Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தமிழகத்தில் இருக்கும் நகராட்சி பகுதிகளில் மின்சாரம் ஒழுங்குபடுத்துவதற்கான திட்டம் அதிகாரி தகவல்

Print PDF

தினதந்தி 18.01.2010

தமிழகத்தில் இருக்கும் நகராட்சி பகுதிகளில் மின்சாரம் ஒழுங்குபடுத்துவதற்கான திட்டம் அதிகாரி தகவல்

R-ZL†‡¥ E•[ SLWÖyp Th‡L¸¥ -ÁNÖW• JµjhT|†‰YR¼LÖL U†‡V AWr -LÙT¡V ‡yP†ÛR «ÛW«¥ ŒÛ\ÚY¼\ E•[‰.

-Á«ÂÚVÖL qWÛU"

U†‡V AWr ™X• R-ZL†‡¥ E•[ 112 SLWÖyp Th‡L¸¥ E•[ EVŸ Aµ†R -ÁTÖÛR›Û] qWÛU" ÙNšY‰ U¼¿• p½V ‡\Á ÙLցP A‡L G‚eÛL›XÖ] "‡V -Á UÖ¼½LÛ[ JªÙYÖ£ -ÁL•T†‡¨• AÛUT‰ ÚTÖÁ\ -Á «ÂÚVÖL†‡Û] qWÛUTR¼LÖL J£ ‡yP• RVÖ¡eLTy|•[‰. CR¼LÖL SLWÖyp Th‡L¸¥ -ÁYÖ¡V EVŸ A‡LÖ¡L• Bš° T‚›¥ ÚSWzVÖL D|Ty|•[]Ÿ. C‡¥ JªÙYÖ£ SLŸ Th‡L¸¨• ÚRÛYT|• -ÁUÖ¼½L•, "‡V -ÁTh‡L• AÛU†R¥ BfV Bš°L• SÛPÙT¼¿ Y£fÁ\‰.

-ÁNÖW ‡yP• 2003-• BzÁTz H¼L]ÚY C†‡yP• B‹‡W UÖŒX†‡¥ p\TÖL ÙNV¥T|†RTy| Y£fÁ\‰. R-ZL†‡¥ C†‡yP• ÙRÖPŸTÖL Bš° ˜zYÛP‹R‰•, ‡yP A½eÛL RVÖ¡eLTy| U†‡V AWreh AĐ‘ J"R¥ ÙT\Ty| 2 B|L¸¥ C†‡yP• ÙNV¥T|†RTPC£ef\‰.

¤.100 ÚLÖz

ÙLÖÛPeLÖ]¥ SLŸ Th‡L¸¥ C†‡yP†‡¼LÖ] Bš° T‚L• SP‹‰ Y£fÁ\‰. C‡¥ SL¡¥ T¥ÚY¿ CPjL¸¥ -ÁUÖ¼½L• AÛUT‰, EVŸ Aµ†R -ÁTÖÛR qWÛU" ÚTÖÁ\ T‚Lºeh ¤.100 ÚLÖz ÚRÛY G] U‡‘PTy|•[RÖL -ÁYÖ¡V A‡LÖ¡L• ÙR¡«†R]Ÿ.

ÚU¨• U†‡V AWpÁ C†‡yP• ŒÛ\ÚY¼\TyPÖ¥ SLWÖyp Th‡L¸¥ E•[ ÙT¡V -ÁUÖ¼½L• AL¼\T|•. Ajh A‡L ‡\Á ÙLցP -ÁUÖ¼½LÛ[ p½V A[«¥ -ÁL•TjL¸ÚXÚV AÛUeLT|•. CR]Ö¥ qWÖ] -Á«ÂÚVÖL• C£eh• GÁ¿ A‡LÖ¡L• ÙR¡«†R]Ÿ.

Last Updated on Monday, 18 January 2010 09:32
 

50 ஆண்டுகளாக வசித்துவரும் குடிசைவாசிகளை காலி செய்யும் திட்டத்தை கைவிடுமா மாநகராட்சி?

Print PDF

தினமணி 18.01.2010

50 ஆண்டுகளாக வசித்துவரும் குடிசைவாசிகளை காலி செய்யும் திட்டத்தை கைவிடுமா மாநகராட்சி?

பெங்களூர், ஜன.16: 50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் குடிசைவாசிகளை காலி செய்ய முயற்சிக்கிறது பெங்களூர் மாநகராட்சி.

÷பெங்களூர் ஓகலிபுரம் 2-வது கிராஸில் உள்ளது லட்சுமண்ராவ் நகர். இங்கு 33 குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளாக குடிசை போட்டு வசித்து வருகிறார்கள். இவர்கள் நீண்ட காலம் அப்பகுதியிலேயே வசித்து வருவதால் 1994-ம் ஆண்டு கர்நாடக அரசு அந்த குடிசைப்பகுதியை அங்கீகரித்தது. இதையடுத்து அரசின் வீட்டுவசதித் திட்டமான "ஆஷ்ரயா' திடத்தின் கீழ் குடிசைவாசிகளுக்கு வீடு கட்டிக் கொள்ள அனுமதி அளித்து, பட்டா போட்டுக் கொடுத்தது.

÷1994-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி இந்த பட்டா வழங்கப்பட்டது. தாங்கள் குடியிருக்கும் பகுதியை அரசு தங்களுக்கே வழங்கிவிட்டதை அறிந்த மகிழ்ந்த மக்கள் பிரியதர்ஷினி மகிளா மிலன் என்ற சங்கத்தை ஏற்படுத்தி அதன்மூலம் கடன் வாங்கி வீடு கட்ட முயற்சி எடுத்தனர்.

÷அவர்களது முயற்சிக்குப் பலன் கிடைத்தது. பெங்களூர் மாநகராட்சி வீடு கட்ட வரைவுத் திட்டத்துக்கு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து இப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு முறையாக வரியும் கட்டி வருகிறார்கள்.

÷இதைத்தொடர்ந்து பெங்களூர் மாவட்ட மகிளா மிலன் என்ற கூட்டுறவு சங்கம் மூலம் இவர்களது சங்கத்துக்கு ரூ.12.5 லட்சம் கடன் கிடைத்தது.

இந்த கடன் மூலம் 26 குடும்பத்தினர் வீடுகளை கட்டி முடித்துள்ளனர். தரைத்தளமும், முதல் மாடியும் கான்கிரீட்டால் கட்டி முடித்துள்ளனர். மற்றவர்கள் கட்டுமானப் பணியைத் துவங்கியுள்ளனர். மொத்தம் 300-க்கும் மேற்பட்டோர் இங்கு வசித்து வருகிறார்கள். கூட்டுறவுச் சங்கத்தில் வாங்கிய கடனை முறையாக திருப்பிச் செலுத்தி வருகிறார்கள்.

÷இந்நிலையில் திடீரென மாநகராட்சியில் இருந்து அனுப்பப்பட்ட நோட்டீஸ் இங்கு குடியிருப்போருக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. அந்த இடம் மாநகராட்சிக்குச் சொந்தமானது என்றும் ஒரு வாரத்தில் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து தங்களுக்கு அந்த இடம் பட்டா போட்டு கொடுக்கப்பட்டிருப்பதை ஆதாரத்துடன் மாநகராட்சி அதிகாரிகளிடம் காட்டியும் அதை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. வீடுகளை இடிப்பது என்ற முடிவில் மாற்றம் இல்லை என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டனர்.

÷இதையடுத்து மாநகராட்சி ஆணையர் பரத்லால் மீனா மற்றும் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் இந்த ஏழை மக்களுக்கு உதவ யாரும் முன்வரல்லை.

இதற்கிடையே வீடுகளை இடிக்கும் மாநகராட்சியின் முடிவுக்கு தடைவிதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் குடிசைவாசிகள் சங்கம் சார்பில் பொதுநலன் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கில் குடிசைவாசிகளுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.

இதையடுத்து குடிசைவாசிகள் சார்பில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.

÷இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி மாநகராட்சியிடமிருந்து மீண்டும் நோட்டீஸ் வந்தது. அதில் குடிசைவாசிகள் கட்டியிருக்கும் வீடுகள் இடித்துத் தள்ளப்படும் என மீண்டும் எச்சரித்து காலி செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

யாரும் உதவிக்கு வராத நிலையில் வங்கியில் வாங்கிய கடன் இன்னும் கட்டி முடிக்கப்படாத நிலையில் வீடுகளை இடிக்கும் மாநகராட்சியின் முடிவால் குடிசைவாசிகள் அச்சத்தில் உள்ளனர். நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற போராடி வருகிறார்கள்.

÷இதற்கிடையே குடிசைவாசி வீடுகளை இடிக்க முயற்சிக்கும் மாநகராட்சியின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை அங்கு வசிக்கும் குடிசைவாசிகள் அனைவரும் ராமச்சந்திரபுரம் 2-வது முக்கியச்சாலையில உள்ள காந்தி சிலை முன் தர்னா மேற்கொண்டனர்.

÷இதற்கிடையே லட்சுமண்ராவ் நகர் குடிசைப் பகுதியை காலி செய்துவிட்டு அங்கு பிரசவ மருத்துவமனை கட்ட மாநகராட்சித் திட்டமிட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

÷இதுகுறித்து அப்பகுதியில் குடியிருக்கும் பிரபாகர் என்பவர் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளாக இங்கு குடியிருந்து வருகிறோம். நான் பிறந்ததே இந்தக் குடிசையில் தான். பட்டா கொடுத்து அங்கீகரித்த மாநகராட்சியே இப்போது காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கே போவது? எனவே மாநகராட்சி தனது முடிவை கைவிட வேண்டும் என்றார்.

Last Updated on Monday, 18 January 2010 06:57
 

துப்பரவு பணிகளை மேற்கொள்ள தினக்கூலி பணியாளர்கள் நியமனம்

Print PDF

தினமலர் 18.01.2010

துப்பரவு பணிகளை மேற்கொள்ள தினக்கூலி பணியாளர்கள் நியமனம்

போடி:போடியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள தினக்கூலி அடிப்படையில் 40 பேரும், கொசுவை ஒழிக்கும் வகையில் மஸ்தூர் பணியாளர்கள் ஏழு பேரையும் நகராட்சி நிர்வாகம் நியமித்து பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. போடி நகராட்சியில் 80 துப்புரவு பணியாளர்களும், ஐந்து சுகாதார ஆய்வாளர்களும், எட்டு மேற்பார்வையாளர்களும் உள்ளனர். 33 வார்டுகள் அடங்கியுள்ளன.

துப்புரவு பணிகள் மேற்கொள்வதற்கு போதுமான அளவு துப்புரவு பணியாளர்கள் இல்லாததினால் குப்பை மற்றும் சாக்கடை அள்ளுவதில் சுணக்கம் ஏற்பட்டன. இதனால் கொசுத்தொல்லைகள் அதிகரித்து சுகாதாரகேடு ஏற்படுத்தி வந்தன.மேலும் டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவன் பலியானதையொட்டி, நகர் பகுதியை சுகாதாரம் காக்கும் வகையில் சாக்கடை மற்றும் குப்பைகள் அள்ளுவதற்கு தினக்கூலி அடிப்படையில் ஆண்கள் சுய உதவி குழுவை சேர்ந்த 40 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொசுவை ஒழிக்கும் வகையில் மலேரியா மஸ்தூர் பணியாளர்கள் ஏழு பேரும் நியமனம் செய்யப்பட்டு பகல் மற்றும் இரவு நேரங்களிலும் துப்புரவு பணிகள் மேற்கொள்வதில் நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் கொசு மருந்து அடிக்கும் கையடக்கமான புதிய பாக்கிங் மெஷின்கள் வாங்கப்பட்டு மருந்து அடிக்கப்பட்டு வருகின்றன. இதனால் நகரில் குப்பைகள் தேக்கம் ஒரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

Last Updated on Monday, 18 January 2010 06:45
 


Page 703 of 841