Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மெரீனாவை பாதுகாக்க 67 பணியாளர் நியமனம்

Print PDF

தினமலர் 07.01.2010

மெரீனாவை பாதுகாக்க 67 பணியாளர் நியமனம்

சென்னை : "மெரீனா கடற்கரையை பராமரிக்கவும், கண்காணிக்கவும் உதவி பொறியாளர் தலைமையில் 67 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்' என, மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி 94வது வார்டு, லாயிட்ஸ் காலனியில், இலவச கலர், "டிவி' வழங்கும் நிகழ்ச்சியில், மேயர் சுப்ரமணியன் பேசியதாவது:மெரீனா கடற்கரை 26 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு சமீபத்தில், முதல்வர் திறந்து வைத்தார். மெரீனா கடற்கரையை தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்க, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.கடற்கரை பூங்காக்களில் உள்ள புற்களை வெட்டவும், மரக்கிளைகளை ஒழுங்கு செய்யவும், நடைபாதைகளை சுத்தம் செய்யவும், 10 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் நவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.மெரீனா கடற்கரையை பராமரிக்கவும், கண்காணித்துக் கொள்ளவும் உதவி பொறியாளர் தலைமையில் 67 பணியாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். இதில் 52 பணியாளர்கள், 14 இரவு காலவர்கள் இடம் பெறுவர்.இவ்வாறு மேயர் பேசினார்.

Last Updated on Thursday, 07 January 2010 06:20
 

துப்புரவு பணியாளர்களுக்கு அழைப்பு'

Print PDF

தினமலர் 07.01.2010

துப்புரவு பணியாளர்களுக்கு அழைப்பு'

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துக்களில் நிரந்தர மற்றும் தற்காலிகமாக பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் ""தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை சிறப்பு முகாம்'' அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் வரும் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் நலவாரியத்தில் பதிவு செய்யாத பணியாளர்கள் பதிவு செய்து பயனடையலாம் என கலெக்டர் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்..

Last Updated on Thursday, 07 January 2010 06:16
 

நலவாரிய உறுப்பினர் சேர்க்கை: துப்புரவு பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்

Print PDF

தினமணி 06.01.2010

நலவாரிய உறுப்பினர் சேர்க்கை: துப்புரவு பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, ஜன.5: தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியத்தில் உறுப்பினராகச் சேர துப்புரவு பணியாளர்கள் தாட்கோ அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட ஆட்சியர் ஆர்.சுடலைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூய்மைப் பணிபுரிவோர் அனைவரும் இதில் உறுப்பினராகலாம். சூரம்பட்டி மற்றும் பெரியசேமூர் நகராட்சிகளில் புதன்கிழமையும் (ஜன.6), ஈரோடு மாநகராட்சி மற்றும் பவானி நகராட்சியில் வரும் 8-ம் தேதியும், கோபி, சத்தி மற்றும் புஞ்சை புளியம்பட்டி நகராட்சிகளில் 9-ம் தேதியும் உறுப்பினர் சேர்க்கைக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

நகராட்சி அலுவலகங்களில் இதற்கான விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளரை 0424-225 9453 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Last Updated on Wednesday, 06 January 2010 10:08
 


Page 714 of 841