Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

திட்டக்குடிக்கு புதிய செயல் அலுவலர் : பேரூராட்சிகள் உதவி இயக்குநர் தகவல்

Print PDF

தினமலர் 04.02.2010

திட்டக்குடிக்கு புதிய செயல் அலுவலர் : பேரூராட்சிகள் உதவி இயக்குநர் தகவல்

திட்டக்குடி: திட்டக்குடி பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர் நியமிக்கப்படுவார் என பேரூராட்சிகள் உதவி இயக்குநர் தெரிவித்தார். திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்திற்கு செயல் அலுவலர் வராததை கண் டித்து கவுன்சிலர் அலெக் சாண்டர் மற்றும் பொதுமக்கள் கடந்த 2ம் தேதி செயல் அலுவலர் அறைக்கு பூட்டு போட்டனர். இதனையடுத்து நேற்று மாலை பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சடையப்பன் திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நேரில் ஆய்வு மேற் கொண் டார். இதில் அலுவலக பதிவேடுகள், கோப்புகளை சரிபார்த்தார்.

தொடர்ந்து கொசு மருந்து, பினாயில், பிளீச் சிங் பவுடர் ஆகியவற்றை தேவையான அளவிற்கு வாங்கி இருப்பு வைக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் சேர்மன் மன்னன், துணை சேர்மன் கமலி மற்றும் கவுன்சிலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தற்போது பணியில் உள்ள செயல் அலுவலர் பன்னீர்செல்வத்திற்கு பதிலாக, புதிய செயல் அலுவலர் இரண்டு நாட்களுக்குள் நியமிக்கப்படுவார் என தெரிவித்தார். இதேபோல் பெண்ணாடம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வில், சேர்மன் அமுதலட்சுமி, துணை சேர்மன் காதர், பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்

Last Updated on Thursday, 04 February 2010 06:28
 

ஓசூர் பஸ்ஸ்டாண்ட் கடைகளுக்கு மறு ஏலம் 4ம் கட்டமாக 11ம் தேதி மீண்டும் பலப்பரீட்சை

Print PDF

தினமலர் 04.02.2010

ஓசூர் பஸ்ஸ்டாண்ட் கடைகளுக்கு மறு ஏலம் 4ம் கட்டமாக 11ம் தேதி மீண்டும் பலப்பரீட்சை

ஓசூர்: ஓசூர் புது பஸ்ஸ்டாண்ட் கடைகள் மறு ஏலம், நான்காம் கட்டமாக சப்-கலெக்டர் அலுவலகத்தில் வரும் 11ம் தேதி நடக்கிறது. தொழில் நகரமான ஓசூரில், பழைய பஸ்ஸ்டாண்டை இடித்துவிட்டு, அதே இடத்தில் பெங்களூரு நான்கு வழிச்சாலையில் பத்து கோடி ரூபாயில் நவீன புது பஸ்ஸ்டாண்ட் கட்டும் பணி நடக்கிறது. நகராட்சியில் போதிய நிதிஆதாரம் இல்லாததால், புது பஸ்ஸ்டாண்ட் கட்டும் பணிகள் தேக்கமடைந்தது. பஸ்ஸ்டாண்ட் கட்டுமான பணி முழுமையடையும் முன், பஸ்ஸ்டாண்ட் வணிக வளாகத்தில் கட்டப்படும் இரு ஹோட்டல்கள், 76 கடைகளை ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் பஸ்ஸ்டாண்ட் இறுதிகட்டப்பணிகளை முடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, புது பஸ்ஸ்டாண்ட் கடைகள் கடந்த செப்.,25ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் முதல்முறையாக ஏலம் விடப்பட்டது. நகராட்சி உயர் அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, கடைகளுக்கு அதிகப்படியாக முன்வைப்பு தொகை, வாடகை நிர்ணயம் உள்ளிட்ட காரணத்தால் வியாபாரிகள் யாரும் கடைகளை ஏலம் எடுக்க முன்வரவில்லை. அதனால், ஏலம் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இரண்டாவது முறையாக ஏலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஏலத்திலும் வியாபாரிகள் யாரும் ஆர்வமாக கலந்து கொள்ளவில்லை. ஆனால், ஏலம் போன மூன்று கடைகள் 18 ஆயிரம் ரூபாய் முதல் 21 ஆயிரம் ரூபாய் வரை மாத வாடகைக்கு ஏலம் போனதால் அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். நவ., 11ம் தேதி மூன்றாவது முறையாக சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திலும், ஒரு சில கடைகள் மட்டும் ஏலம்போனது. எதிர்பார்த்த அளவு வியாபாரிகள் கலந்து கொள்ளாததால், அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அதனால், கடந்த இரு மாதமாக மீண்டும் ஏலம் விடுவதற்கு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இந்நிலையில் தற்போது நான்காம் கட்டமாக வரும் 11ம் தேதி மீண்டும் புதுபஸ்ஸ் டாண்ட் கடைகளை மறுஏலம் விடுவதற்கு நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுவரை மொத்தம் ஐந்து கடைகள் மட்டும் ஏலம் விடப்பட்டுள்ளது. அதற்கு கவுன்சிலர்கள் அனுமதி அளித்துள்ளனர். மீதம் உள்ள இரு ஹோட்டல், 71 கடைகளுக்கு நான்காம் கட்டமாக ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் வியாபாரிகளை முழுமையாக கலந்து கொள்ள வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏலம் முழுவதையும் போலீஸ் பாதுகாப்போடு வீடியோ எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள், வரும் 10ம் தேதி மாலை 4 மணிக்குள் முன் வைப்பு தொகையை டி.டி., மூலம் நகராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். 11ம் தேதி நேரடியாக டெண்டரில் கலந்து கொள்ள விரும்பும் வியாபாரிகள், அன்று காலை 11 மணிக்குள் சப்-கலெக்டர் அலுவலகத்தில் உள்ள டெண்டர் பாக்சில் தங்கள் முன்வைப்பு தொகை, ஏலம் கேட்கும் தொகையை மூடிய கவரில் போடுமாறு நகராட்சி நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

Last Updated on Thursday, 04 February 2010 06:22
 

நகராட்சி அலுவலகத்தில் மனுக்கள் பெறும் முகாம் 2 பேருக்கு உதவித்தொகை உத்தரவு வழங்கல்

Print PDF

தினமலர் 04.02.2010

நகராட்சி அலுவலகத்தில் மனுக்கள் பெறும் முகாம் 2 பேருக்கு உதவித்தொகை உத்தரவு வழங்கல்

நாமக்கல்: நகராட்சியில் நடந்த முகாமில் கலெக்டர் சகாயம், மக்களிடம் இருந்து பல்வேறு குறைகள் அடங்கிய 175 மனுக்களை பெற்றார். இரண்டு பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவு உடனடியாக வழங்கப்பட்டது.நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய ஐந்து நகராட்சிகளில் உள்ள மக்களின் தேவை என்ன, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைத்துள்ளதா, அரசின் நலத்திட்ட உதவிகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை அறியவும், மக்களின் குறைகளை கேட்டறிந்து அதன்படி அவர்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நகராட்சி மக்களிடம் இருந்து மனுக்களை பெறும் முகாம் நடத்தப்படுகிறது. நாமக்கல் நகராட்சியில் நடந்த முகாமுக்கு, கலெக்டர் சகாயம் தலைமை வகித்தார். சேர்மன் செல்வராஜ், ஆர்.டி.., ராஜன், கமிஷனர் ஆறுமுகம், தாசில்தார் குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில், நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளை சேர்ந்த மக்கள் 200க்கும் மேற்பட்டோர் குவிந்து தங்களது குறைகளை மனுக்களாக எழுதி கலெக்டர் சகாயத்திடம் வழங்கினர். அவற்றை பெற்ற கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் கேட்டு 120 மனு, ரேஷன் கார்டு, மேற்முறையீடு கோரி 8 மனு, முதியோர் உதவித்தொகை கேட்டு 25 மனு, நகராட்சியில் குடிநீர் இணைப்பு, வரி குறைப்பு கோரி 21 மனு உள்பட 175 மனுக்கள் வழங்கப்பட்டன. மனுக்களை பெற்ற கலெக்டர் சகாயம், குறிப்பிட்ட சில மனுக்கள் மீது இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், இரண்டு பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவை உடனடியாக வழங்கினார். நிகழ்ச்சியில், நகராட்சி துணைத்தலைவர் பூபதி, சுகாதார ஆய்வாளர் முகமது மூஷா, உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 04 February 2010 06:16
 


Page 679 of 841