Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உத்தரவு

Print PDF

தினமலர் 01.02.2010

அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உத்தரவு

சென்னை : சாலை ஓரங்களில், நடைபாதைகளில் அனுமதியின்றி விளம்பர போர்டுகள், டிஜிட்டல் பேனர் களை வைப்பவர்கள் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கையை மாநகராட்சி எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது

.சென்னையைச் சேர்ந்த "டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த மனுவில், "சென்னையில் பல இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட் டுள்ளன. இதனால், பாதசாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, கோர்ட் உத்தரவை அமல்படுத்தாத சென்னை மாவட்ட கலெக்டர், சென்னை மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர், மேயர், மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார்.இம்மனுவை நீதிபதிகள் டி.முருகேசன், ஜனார்த்தனராஜா அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. சென்னை மாநகராட்சி சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன் ஆஜரானார்.

"டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: அனுமதியின்றி விளம்பர போர்டுகள் வைக்கப் பட்டிருந்தால், அதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபாதைகள், பொதுமக்கள் செல்லும் இடங்களில் அனுமதியின்றி விளம்பர போர்டுகள், டிஜிட்டல் பேனர் கள் வைப்பவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக் கையை, சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் எடுக்க வேண்டும். இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட் டுள்ளது.

Last Updated on Monday, 01 February 2010 06:19
 

கோவையில் ‘தீண்டாமை சுவர்’ 21 ஆண்டுகளுக்கு பிறகு இடிப்பு

Print PDF

தினகரன் 31.01.2010

கோவையில் ‘தீண்டாமை சுவர்’ 21 ஆண்டுகளுக்கு பிறகு இடிப்பு

Swine Flu கோவை : கோவை சிங்காநல்லூர் 10வது வார்டு வரதராஜபுரம் காமராஜர் ரோட்டில் பெரியார் நகர் உள்ளது. இங்குள்ள 58 குடும்பங்களுக்கு கடந்த 1989ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. 58 குடும்பத்தினரும் இங்கு வீடு கட்டி குடியிருக்கின்றனர். இப்பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்ல 30 அடி ரோடு உள்ளது. ஆனால், இதை அப்பகுதியை சேர்ந்த தனியார் ஒருவர் ஆக்கிரமித்து விநாயகர் கோயில் கட்டினார். அவருக்கு சொந்தமான மாடுகளையும் கட்டி, மாட்டுத்தொழுவமாகவும் பயன்படுத்தி வந்தார். அரிஜன மக்கள் இப்பகுதி வழியாக காமராஜர் சாலைக்கு செல்லக் கூடாது என்பதற்காக சாலையை ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 21 ஆண்டுகளாக இதேநிலைதான்.

இந்நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட எட்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ராவிடம் சில தினங்களுக்கு முன்பு ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், ஆதிதிராவிட மக்களை தனியாக ஒதுக்கி வைக்கும் நோக்கத்தில், மாநகராட்சி சாலையை ஆக்கிரமிப்பு செய்து தடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தனர்.

கமிஷனர் அன்சுல் மிஸ் ரா தலைமையில் சென்ற அதிகாரிகள் நேற்று தீண்டாமை சுவரை புல்டோசர் மூலம் இடித்தனர்.

Last Updated on Sunday, 31 January 2010 06:50
 

நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள் குரல்: பாளை.,யில் மாத இதழ் வெளியீட்டு விழா

Print PDF

தினமலர் 31.01.2010

நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள் குரல்: பாளை.,யில் மாத இதழ் வெளியீட்டு விழா

திருநெல்வேலி: தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் கூட்டமைப்பிற்காக தேசிய அலுவலர் சங்க கூட்டமைப்பு சார்பில் நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குரல் என்ற மாத இதழ் வெளியீட்டு விழா நடந்தது. பாளை., மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை மேயர் முத்துராமலிங்கம், மாத இதழை வெளியிட, நெல்லை மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் சண்முகம் பெற்றுக் கொண்டார். தொழிற்சங்க உரிமைகள் என்ற இதழினை பாளை., மண்டல தலைவர் சுப.சீதாராமன் வெளியிட்டார். நகராட்சி அனைத்து அலுவலர் சங்க கூட்டமைப்பின் நெல்லை மண்டல தலைவர் நாகூர்மீரான் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். செயலாளர் விவேகானந்தன் வரவேற்றார். நூல் ஆசிரியரும், மாநில பொதுச் செயலாளருமான சீத்தாரமன் நன்றி கூறினார்.

விழாவில் மாநில பொருளாளர் சக்திவேல், மாநில அமைப்புச் செயலாளர் சுரேஷ்குமார், துணைத்தலைவர் சுடலைமுத்து, அமைச்சு பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் முத்துதுரை, நகர சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர் விஜயலெட்சுமி, டிரைவர் சங்க மாநில பொதுச் செயலாளர் இலியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 685 of 841