Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சி தேர்தல் நடத்தை விதிகள் ஜன.15 முதல் அமல்

Print PDF

தினமணி 08.01.2010

மாநகராட்சி தேர்தல் நடத்தை விதிகள் ஜன.15 முதல் அமல்

பெங்களூர், ஜன.7: மாநகராட்சித் தேர்தலை திட்டமிட்டபடி பிப்ரவரி 21-ம் தேதி நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜனவரி 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

பெங்களூர் மாநகராட்சி தேர்தல் வார்டு இட ஒதுக்கீடு தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்து புதிதாக இட ஒதுக்கீடு பட்டியலைத் தயார் செய்து அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் அரசு சார்பில் ஓர் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் தேர்தலை மூன்று மாதம் தள்ளிவைக்க கோரியிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் புதன்கிழமை உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பளித்தது. அதன்படி நவம்பர் 30-ம் தேதி அரசு வெளியிட்ட இட ஒதுக்கீடு பட்டியல் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த தேர்தல் அட்டவணையில்தேர்தலை நடத்த உத்தரவிட்டது.

இதையடுத்து தேர்தல் கால அட்டவணையை மாநில தேர்தல் ஆணையர் சிக்கமத் அறிவித்தபோது தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜனவரி 15-ம் தேதி முதல் அமலாகும் என்று அறிவித்தார். இப்போது மாநகராட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜனவரி 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் பிப்ரவரி 1-ம் தேதி துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 8-ம் தேதி கடைசிநாளாகும்.

பிப்ரவரி 9-மம்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. போட்டியிலிருந்து விலக விரும்புவோர் வேட்புமனுவை வாபஸ் பெற பிப்ரவரி 11-ம் தேதி கடைசிநாளாகும். பிப்ரவரி 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிப்ரவரி 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

Last Updated on Friday, 08 January 2010 10:31
 

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளில் திரியும் கால்நடைகள் சிறைபிடிப்பு

Print PDF

தினமணி 08.01.2010

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளில் திரியும் கால்நடைகள் சிறைபிடிப்பு

திருவண்ணாமலை, ஜன. 7: திருவண்ணாமலை நகர சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை சிறைபிடிக்க நகராட்சி முடிவு செய்துள்ளது.

ஆன்மீக நகரான திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை வழிபடவும், கிரிவலம் செல்லவும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் அவை முட்டி விடுவதால், பக்தர்கள் காயமடைகின்றனர்.

இதனால் நகரில் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நகராட்சித் தலைவர் இரா.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

நகராட்சி ஆணையர் எஸ்.சேகர், நகர்நல அலுவலர் ராம்குமார், பிராணிகள் வதை தடுப்பு சங்க நிர்வாகிகள் நரசிம்மன், அரவிந்த், எக்ஸ்னோரா இந்திரா செüந்திரராஜன், கவுன்சிலர்கள் ரவி, பிரியா விஜயரங்கன், ஜமீலாபீவி, முன்னாள் கவுன்சிலர் சேட்டு முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். வருங்காலத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணியை பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு நகராட்சி, காவல்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும்.

மேலும் இரண்டாம் முறையாக பிடிக்கப்படும் கால்நடைகளை பொது ஏலத்தில் விட வேண்டும். முதல்முறையாக பிடிக்கப்படும் கால்நடைகளை மூன்று நாள்களுக்கு அபராதம் செலுத்தி அவற்றின் உரிமையாளர்கள் அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் வேலூரில் உள்ள கோசாலையில் அவற்றை ஒப்படைப்பது, சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் குறித்து புகார் செய்ய பிராணிக் வதை தடுப்புச் சங்க ஆய்வாளர் செல்போன்-98401 22654, நகராட்சி ஆய்வாளர்கள் செல்போன்-93442 89438, 93442 89349 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் ஆகிய முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

கால்நடைகளை நகரில் சுற்றித் திரியவிடாமல் அவற்றின் உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என நகராட்சித் தலைவர் ஸ்ரீதரன் கேட்டுக் கொண்டுóள்ளார்.

Last Updated on Friday, 08 January 2010 10:26
 

தூய்மை பணிபுரிவோர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்

Print PDF

தினமணி 08.01.2010

தூய்மை பணிபுரிவோர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி, ஜன. 7: தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பணிபுரிவோர் நலவாரியத்தில் உறுப்பினராகச் சேர தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி, இதர நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரிந்து வரும் துப்புரவுப் பணியாளர்களுக்கு தாட்கோ மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் துப்புரவு பணியாளர் நலவாரிய நிதியில் இருந்து வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரிந்து வரும் துப்புரவுப் பணியாளர்கள் அந்தந்த அலுவலகத்தில் உள்ள அலுவலரை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அவ்வலுவலகத்திலேயே கொடுத்து உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம்.

இதற்கான சிறப்பு முகாம் கடந்த 4-ம் தேதி முதல் அனைத்து அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது. வரும் 9-ம் தேதி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறும்.

Last Updated on Friday, 08 January 2010 10:24
 


Page 709 of 841