Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ஒளி மறைக்கும் மரக்கிளைகள் அகற்ற நகராட்சி உத்தரவு

Print PDF

தினமலர் 12.01.2010

ஒளி மறைக்கும் மரக்கிளைகள் அகற்ற நகராட்சி உத்தரவு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள தெருக்களின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த மரங்கள் தற்போது வளர்ந்த நிலையில் தெருவிளக்குகளின் வெளிச்சத்தை மறைத்து விடுவதால் வீதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் மரக்கிளைகள் விளக்குகளின் மீது மோதும் போது அடிக்கடி லைட்டுகள் உடைந்து விடுகிறது. இப்பிரச்னை தொடர்பாக பொதுமக்கள் நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணனிடம் புகார் செய்தனர். தொடர்ந்து நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் ஆர்டிஓ பாஸ்கரன் கவனத்திற்கு மரக்கிளைகளால் ஏற்படும் இன்னல்கள் குறித்து பொதுமக்களின் புகாரை கொண்டு சென்றார். இதனை தொடர்ந்து ஆர்டிஓ பாஸ்கரன் அனுமதியளித்ததின் பேரில் தெரு லைட்டுகளை மறைத்து வரும் மரக்கிளைகளை அகற்றுவதற்கு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

Last Updated on Tuesday, 12 January 2010 07:24
 

ரூ. 24 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட ராஜாஜி பூங்கா திறப்பு

Print PDF

தினகரன் 11.01.2010

ரூ. 24 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட ராஜாஜி பூங்கா திறப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் ரூ.24 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட ராஜாஜி பூங்காவை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜாஜி பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்கா ரூ.24 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக அங்கு 195 மீட்டர் நீளத்துக்கு சுற்றுசுவர் எழுப்பப்பட்டுள்ளது. 250 மீட்டர் நீளத்துக்கு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 200 சதுர அடியில் கொரியன் கிராஸ் எனப்படும் புதிய புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் சிறுவர், சிறுமியர்களுக்கான பல வகையான நவீன விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழாவில் கலெக்டர் பிரகாஷ் தலைமை வகித்தார். அமைச்சர் கீதாஜீவன் புதுப்பிக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைத்தார். துறைமுக பொறுப்பு கழக உறுப்பினர் பெரியசாமி, மேயர் கஸ்தூரி தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி கமிஷ்னர் குபேந்திரன், ஏஎஸ்பி அனில்குமார்கிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 11 January 2010 12:23
 

தூய்மை பணிபுரிவோர் வாரியம் தொடக்கம்

Print PDF

தினகரன் 11.01.2010

தூய்மை பணிபுரிவோர் வாரியம் தொடக்கம்

கடலூர் : கடலூர் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

தூய்மை பணிபுரிவோருக்கு தூய்மை பணிபுரிவோர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பணிகளை தாட்கோ மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாரியத்தின் உறுப்பினர்களாக சேர உறுப்பினர் விண்ணப்பங்களை நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர் மூலம் தாட்கோ, மாவட்ட மேலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஆனால் தற்போது தாட்கோ அலுவலர்களே அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் நேரிடையாக வந்து சிறப்பு முகாம்கள் நடத்தி உறுப்பினர் சேர்க்கை மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறும் விண்ணப்பங்களை அளிக்க உள்ளனர்.

எனவே அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பணிபுரியும் தூய்மை பணிபுரிவோர் அனைவரும் அவர்களின் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு உரிய படிவங்களை பூர்த்தி செய்து பயனடைய வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது

Last Updated on Monday, 11 January 2010 12:21
 


Page 707 of 841