Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

திமிரி பேரூராட்சியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

Print PDF

தினத்தந்தி          06.12.2013

திமிரி பேரூராட்சியில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

திமிரியில் வேலூர் மாவட்ட கலெக்டர், மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆகியோர் உத்தரவின் பேரில், டெங்கு காய்ச்சல், திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு ஆகியவவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருமலை நாடக குழுவினரால் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி தலைமை தாங்கி, கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து பேசினார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் உள்பட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

 

இன்று முதல் அம்மா சிறப்பு மருத்துவ முகாம்கள்

Print PDF

தினமணி           05.12.2013

இன்று முதல் அம்மா சிறப்பு மருத்துவ முகாம்கள்

சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அம்மா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளிலும் தலா 5 இடங்களில் அம்மா சிறப்பு மருத்துவ முகாம்கள் டிச. 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்போது இந்த முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் வியாழக்கிழமை முதல் 5 நாள்களுக்கு நடைபெறும்.

இந்த முகாம்கள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

இதனை தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, ஆணையர் விக்ரம் கபூர் ஆகியோர் செனாய் நகர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கின்றனர்.

ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு பிரதான முகாம் நடத்தப்படும். இதில் எக்கோ, இ.சி.ஜி. அல்ட்ரா சவுண்ட், கண் பரிசோதனை, முழு ரத்த பரிசோதனை, கருப்பை வாய் புற்றுநோய் கண்டறிதல், மார்பக சோதனை, காசநோய் பரிசோதனை, பல் மருத்துவ சிகிச்சை, மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா ஆகியவற்றுக்கான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படும்.

மேலும் அனைத்து வார்டுகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதில் ரத்தப் பரிசோதனை, காசநோய் மற்றும் மலேரியா பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படும்.

பிரதான முகாம் நடைபெறும் இடங்கள்:மண்டலம் - இடம்

திருவொற்றியூர் - கத்திவாக்கம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி (வார்டு 2)

மணலி - மணலி சென்னை மாநகராட்சி பள்ளி (வார்டு 21)

மாதவரம் - மாதவரம் ராஜாஜி சாலை மாநகராட்சி தொடக்கப்பள்ளி (வார்டு 30)

தண்டையார்பேட்டை - பட்டேல் நகர் மாநகராட்சி தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி (வார்டு 38)

ராயபுரம் - பழைய வண்ணாரப்பேட்டை மணிகண்ட முதலி 8 ஆவது தெரு, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி (வார்டு 51)

திரு.வி.க. நகர் - ஓட்டேரி, ஸ்டாஹன்ஸ் சாலை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி (வார்டு 76)

அம்பத்தூர் - பாடி மூர்த்தி நகர் மாநகராட்சி பள்ளி (வார்டு 87)

அண்ணாநகர் - செனாய் நகர் புல்லா அவென்யூ மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி (வார்டு 102)

தேனாம்பேட்டை - எல்டாம்ஸ் சாலை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி (வார்டு 123)

கோடம்பாக்கம் - கோயம்பேடு பள்ளி சாலை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி (வார்டு 127)

வளசரவாக்கம் - போரூர் ஸ்ரீóராமச்சந்திர மருத்துவ கல்லூரி மருத்துவமனை (வார்டு 151)

ஆலந்தூர் - நங்கநல்லூர் மாநகராட்சி பள்ளி (வார்டு 166)

அடையாறு - திருவான்மியூர் பாரதிதாசன் தெரு (வார்டு 182)

பெருங்குடி - மடிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் உள்ள குளக்கரை தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி (வார்டு 188)

சோழிங்கநல்லூர் - கண்ணகி நகர் இசபெல் நல மையம் (வார்டு 195)

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோவில் அறிவிப்பு: மேலும் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் குறித்து தினமும் காலையில் ஆட்டோவில் சென்று அறிவிக்கப்படும்.

இது குறித்த துண்டறிக்கைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படும். பொதுமக்கள் வரவேற்புக்கு ஏற்ற வகையில் பிரதான முகாம்கள் நடைபெறும் இடங்களும் மாற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி           04.12.2013

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பேரணி

மதுராந்தகம் அடுத்த  அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி சார்பாக அரசு  மகளிர்  மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி செவ்வாய்கிழமை   நடைபெற்றது.

÷இப்பேரணியை  பேரூராட்சித் தலைவர் தாவூத்பீ உசேன் தொடங்கி வைத்தார். 

 பேரூராட்சி துணைத் தலைவர்  ஆ.சீனுவாசன், செயல் அலுவலர்  மா.கேசவன், ஆரம்ப சுகாதார அலுவலர் பிரபு, பேரூராட்சி மன்ற  உறுப்பினர்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். பேரணயில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டுச் சென்றனர்.

முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இப்பேரணி பேரூராட்டசி அலுவலகத்தில் முடிந்தது.

 


Page 70 of 841