ஊழியர்கள் சாலைகளில் சுற்றி திரிந்த 20 ஆடுகள், 15 மாடுகளை பிடித்து நகராட்சிக்கு கொண்டு வந்தனர்.தகவல் அறிந்த கால்நடை உரிமையாளர்கள் நகராட்சியில் முறையிட்டனர். இனி ஆடு, மாடுகளை சாலை பகுதியில் மேயவிடமாட்டோம் என உறுதியளித்ததன் பேரில் அவர்களிடம் அபராதத்தொகை வசூலித்துக்கொண்டு கால்நடைகளை அனுப்பினர்.

Last Updated on Friday, 05 February 2010 06:37
 


Page 677 of 841