Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நெல்லை மாநகராட்சியில் 'முதல்' குடியரசு தினவிழா:மாணவ, மாணவிகள் 'கலக்கல்' கலை நிகழ்ச்சிகள்

Print PDF

தினமலர் 27.01.2010

நெல்லை மாநகராட்சியில் 'முதல்' குடியரசு தினவிழா:மாணவ, மாணவிகள் 'கலக்கல்' கலை நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்முறையாக மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள், ஊழியர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கல் என குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு, சுதந்திரதின விழா நாட்களில் கமிஷனர், மண்டல சேர்மன்கள், அதிகாரிகள் முன்னிலையில் மேயர் தேசியக்கொடி ஏற்றிய பின்பு பாளை. ..சி., மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடக்கும் விழாவில் அனைவரும் பங்கேற்பது வழக்கம். இம்முறையை மாற்றி இந்த ஆண்டு முதல் குடியரசு தினத்தை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், ஊழியர்கள், அலுவலர்களுக்கு பரிசு, அணிவகுப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டது.

முதல்முறையாக நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று குடியரசு தினவிழா கோலாகலமாக நடந்தது. மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் தேசியக்கொடி ஏற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அவர் பேசும் போது, ""நாடு விடுதலை பெற உழைத்த தலைவர்களின் தியாகத்தை நினைவில் கொள்ள வேண்டும். நாடு சுதந்திரம் பெற்ற பின் மற்ற நாடுகளை போல இல்லாமல் மதச்சார்பற்ற அரசியல் சாசன சட்டம் இயற்றப்பட்டது. அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். பல்வேறு இன, மொழி, கலாச்சாரம் சார்ந்த மக்கள் வாழும் நாடாக நம் நாடு உயர்ந்து விளங்குகிறது.

Last Updated on Wednesday, 27 January 2010 06:30
 

பெங்களூர் மாநகராட்சித் தேர்தல் தமிழ் அமைப்புகள் நாளை ஆலோசனை

Print PDF

தினமணி 25.01.2010

பெங்களூர் மாநகராட்சித் தேர்தல் தமிழ் அமைப்புகள் நாளை ஆலோசனை

பெங்களூர், ஜன.24: பெங்களூர் மாநகராட்சித் தேர்தலில் தமிழர்களின் நிலை என்ன என்பது குறித்து கர்நாடகத் தமிழ் அமைப்புகளின் கலந்துரையாடலுக்கு செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்துள்ளது கர்நாடகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

இதுகுறித்து குழுவைச் சேர்ந்த தேவதாசு வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் இருந்து பெங்களூர் பிரிக்கப்பட்ட பிறகு இங்கு பல்லாண்டு காலமாக வசித்து வரும் தமிழர்களுக்கு அரசியல், சமூக மற்றும் கல்வி, வாழ்வுரிமை போன்றவை மறுக்கப்பட்டு வருகிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெரும்பாலான பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை.

எந்தவோர் அரசியல் கட்சியும் தேர்தல்களில் தமிழர்களை வேட்பாளர்களாக அறிவிக்கவில்லை. தமிழகத்தில் பல பகுதிகளில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது போன்றவை துணை ஆட்சி மொழிகளாக உள்ளன. அங்கு மொழிச் சிறுபான்மையினர் முழு உரிமையோடு வாழ்கிறார்கள்.

ஆனால் கர்நாடகத்தில் வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள். கடந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆணித்தரமான முடிவெடுத்ததால்தான் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு பாஜக ஆட்சி அமைந்தது. அல்சூரில் 18 ஆண்டுகளாக மூடிக் கிடந்த திருவள்ளுவர் சிலையைத் திறக்க முடிந்தது.

எனவே, வரும் மாநகராட்சித் தேர்தலில் கட்சிக்கு அப்பாற்பட்டு வட்டார வாரியாக தகுதி, வெற்றி வாய்ப்புள்ள தமிழர்களை ஆதரிப்பது என்பது குறித்து விவாதிக்க கலந்துரையாடல் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. சிவாஜி நகர் பஸ் நிலையம் எதிரே உள்ள ராம்பிரசாத் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் துவங்குகிறது. இதில் அனைத்து தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்ள வேண்டும். ஜெர்மனி தமிழர் பழ.விஸ்வநாதன், . நகைமுகன், முருகேசன், சென்னையைச் சேர்ந்த பாண்டியன் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Last Updated on Monday, 25 January 2010 07:12
 

கடையநல்லூரில் மர்மக் காய்ச்சல்: ரூ. 10 லட்சத்தில் தடுப்பு நடவடிக்கைகள்

Print PDF

தினமணி 25.01.2010

கடையநல்லூரில் மர்மக் காய்ச்சல்: ரூ. 10 லட்சத்தில் தடுப்பு நடவடிக்கைகள்

அம்பாசமுத்திரம், ஜன.23; திருநல்வேலி மாவட்டம், கடையநல்லூரில் பரவி வரும் மர்மக் காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைக்கு இதுவரை சுமார் ரூ. 10 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக நகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த மாதத்தில் தொடங்கிய இக் காய்ச்சல் இன்னும் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே காய்ச்சல் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு இதுவரை ரூ. 10 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 41 நாள்களுக்கு இரண்டு கொசுப் புகை அடிக்கும் இயந்திரத்துக்காக ரூ. 61,500 செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், திண்டுக்கல்லில் இருந்து வரவழைக்கப்பட்டு 3 நாள்களுக்கு கொசுப் புகை அடிக்கப்பட்ட வகையில் ரூ. 38 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. இந்தக் காய்ச்சலைத் தொடர்ந்து அதிகாரிகளின் அறிவுரையின் பேரில் நியமிக்கப்பட்டுள்ள மஸ்தூர் பணியாளர்களுக்கு இதுவரை ரூ. 2.64 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்திடவும், மருத்துவ முகாம்கள் மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்களுக்காகவும் சுமார் ரூ. 2.30 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக நகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இருந்தாலும் பரவி வரும் காய்ச்சலுக்கான காரணத்தை அறிய முடியாமல் பொதுமக்கள் பெரிதும் வேதனையடைந்து வருகினறனர்.

Last Updated on Monday, 25 January 2010 06:47
 


Page 695 of 841