Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சென்னை மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

Print PDF

தினமலர் 16.01.2010

சென்னை மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

சென்னை : சமத்துவ பொங்கல் விழா சென்னை மாநகராட்சியில் நேற்று கொண்டாடப் பட்டது. இதையொட்டி, சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு 62 லட்சம் ரூபாய் செலவில், சீருடைகளும் வழங்கப்பட்டன.

சென்னை மாநகராட்சி கட்டடத்தில் பொங்கல் திருநாளையொட்டி, சர்வ மதத் தலைவர்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப் பட்டது.விழாவிற்கு சென்னை மாநகர மேயர் சுப்ரமணியன் தலைமையில் நடந்தது. இதில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங் களை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் சென்னை மாநகர கமிஷனர் ராஜேஷ் லக்கானி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவையொட்டி, சென்னை மாநகராட்சியில் பணி புரியும் 12 ஆயிரத்து 186 பணியாளர்களுக்கு 62 லட்சம் ரூபாய் செலவில், இலவசமாக இரண்டு செட் சீருடைகள் வழங்கி மேயர் சுப்ரமணியன் பேசும் போது, ""சாதி, சமயமற்ற தமிழகத்தை காண வேண்டி உள்ளாட்சி அமைப்புகள் சமத்துவ பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியிருந்தார். இதன்படி, சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடத்தப்படுகிறது,'' என்றும் தெரிவித் தார்.சிறுவர், சிறுமியருக்கு உதவி: ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள "இனிய உதயம்' தொண்டு நிறுவனம் சார்பில், "தமிழா... தமிழா' என்ற பொங்கல் விழா கொண்டாடப் பட்டது.இதில் வடசென்னை தொகுதி எம்.பி., இளங்கோவன் (தி.மு..,), ஆதரவற்ற, எச்..வி., மற்றும் மனநலம் பாதிக்கப் பட்ட 300 குழந்தைகளுக்கு இலவச புத்தாடை மற்றும் சர்க்கரைப் பொங்கல் வழங்கி, வாழ்த்தி பேசினார்.விழா ஏற்பாடுகளை தொண்டு நிறுவனத்தின் சுஜாதா சேகர், கோமளா சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

 

ஆற்காடு நகராட்சிபணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

Print PDF

தினமலர் 13.01.2010

ஆற்காடு நகராட்சிபணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

ஆற்காடு:ஆற்காடு நகராட்சி பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.ஆற்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகராட்சி சேர்மன் ஈஸ்வரப்பன் தலைமை வகித்து, பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கி பேசினார்.நிகழ்ச்சிக்கு, நகராட்சி கமிஷனர் பாரிஜாதம், துணை சேர்மன் பொன்.ராஜசேகரன் முன்னிலை வகித்தனர்.

சுகாதார உதவி ஆய்வாளர் ராஜபாண்டியன் வரவேற்றார்.இந்நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர் பாக்கியம் மாதவன், உதவி ஆய்வாளர் முருகன், நகராட்சி கவுன்சிலர்கள் பூங்காவனம், ரகுநாதன், கஸ்தூரி, ஜீவமணி, வசந்தி, முன்னாள் கவுன்சிலர்கள் செல்வகணேசன், கோபு, சிவா, சுரேஷ், விவேகானந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 13 January 2010 06:46
 

வீட்டு பால்கனியில் துணி உலர்த்த தடை

Print PDF

தினகரன் 12.01.2010

வீட்டு பால்கனியில் துணி உலர்த்த தடை

மும்பை : அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடங்களில், வீட்டு பால்கனியில் துணிகளை உலர்த்தினால் அபராதம் விதிக்கும் மும்பை மாநகராட்சியின் புதிய திட்டத்துக்கு மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மும்பை நகரை அழகாக்க மாநகராட்சியும் மாநில அரசும் பல திட்டங்களை தீட்டி உள்ளன. சாலையின் நடுவே உள்ள மீடியனில் அழகிய பூச் செடிகளை வளர்ப்பது, நடைபாதைகளை அழகுபடுத்துவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சாலைகளை எவ்வளவுதான் அழகுபடுத்தினாலும், அடுக்குமாடி கட்டிடங்களில் குடியிருப்பவர்கள் சலவை செய்த துணிகளை வீட்டு பால்கனியில் உலர்த்துவது நகரத்தின் அழகையே கெடுப்பதாக அதிகாரிகள் கருதினர். இதனால், முக்கிய சாலைகளில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பால்கனிகளில் துணிகளை உலர்த்த தடை விதிக்க மாநகராட்சி திட்டமிட்டது.

இது தொடர்பான மாநகராட்சியின் பரிந்துரைக்கு மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, பால்கனிகளில் துணி உலர்த்த விரைவில் தடை விதிக்கப்படும் என்று மும்பை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தடையை மீறி வீட்டு பால்கனியில் துணிகளை உலர்த்தினால் அபராதம் விதிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

 


Page 705 of 841