Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

துணை முதல்வருக்கு வரவேற்பு நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினமலர் 02.02.2010

துணை முதல்வருக்கு வரவேற்பு நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

அரியலூர்: அரியலூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், நகராட்சி தலைவர் விஜயலெக்ஷ்மி செல்வராஜ் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சுப்ரமணியன் வரவேற்றார். நிர்வாக அலுவலர் சமயச்சந்திரன், தலைமை எழுத்தர் குமரன் முன்னிலை வகித்தனர். கோமதி தீர்மானங்களை படித்தார். நகராட்சி கவுன்சிலர்கள் பலரும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், அரியலூர் நகராட்சி பகுதியை அழகு படுத்தி, மேம்படுத்தும் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு விடுவது பற்றிய தீர்மானம் பெரும்பாலான கவுன்சிலர்களால் நிராகரிக்கப்பட்டது. ஃபிப்., 4ம் தேதி அரியலூர் மாவட்டத்தில் நடக்கும் சமத்துவபுர திறப்பு விழா, அரசு கட்டிடங்களை திறந்து வைத்து, புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும், தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் வரவேற்புக்கான முன்னேற்பாடுகளை நகராட்சி சார்பில் சிறப்பாக செய்வது.

தமிழககத்திலுள்ள ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, தமிழகம் முழுவதும் கான்கிரீட் வீடுகளை கட்டித்தரும் நோக்கத்துடன், தமிழகம் முழுவதும் 21 லட்சம் குடிசை வீடுகளை, கான்கிரீட் வீடுகளாக மாற்றி கட்டி தரும், இந்தியாவின் முன்னோடி திட்டத்தை சட்டசபையில் அறிவித்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு நகராட்சி சார்பில் நன்றி தெரிவிப்பது. அரியலூர் நகராட்சி பகுதியில் வைக்கப்படவுள்ள விளம்பர பலகைகளுக்கான கட்டணத்தை உயர்த்த மன்றம் அங்கீகரிப்பது, அரியலூர் நகராட்சியில் எஸ்.ஜே.எஸ்.ஆர்.ஒய்., திட்டத்தின்கீழ், 2008-09 ம் ஆண்டுக்கு சமுதாய கட்டமைப்பு தலைப்பின்கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 51 ஆயிரம் ரூபாய் மற்றும் 2009-10 ம் ஆண்டுக்கு 40 ஆயிரத்து 937 ரூபாய் மற்றும் ஏ.அண்டு ஒ.., திட்டத்தின்கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 22 ஆயிரத்து 248 ரூபாய்க்கு, ஸ்கில் ட்ரெயினிங் புரொகிராம் வழங்க பயனாளிகளை தேர்வு செய்வது உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Tuesday, 02 February 2010 06:11
 

மேட்டுப்பாளையம் சாலையில் அமையும் புதிய பஸ் நிலைய பணியை விரைந்து முடிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் உத்தரவு

Print PDF

மாலை மலர் 01.02.2010

மேட்டுப்பாளையம் சாலையில் அமையும் புதிய பஸ் நிலைய பணியை விரைந்து முடிக்க வேண்டும்: மு..ஸ்டாலின் உத்தரவு

கோவை, பிப். 1-

கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. மாநாட்டு தலைமைக்குழுவின் துணை தலைவரும், துணை முதல்-அமைச்சருமான மு.. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

மாநாட்டை யொட்டி நடைபெற உள்ள ஊர்வல குழு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அபபோது ஊர்வலம் செல்லும் அவினாசி சாலையின் ஒரு புறம் பொது மக்கள் பார்வை யிட இருப்பதால் அந்த 6 கி.மீ. தூரத்திற்குள் எவ்வளவு பேர் பங்கேற்கலாம் என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப மக்களை அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் துறையினரை மு..ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

அதே போல் மேட்டுப்பாளையம் சாலையில் மாநகராட்சி மூலம் கட்டப் படும் பஸ் நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்குமாறும் மாநக ராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ராவுக்கு துணை முதல்வர் உத்தரவிட்டார்.

மாநாட்டுக்குள் மேட்டுப்பாளையம் சாலையை அகலப்படுத்த வேண்டும். அதற்கான மதிப்பீட்டை தயாரித்து மத்திய அரசுக்கு உடனே அனுப்பி வைக்கு மாறும் அவர் அறிவுறுத்தினார்.

இதை ஆலோசனை கூட்டத்தில் அமைச்சரும், ஊர்வல குழு தலைவருமான கே.என். நேரு, மத்திய மந்திரி ராசா, அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, சாமிநாதன், கலெக்டர் உமாநாத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண் டனர்.

 

பணிகளை விரைந்து முடிக்க துணை முதல்வர் உத்தரவு

Print PDF

தினகரன் 01.02.2010

பணிகளை விரைந்து முடிக்க துணை முதல்வர் உத்தரவு

கோவை : கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு பணிகள் ஆய்வு கூட்டம், துணை முதல்வர் மு..ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநில அமைச்சர்கள் கே.என்.நேரு, பொங்கலூர் பழனிசாமி, சாமிநாதன், ராமச்சந்திரன், கலெக்டர் உமாநாத், மேயர் வெங்கடாசலம், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, மாநாடு ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், மாநகர போலீஸ் கமிஷனர் சிவனாண்டி, பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா கூறுகையில், ‘ரூ.26 கோடிக்கு 71 ரோடு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவக்கப்படும்என்றார். ‘திருச்சி சாலையை 4 வழிப்பாதையாக மாற்றும் பணியை விரைவில் முடிக்க வேண்டும். மசக்காளிபாளையம் சாலை, ரங்கவிலாஸ் மில் சாலை உள்பட 5 சாலைகளை சீரமைக்க வேண்டும். அவிநாசி ரோடு ஹோப் காலேஜ் ரயில்வே பாலம் பணியை ஏப்ரலுக்குள் முடிக்கவேண்டும். மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையை உரிய காலத்தில் சீரமைக்க மத்திய அரசிடம் பேசப்படும்என துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

பின்னர், ..சி பூங்கா மைதானத்திலிருந்து கொடிசியா வளாகம் வரை 9.5 கி.மீ தூரம் மாநாடு பேரணி நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகளை அவர் விசாரித்தார். பேரணி பாதை தொடர்பான வரைபடத்தை பார்வையிட்டு அவர் கூறியதாவது:

பேரணி பாதை ஏற்பாடுகள், பாதுகாப்பு வசதிகளை போலீசார் சிறப்பாக செய்யவேண்டும். 3 கி.மீ தூரம் மாநாடு ரதம், அலங்கார வாகனங்கள் செல்லும். 6.5 கி.மீ தூரம் மக்கள் ஊர்வலம் நடத்தப்படும். மக்கள் பார்வையிட வசதி, வாகனம், பாதை வசதிகள் தொடர்பாக தெளிவான விவரங்களுடன் திட்டம் தயாரிக்க வேண்டும்.

இவ்வாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பின்னர், மு..ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘மாநாட்டுக்கான போக்குவரத்து, ஊர்வலப் பாதைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மாநாடு தொடர்பான பணிகளை வேகமாக முடிக்க உத்தரவிடப்பட்டது. பேரணிக்கு வெளிமாவட்ட வாகனங்கள் அதிகமாக வரும். அந்த வாகனங்களை நிறுத்த தேவையான பார்க்கிங் வசதி செய்ய உத்தரவிடப்பட்டது. மாநாட்டின்போது போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்படும்என்றார்.

Last Updated on Monday, 01 February 2010 10:26
 


Page 683 of 841