Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நகராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் குறைகேட்கிறார்

Print PDF

தினகரன் 03.02.2010

நகராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் குறைகேட்கிறார்

நாமக்கல்,: நாமக்கல் நகராட்சியில் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் குறைகேட்கும் முகாம் நடைபெறுகிறது.

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் இன்று (புதன்) காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சகாயம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொள்கிறார். எனவே, நாமக்கல் நகராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்குமாறு நகராட்சி ஆணையர் கந்தசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Last Updated on Wednesday, 03 February 2010 11:04
 

நாமக்கல் நகராட்சியில் இன்று குறைகேட்பு முகாம்

Print PDF

தினமணி 03.02.2010

நாமக்கல் நகராட்சியில் இன்று குறைகேட்பு முகாம்

நாமக்கல், பிப். 2: நாமக்கல் நகராட்சிப் பகுதி மக்களிடம் குறைகேட்கும் முகாம் புதன்கிழமை நடைபெறுகிறது.நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் இக் கூட்டத்தில் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம். நகராட்சி அலுவலகத்தில் காலை 11 மணிக்கு கூட்டம் துவங்கும். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சகாயம் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் வசதி, குப்பை அகற்றும் பணி, சுகாதாரப் பணி மற்றும் நகராட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் உள்ள குறைகளை நேரடியாகவோ, மனுக்களாகவோ தெரிவிக்கலாம்.பொதுப் பிரச்னை குறித்தும் கருத்து தெரிவிக்கலாம். இக் கூட்டத்தில், நகர்மன்றத் தலைவர், நகராட்சி ஆணையர், நகராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள் பங்கேற்கவுள்ளனர்.

Last Updated on Wednesday, 03 February 2010 10:43
 

உள்ளாட்சி பொறுப்பில் உள்ளவர்கள் டெண்டர்களில் கலந்து கொள்ள தடை

Print PDF

தினமலர் 03.02.2010

உள்ளாட்சி பொறுப்பில் உள்ளவர்கள் டெண்டர்களில் கலந்து கொள்ள தடை

தேவதானப்பட்டி: தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புக்களில் பொறுப்பில் உள்ளவர்கள் டெண்டர்களில் கலந்து கொள்ள தகுதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் 130 கிராம ஊராட்சிகள், 22 பேரூராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பில் உள்ள தலைவர்கள், துணைத்தலைவர்கள், கவுன்சிலர்கள் பலர் அரசின் அடிப்படை கட்டமைப்பணிகளை செய்து வருகின்றனர். இப்பணிகளை செய்வதற்கு இவர்கள் பெயரிலோ அல்லது மற்றவர்களின் பெயர்களில் ஒப்பந்த அனுமதி பெற்று பணிகள் நடந்து வருகிறது. உள்ளாட்சிகளின் பொறுப்பில் இருப்பதால் இவர்கள் செய்யும் வேலைகளை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. இதனால் தரமற்ற பணிகளே நடந்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் அனைத்து ஊராட்சிகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது. இதில், உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் டெண்டர்களில் ஒப்பந்தகாரர்களாக கலந்து கொள்ள தகுதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 03 February 2010 08:01
 


Page 680 of 841