Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பட்டுக்கோட்டையில் மின் மயானம் அமைக்க பூமி பூஜை

Print PDF

தினமணி 29.01.2010

பட்டுக்கோட்டையில் மின் மயானம் அமைக்க பூமி பூஜை

பட்டுக்கோட்டை, ஜன 28: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் மின் மயானம் அமைப்பதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை 28-வது வார்டு, ரயில் நிலைய சாலையிலுள்ள நகராட்சி மயானம், ரூ. 55 லட்சம் செலவில் மின் மயானமாக மாற்றப்படுகிறது. இதற்காக, தகன மேடை கட்டப்படவுள்ள இடத்தில் பூமி பூஜை நடத்தப்பட்டது.

இதில், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் கு.வெ. பாலகிருஷ்ணன், பொறியாளர் எஸ்.ஆர்.என். செந்தில்குமார், உறுப்பினர்கள் சீனி. அண்ணாதுரை, எஸ்.ஏ.ஆர். ரகுராமன், கே.வி.ஆர். திருச்செந்தில், ஆர். வீரையன், எஸ். ஸ்ரீதர், முன்னாள் உறுப்பினர் டி. கோவிந்தராஜ், ஒப்பந்தக்காரர் மாசிலா. நெடுஞ்செழியன், வி.எஸ். நாடிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நகராட்சி உறுப்பினர் ஏ.ஆர். பரமேஸ்வரன் வரவேற்றார். ஏ. முத்துக்குமார் நன்றி கூறினார்.

 

தேவகோட்டை நகர்மன்றக் கூட்டம்

Print PDF

தினமணி 29.01.2010

தேவகோட்டை நகர்மன்றக் கூட்டம்

தேவகோட்டை, ஜன. 28: தேவகோட்டை நகர்மன்ற சாதாரணக் கூட்டம் தலைவர் வேலுச்சாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையர் செழியன், பொறியாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தனர். அலுவலக உதவியாளர் வேலுச்சாமி தீர்மானங்களை வாசித்தார். அப்போது நடைபெற்ற விவாதம்:-

கவுன்சிலர் முத்தழகு:- எனது பகுதியில் கடந்து 20 நாள்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. புகார்தெரிவித்தும் பயனில்லை. அலுவலகத்தில் இருக்கும் மின்சார ஊழியர்கள் வாக்காளர் படிவம் சரிபார்க்கும் பணிக்குச் சென்றுவிடுவதால், பணிகளை கவனிக்க ஆள் இல்லை.

தலைவர்:- தற்போது விளக்குகள் சரிசெய்யப்பட்டு விட்டன. இனி புகார் வராமல் மின்சாரத் துறை பார்த்துக் கொள்ள வேண்டும்.

சண்முகநாதன்:- நகரில் சுகாதாரம் மிகவும் மோசம். நகராட்சியில் இருந்த லாரிகள் எங்கே? லாரிகளை ஆய்வுக்காக ஏன் குறித்த காலத்தில் அனுப்பவில்லை. தற்போது நிறுத்தி வைத்திருப்பது ஏன்?

தலைவர்:- லாரிகளை அதன் மறு ஆய்வு வருவதற்கு முன்பே தீர்மானம் வைத்து ஆய்வுக்கு அனுóப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆய்வு நாள் வந்து பிறகு தீர்மானம் கொண்டுவந்து ஒப்பந்தம் கோரியது தவறு. தவறிய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்கிறேன்.

கேசவன்:- நமது நகராட்சியில் தற்போது கொசு அதிகம் உள்ளது. இதனால் பல்வேறு நோய்கள் வருகின்றன. கொசு மருந்து அடிப்பதே இல்லை.

ராஜேஸ்வரி:- எனது 11-வது பகுதியில் மருந்தை அடிக்காமல் இரு ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து வீட்டில் நீர் தேங்காமல் பார்க்க வேண்டும் என அறிவுரை வழங்குகிறார்கள். முதலில் மருந்து அடித்து கொசு வராமல் பார்த்துவிட்டு பிறகு அறிவுரை வழங்குங்கள்.

எல்,பி.வி.பழனியப்பன்:- கால்வாய்களை வழித்து சுத்தம் செய்யாமல் மருந்து அடித்து பலனில்லை.

தலைவர்:- எல்லா பகுதிகளிலும் மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அவர்கள் கணக்கு பராமரித்து வருகிறார்கள்.

நகர்நல அலுவலர்:- தேவையான அளவு மருந்து உள்ளது. தினமும் மருந்து அடிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். காலையில் கால்வாயை வழித்து சுத்தம் செய்துவிட்டு பிற்பகலில் மருந்து அடிக்க அறிவுறுத்தியுள்ளோம்.

சண்முகநாதன்:- ராமநகர் அழகப்பா பூங்காவில் தற்போது எத்தனை பேர் வேலை செய்கிறார்ரகள்.

தலைவர்:- தற்போது நகராட்சியே நேரடியாகப் பராமரித்து வருவதால், இருக்கும் ஊழியர்களே அங்கும் வேலைகளைக் கவனித்து வருகிறார்கள். வருகிற பிப்ரவரி 1 முதல் பராமரிப்புப் பணிகளை தனியாருக்கு வழங்க இருக்கிறோம். அப்போது போதிய ஊழியர்களை அவர்கள் நியமித்து பணிகளைக் கவனிப்பார்கள்.

செல்லமுத்து:- எனது இரண்டாவது பகுதியில் அதிகமாக விரிவாக்க பகுதிகள் உள்ளன. இங்கெல்லாம் கூடுதலாக சாலை மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்துதர வேண்டும்.

தலைவர்:- ஏற்கனவே 106 புதிய மின் விளக்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுளளது. இதற்குரிய பணத்தை மின் வாரியத்தில் அதிகாரிகள் உடனடியாக செலுத்தவேண்டும். அவை தேவையான பகுதிகளுக்கு பிரித்து வழங்கப்படும்.

பின்னர் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

 

நகராட்சி ஊழியர்களுக்கு அரசே சம்பளம் வழங்கும் கோரிக்கை ஏற்பு

Print PDF

தினமணி 29.01.2010

நகராட்சி ஊழியர்களுக்கு அரசே சம்பளம் வழங்கும் கோரிக்கை ஏற்பு


புதுச்சேரி, ஜன. 28: நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அரசே சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

÷புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.விநாயகவேல் வெளியிட்ட அறிக்கை:

÷கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்த முடிவு செய்திருந்தோம். இதைக் குறிப்பிட்டு நிர்வாகத்துக்குக் கடிதம் கொடுத்திருந்தோம்.

உள்ளாட்சித்துறை செயலர் நூதன்குகா பிஸ்வாஸ் எங்கள் சங்கப் பொறுப்பாளர்களுடன்

புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்குவது போன்று புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கும் அரசே நேரடியாக வழங்க ஏற்றுக் கொள்ளப்பட்டது.

÷6-வது ஊதியக் குழுவில் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 30 சதத்தை அரசிடம் இருந்து நிதியுதவி பெற்று விரைவில் வழங்கப்படும் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அரசு துறையில் சட்ட ஆலோசனை உத்தரவு பெற்று விரைவில் தாற்காலிக அந்தஸ்து பெற்ற ஊழியர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் நிரந்தரம் செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டது. நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு கிரேடு பே வழங்க ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டது. குடும்ப நல அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி சிறப்பு அலவன்ஸ் ஆணை வழங்கப்படும். துப்புரவு தொழிலாளர்களுக்கு கல்வித் தகுதியைத் தளர்த்தி முன் தேதியிட்டு காலக்கட்டப் பதவி உயர்வு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் நகராட்சி ஊழியர்களுக்கு வீடு கட்டிக் கொள்ள அரசு நிர்ணயம் செய்யும் தொகையில் இடம் வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டது.

 


Page 686 of 841