Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

துறைமங்கலத்தில் சமுதாய கூடம் திறப்பு

Print PDF

தினமலர் 06.01.2010

துறைமங்கலத்தில் சமுதாய கூடம் திறப்பு

பெரம்பலூர் : பெரம்பலூர் துறைமங்கலத்தில் ரூ. 12லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய கூட திறப்பு விழா நடந்தது.பெரம்பலூர் துறைமங்கலத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12லட்சம் மதிப்பில் புதிதாக சமுதாய கூடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு நகராட்சி தலைவர் ராஜா தலைமை வகித்தார். துணை தலைவர் முகுந்தன், ஆணையர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எம்எல்ஏ ராஜ்குமார் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பேசுகையில், இந்த சமுதாய கூடத்திற்கு மேல் மாடி கட்டவும், சமையலறை கட்டவும் வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கப்படும் என்றார். விழாவில் நகராட்சி கவுன்சிலர்கள் கண்ணகி, மாரிக்கண்ணன், அப்துல்பாரூக், சரவணன், ஜெய்குமார், ரகமத்துல்லா, திமுக மாவட்ட பிரதிநிதி ஜெய்சங்கர், ஆசிரியர் ஆனந்தராஜ் ஆகியோர் பேசினர். முன்னதாக பெரம்பலூர் வடக்குமாதவி சாலையிலும், துறைமங்கலத்திலும் புதிதாக ரேஷன் கடைகளை எம்எல்ஏ ராஜ்குமார் திறந்து வைத்தார்.நிகழ்ச்சிகளில் மாவட்ட வழங்கல் அலுவலர் முகம்மது ஆரிப், கூட்டுறவு துணை பதிவாளர் ஜெயராமன், தனி அலுவலர் அரப்பலி, சார்பதிவாளர்கள் கோபால கிருஷ்ணன்,முருகன், விற்பனையாளர் ராகவன் மற்றும் திமுக பிரதிநிதிகள் அன்பு, குமார், சுந்தரராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

மேலூர் ரயில்வே ஸ்டேஷன் : உழவர்சந்தை அருகே இடமாற்றம் : நிலம் வழங்க தூத்துக்குடி மாநகராட்சி ரெடி

Print PDF

தினமலர் 06.01.2010

மேலூர் ரயில்வே ஸ்டேஷன் : உழவர்சந்தை அருகே இடமாற்றம் : நிலம் வழங்க தூத்துக்குடி மாநகராட்சி ரெடி

தூத்துக்குடி: தூத்துக்குடி மேலூர் ரயில்வே ஸ்டேஷனை புதிய பஸ் ஸ்டாண்ட் உழவர்சந்தை அருகே மாற்றுவதற்கு மாநகராட்சிக்குரிய இடத்தை ரயில்வே நிர்வாகத்திற்கு அரசின் சிறப்பு அனுமதி பெற்று வழங்கலாம் என்று மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. தூத்துக்குடி மேலூர் ரயில்வே ஸ்டேஷனால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் இந்த ரயில்வே ஸ்டேஷனை புதிய பஸ் ஸ்டாண்ட் உழவர்சந்தை அருகே கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் போக்குவரத்து நெருக்கடி குறையும் என்கிற கருத்து பரவலாக இருந்ததால் இதற்கு எல்லா தரப்பு மத்தியிலும் ஆதரவு இருந்ததாக கூறப்படுகிறது.

அதே சமயம் உழவர்சந்தை அருகே ரயில்வே ஸ்டேஷன் போக வேண்டும் என்றால் மாநகராட்சிக்குரிய இடத்தை ரயில்வே நிர்வாகத்திற்கு நில உரிமை மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. தெற்கு ரயில்வே நிர்வாகமும் இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டருக்கும் கடிதம் எழுதினார். இதனை தொடர்ந்து இது சம்பந்தமாக கலெக்டர் மாநகராட்சி நிர்வாகத்திற்கு இது குறித்து கடிதம் எழுதினார்.

மேலூர் ரயில்வே ஸ்டேஷனை உழவர்சந்தை அருகே இடமாற்றம் செய்வதற்கு வேண்டியுள்ள மாநகராட்சிக்குரிய 3 ஆயிரத்து 400 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இடம் மாநகராட்சி பராமரிப்பில் உள்ள திட்ட சாலையாக உள்ளது. இந்த சாலை தற்போது போக்குவரத்து மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரதான உபயோக சாலையாக உள்ளது. பொது உபயோக இடம், பூங்கா, விளையாடுமிடம் ஆகியவற்றை அந்தந்த பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், வேறு உபயோகத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே ரயில்வே நிர்வாகம் கோரியுள்ள 3 ஆயிரத்து 400 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இடத்தினை ரயில்வே நிர்வாகத்திற்கு நில உரிமை மாற்றம் செய்வது தொடர்பாக அரசின் சிறப்பு அனுமதி பெற்று, அரசு விதிகளுக்கு உட்பட்டு ரயில்வே நிர்வாகத்திற்கு இடம் வழங்க மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அரசின் முடிவு வந்த பிறகு மேலூர் ரயில்வே ஸ்டேஷன் இடமாறுவது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் துவங்கும் என்று கூறப்படுகிறது.

Last Updated on Wednesday, 06 January 2010 06:54
 

நன்னிலம் பேரூராட்சிக்கூட்டம்

Print PDF

தினமலர் 06.01.2010

நன்னிலம் பேரூராட்சிக்கூட்டம்

நன்னிலம் : நன்னிலம் பேரூராட்சிக் கூட்டம் தலைவர் சரஸ்வதி பாலு தலைமையில் நடந்தது.கூட்டத்தில் நவம்பர் 2009ம் மாதத்தில் நடந்த பிறப்பு, இறப்பு கணக்குகள் மற்றும் பேரூராட்சி வரவு, செலவு, சன்னாநல்லூர் வடக்கு ஆதிதிராவிட தெருவில் ஒருங்கிணைந்த தேசிய குடிசை மேம்பாடு திட்டத்தின் கீழ் 25 வீடுகளுக்கு மதிப்பீடு மற்றும் விபரப்பட்டியல் ஆகியவற்றை அங்கீகரிப்பது, பொது சுகாதார பிரிவில் பழுதடைந்துள்ள சைக்கிள் ரிக்ஷாக்களை சீரமைப்பது, பேரூராட்சி அலுவலக கட்டடம் பழுதடைந்துள்ளதால் புதிதாக அலுவலக கட்டடம் கட்ட மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி சென்னை பேரூராட்சி இயக்குனருக்கு கடிதம் அனுப்புவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Wednesday, 06 January 2010 06:50
 


Page 715 of 841