Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பத்மநாபபுரம் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

Print PDF

தினமணி 16.01.2010

பத்மநாபபுரம் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

தக்கலை, ஜன. 15: பத்மநாபபுரம் நகராட்சியில் தமிழ் புத்தாண்டு மற்றும் சமத்துவ பொங்கல் விழா நகராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நகர்மன்றத் தலைவர் அ.ரேவன்கில் தலைமை வகித்தார். ஆணையர் செல்லமுத்து, துணைத் தலைவர் முகமதுசலீம், பொறியாளர் சனல்குமார், சுகாதார அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர்மன்ற உறுப்பினர் கொச்சுகிருஷ்ணபிள்ளை வாழ்த்தி பேசினார். பின்னர் புதுப்பானையில் பொங்கலிடப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

பொங்கல் விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற கோலப்போட்டி பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு நகர்மன்றத் தலைவர் ரேவன்கில் பரிசுககளை வழங்கினார்.

நகர்மன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர் முருகேசன், சுகாதார மேற்பார்வையாளர்கள் மோகன், சிவகுமார், மகப்பேறு உதவியாளர் அன்னகுட்டி, மில்டன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

குறுந்தொழில் கூடங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

Print PDF

தினமணி 16.01.2010

குறுந்தொழில் கூடங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

கோவை, ஜன.13: கோவை வரதராஜபுரம் பகுதியில் 9 குறுந்தொழில்கூடங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இப் பிரச்னையில் மேயர் தலையிட்டு உரிய தீர்வுகாண வேண்டும் என்று கோயமுத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் தொழில்முனைவோர் சங்கம் (காட்மா) வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மேயர் ஆர்.வெங்கடாசலத்திடம், காட்மா தலைவர் எஸ்.ரவிக்குமார் புதன்கிழமை கொடுத்த மனு:

கோவை நகரில் இயங்கும் குறுந்தொழில்கூடங்களில் 90 சதவீதம் குடியிருப்பு பகுதிகளில் தான் இயங்கி வருகின்றன. இவற்றில் லேத் மிஷின், மில்லிங் மிஷின், சேப்பிங் மிஷின் உள்ளிட்ட இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன.இந்த இயந்திரங்களில் சுற்றுச்சூழலை பாதிக்கும் அளவுக்கு சப்தமோ அல்லது கழிவுநீரோ வெளியேறுவதில்லை. ஆனால், குடியிருப்புகளில் வசிக்கும் சிலர், குறுந்தொழில்கூடங்கள் மீது வேண்டுமென்றே புகார்களை எழுப்பி வருகின்றனர்.

தங்களது முன்விரோதங்களை மனதில் கொண்டு இதுபோன்ற புகார்களை அளித்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவம் வரதராஜபுரம் பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்டது. அப் பகுதியை சேர்ந்த சிலர் மாநகராட்சி அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் நகர்நலத்துறை சார்பில் 9 குறுந்தொழில்கூடங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நிறுவனங்களை வேறு இடத்துக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநில அரசு சார்பில் குறுந்தொழில்கூடங்களுக்கு தனி தொழிற்பேட்டை அமைத்துத்தர அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி ஏற்கெனவே சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கையிலும் அரசு ஈடுபட்டுள்ளது.

எனவே, குறுந்தொழில்பேட்டை அமைக்கும் வரை குறுந்தொழில்கூடங்களை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யக்கூடாது. இப்பிரச்னையில் மேயர் தலையிட்டு நியாயமான தீர்வுகாண வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

 

நகராட்சி ஊழியர்களுக்கு அரசே நேரடியாக சம்பளம் வழங்க வலியுறுத்தல்

Print PDF

தினமணி 16.01.2010

நகராட்சி ஊழியர்களுக்கு அரசே நேரடியாக சம்பளம் வழங்க வலியுறுத்தல்

புதுச்சேரி, ஜன. 15: புதுச்சேரி நகராட்சி ஊழியர்களுக்கு அரசே நேரடி சம்பளம் வழங்கவேண்டும் என கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

÷இங்கு அண்மையில் நடைபெற்ற புதுச்சேரி யூனியன் பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

÷தீர்மானங்கள்: அரசுத் துறையில் கிரேடு பே வழங்கியது போல நகராட்சியில் பணிபுரியும் டி பிரிவு ஊழியர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 6-வது ஊதியக் குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி விடுபட்ட அனைத்து ஆணைகளையும் வெளியிட வேண்டும். ÷நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு தாமதமின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களை நிரந்தரம் செய்யவேண்டும். தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் மஸ்தூர்களுக்கு சொந்த நிதியிலிருந்து சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.÷கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம். உதயகுமார், தலைவர் விநாயகவேல், துணைத் தலைவர்கள் பாலகுரு, குமரேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 


Page 704 of 841