Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

புதைச் சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க நகர்மன்றத்தில் வலியுறுத்தல்

Print PDF

தினமணி 12.01.2010

புதைச் சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க நகர்மன்றத்தில் வலியுறுத்தல்

தருமபுரி, ஜன. 11:தருமபுரி நகரில் நடைபெறும் புதைச் சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தருமபுரி நகர்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினர் நாட்டான்மாது வலியுறுத்தினார்.

தருமபுரி நகராட்சித் தலைவர் டி.சி.பி. ஆனந்தகுமார்ராஜா தலைமையில் நகராட்சி அறிஞர் அண்ணா மன்றத்தில் திங்கள்கிழமை சாதாரண கூட்டம் நடந்தது.

நகராட்சி பகுதியில் கொசுக்களை கட்டுப்படுத்த கொசு மருந்து உடனடியாக தெளிக்க வேண்டும்.

30-வது வார்டில் சுகாதாரப் பணிகளை முறையாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நகர்மன்ற உறுப்பினர்கள் விடுத்தனர்.

புதைச் சாக்கடை பணியை விரைந்து முடிக்க, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களை அழைத்து பேச உள்ளதாகவும், நகராட்சி பகுதியில் கொசு மருந்து தெளிக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் நகர்மன்றத் தலைவர் உறுதி அளித்தார். கூட்டத்தில் 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Tuesday, 12 January 2010 09:56
 

கால்வாயை நீட்டிக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 12.01.2010

கால்வாயை நீட்டிக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு

திருப்பூர் : வடிகால் வசதி முழுமை இல்லாமல், பாதியில் நின்ற சாக்கடை கால்வாய் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, நல்லூர் நகராட்சி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பொங்கல் திருநாளுக்கு பின், பணி துவங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.நல்லூர் நகராட்சி 11வது வார்டு அமர்ஜோதி நகர், .எஸ்., நகர் விரிவு, மூன்றாவது வீதியில், போதிய வடிகால் வசதி இல்லாமல் கழிவு நீர் தேங்கி வருகிறது. வீதியின் பாதியில் சாக்கடை கால்வாய் பணி நின்று, ரோட்டில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லை ஏற்பட்டு வருகிறது.

சில மாதங்களுக்கு முன், கே.என்.எஸ்., கார்டன் பகுதி சாக்கடை நீரும் இத்துடன் இணைந்ததால், நீர்தேக்கம் அதிகரித்துள்ளது.

ஓராண்டாக தொடர்ந்து வரும் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கழிவு நீர் தேக்கம் ஏற்படாமல் தடுக்கவும், பாதியுடன் நின்ற கால்வாயை நீட்டிக்கவும் நகராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கியுள்ளது.நகராட்சி தலைவி விஜயலட்சுமி கூறுகையில், ""செரங்காடு பகுதியில் வடிகால் வசதியை மேம்படுத்த 20 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. டெண்டர் கோரப் பட்டுள்ளது. பொங்கல் முடிந்ததும் பணி துவங்கும்.இப்பணியை மேற் கொள்வதால், அமர்ஜோதி நகர், செரங்காடு, பத்மினி கார்டன் பகுதிகளில் உள்ள 300 வீடுகள் பயன்பெறும்,'' என்றார்.

Last Updated on Tuesday, 12 January 2010 07:39
 

நாய்களுக்கு 'கு.க' செய்ய ஆபரேஷன் தியேட்டர்:மாநகராட்சி முடிவு

Print PDF
தினமலர் 12.01.2010

நாய்களுக்கு 'கு.' செய்ய ஆபரேஷன் தியேட்டர்:மாநகராட்சி முடிவு

வேலூர்:வேலூரில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்ய, பாலாற்றங்கரையில் ஆபரேஷன் தியேட்டர் கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.வேலூர் நகரில் சுற்றித்திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் நாய்கடியால் பாதிக்கப்படுவதாக மாநகர கவுன்சில் கூட்டத்தில், கவுன்சிலர்கள் தொடர்ந்து புகார்கள் கூறி வருகின்றனர். இதைத்தொடர்ந்து தெரு நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து கமிஷனர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நாய்களை பிடித்த பிறகு அவற்றுக்கு கருத்தடை ஆப்ரேஷன் செய்யவேண்டும். அறுவை சிகிச்சைக்கு பின் 5 நாட்கள் வரை அவற்றை பாரமரிக்க வேண்டும். இதற்காக வேலூர் கால்நடை மருத்துமனையில் போதிய வசதி இல்லை. எனவே பிடிபடும் நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய தனியாக இடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து கமிஷனர் செல்வராஜ் கூறுகையில், வேலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பாலாற்றை ஒட்டி நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கென கு.. ஆபரேஷன் தியேட்டர் கட்டப்பட உள் ளது. அதன் பிறகு எடுக்கப்படும் தொடர் நடவடிக்கை மூலம் நகரில் தெரு நாய்களின் எண்ணிக்கை படிப்படியாக கட்டுப்படுத்தப்படும்' என்றார

Last Updated on Tuesday, 12 January 2010 07:38
 


Page 706 of 841