Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

போலீசுக்கு நகராட்சி பாராட்டு

Print PDF

தினமலர் 11.01.2010

போலீசுக்கு நகராட்சி பாராட்டு

வாலாஜாபேட்டை:வாலாஜாபேட்டை நகராட்சி சார்பில் இன்ஸ் பெக் டர் சீதாராமுக்கு பாராட்டு விழா நடந்தது.வாலாஜாபேட்டை போக் குவரத்து நெரிசலை கட்டுப் படுத்தவும், விபத்துக் களின்றி பொதுமக்களை பாதுகாக்கவும் நகராட்சி, தேசியநெடுஞ்சாலை துறை, வியாபாரிகளுடன் இணைந்து அனைத்துக் கட்சியினரின் ஒத்துழைப்புடன் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பேரிகாட் அமைக்கும் பணியை போலீசார் செய்து வருகின்றனர்.

இதற்காக கல்வி நிறுவன ங்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் நன் கொடை வழங்கி வருகின்றனர். இப்பணிமுடிய மேலும் 500 பேரிகாட் தேவைப்படுகிறது.மேலும் பொங்கலுக்கு பிறகு முழு அளவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நடைபாதைகள் அமைத்து, பேரிகாட் நிறுவும் பணி முழுமையடையும். போலீசாரின் இந்த பணியை பாராட்டும் வகையில் நேற்று நகராட்சிசார்பில் இன்ஸ்பெக்டர் சீத்தாராமை பாராட்டி, அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சேர்மன் நித்தியானந்தம் தலைமை வகித்தார். கமிஷனர் பாரிஜாதம் முன்னிலைவகித்தார். இதில் மதிமுக நகர செயவாளர் சுந்தரமூர்த்தி முன்னாள் மாவட்ட காங்., தலைவர் பாலகிருஷ்ணன், நகர காங்., பொதுச் செயலாளர் பூமணி, கவுன்சிலர்கள் ஆறுமுகம், கற்பகம், ரமேஷ், சாதிக்பாஷா, சரவணன் மற்றும் சிவந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.இன்ஸ்பெக்டர் சீத்தாராம் நன்றி கூறினார்.

Last Updated on Monday, 11 January 2010 10:54
 

தூத்துக்குடியில் ரூ. 87 லட்சம் செலவில் 7 பூங்காக்கள் சீரமைப்பு

Print PDF

தினமணி 11.01.2010

தூத்துக்குடியில் ரூ. 87 லட்சம் செலவில் 7 பூங்காக்கள் சீரமைப்பு

தூத்துக்குடி, ஜன. 10: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 7 பூங்காக்கள் ரூ. 87 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளதாக மாநில சமூக நலத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் உள்ள பழமையான மாநகராட்சி ராஜாஜி பூங்கா ரூ. 24 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதில், புல்வெளி, நடைமேடை, அலங்கார நுழைவாயில், சுற்றுச்சுவர், கிரானைட் இருக்கைகள், சிறுவர் விளையாட்டு சாதனங்கள் போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த பூங்காவில் அதிகளவில் மக்கள் கூடுவார்கள். ஆதலால் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டன.

இதன் திறப்பு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

பூங்காவை திறந்து வைத்து அமைச்சர் பி. கீதா ஜீவன் பேசியது: பூங்காவை சுத்தமாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் 7 பூங்காக்கள் ரூ. 87 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி ரோச் பூங்காவில் உடற்பயிற்சி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் திறந்து வைக்கப்படும் என்றார் அமைச்சர். பூங்காவிற்கான கல்வெட்டை மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் திறந்து வைத்தார்.

விழாவில், மேயர் இரா. கஸ்தூரி தங்கம், துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர் என். பெரியசாமி, துணை மேயர் தொம்மை ஜேசுவடியான், ஆணையர் பெ. குபேந்திரன், பொறியாளர் ராஜகோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 11 January 2010 07:05
 

நவீன எரிவாயு தகன மேடை திறப்பு : மாநகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF

தினமலர் 10.01.2010

நவீன எரிவாயு தகன மேடை திறப்பு : மாநகராட்சி கமிஷனர் தகவல்

மதுரை : மதுரையில், நவீன எரிவாயு தகன மேடை திறப்பது குறித்து, ஆலோசனைக் கூட்டம் கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தலைமையில் நடந்தது.

பின், கமிஷனர் பத்திரிகையாளர் களிடம் பேசியதாவது: மாநகராட்சி மூலம் 2.50 கோடி மதிப்பீட்டில் எரிவாயு தகன மேடை ஜன., 19ல் திறக்கப்படவுள்ளது. இதில் தியான மண்டபம், முடி எடுக்கும் இடம், கார் நிறுத்தும் இடம், குடிநீர் வசதி, தொலைபேசி வசதி, கழிப்பறை, குளியலறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

ஆம்புலன்ஸ் வசதியுடன் சடலத்தை கொண்டு வருதல், மொட்டை அடித்தல், இறப்பு சான்றிதழுடன், சீருடை பணியாளர்கள் மூலம் தகனம் செய்ய 1350 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு சடலங்களை எரியூட்டும் வசதி உள்ளது. இந்த மயானம் மதுரை டவுன் ரோட்டரி கிளப் மூலம் பராமரிக்கப்படவுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக 209 0900 தொலைபேசி எண்ணும் வழங்கப் பட்டுள்ளது என, தெரிவித்தார்.

கூட்டத்தில், தலைமை பொறியாளர் சக்திவேல், நகர்நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியன், உதவி கமிஷனர்கள் பாஸ்கரன், தேவதாஸ், அங்கையற் கண்ணி, ராஜகாந்தி, சிவன் மற்றும் நிர்வாகப் பொறியாளர்கள் தாமோதரன், மதுரம், சேதுராமலிங்கம் உதவி நகரமைப்பு அலுவலர் பழனிச்சாமி, உதவி நகர் நல அலுவலர் டாக்டர் யசோதமணி மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 708 of 841