Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ரூ.1 கோடியில் கட்டப்படும் மின்தகன மேடை பிப்ரவரியில் செயல்படும்

Print PDF

தினமணி 05.01.2010

ரூ.1 கோடியில் கட்டப்படும் மின்தகன மேடை பிப்ரவரியில் செயல்படும்

விழுப்புரம், ஜன. 4: விழுப்புரம் நகராட்சி சார்பில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மின்தகன மேடை பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் செயல்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

÷ரோட்டரி சங்கத்துடன் இணைந்து நகராட்சி சார்பில் கே.கே.சாலையில் உள்ள மயானத்தில் ரூ.1 கோடியில் தனியாக மின்தகன மேடை அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்தப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. தற்போது தகன மேடையைச் சுற்றி பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது.

÷இப்பணியை திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் கூறுகையில், வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பணிகள் முடிக்கப்பட்டு செயல்படத் துவங்கும் என்று தெரிவித்தார். மேலும் இச்சாலையில் அமைக்கப்பட்டுவரும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து விழுப்புரம் கிழக்குப் பாண்டி சாலையில் உள்ள கிறிஸ்தவ ஆலய வாயிலின் அருகே உள்ள பயணிகள் நிழற்குடையை வேறு இடத்துக்கு மாற்றியமைக்கும்படி தெரிவித்தார்.

÷அவருடன் ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி, நகராட்சி ஆணையர் மற்றும் அரசு அலுவலர்கள், ரோட்டரி திட்டக் குழுத் தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Last Updated on Tuesday, 05 January 2010 10:38
 

நாகர்கோவிலில் 25 நாய்கள் பிடிக்கப்பட்டன

Print PDF

தினமணி 05.01.2010

நாகர்கோவிலில் 25 நாய்கள் பிடிக்கப்பட்டன

நாகர்கோவில், ஜன. 4: நாகர்கோவிலில் தெருவில் சுற்றித் திரிந்த 25 நாய்கள் திங்கள்கிழமை பிடிக்கப்பட்டன. நாகர்கோவிலில் சில வாரங்களாக தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அரசு மருத்துவமனை வளாகம், கோட்டார் பகுதிகளில் நாய்கள் கூட்டம்கூட்டமாக சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனற். இது தொடர்பாக நகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, இந்த நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யவும், அப்புறப்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி நாகர்கோவிலில் பல்வேறு பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் திங்கள்கிழமை நாய்களை பிடித்தனர். கோட்டார் கவிமணி பள்ளி வளாகத்தில் 5, ஒழுகினசேரியில் 4, கோட்டார் பகுதியில் 3 என்று மொத்தம் 25 நாய்கள் திங்கள்கிழமை பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டதாக நகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Last Updated on Tuesday, 05 January 2010 10:36
 

மாநகராட்சி அலுவலகம் முன் விளம்பர பலகைகளுக்கு நிரந்தர தடை

Print PDF

தினமணி 05.01.2010

மாநகராட்சி அலுவலகம் முன் விளம்பர பலகைகளுக்கு நிரந்தர தடை

தூத்துக்குடி, ஜன.4: தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன் விளம்பர பலகைகள் வைக்க நிரந்தரமாக தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த டபிள்யூ.ஜி.சி. சாலையில் மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு முன்னால் எப்போதும் நான்கைந்து பெரிய அளவிலான விளம்பர பலகைகள் இருந்துகொண்டே இருக்கும். அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்கள் விழாக்கள் தொடர்பான விளம்பர பலகைகளை வைக்கும் முக்கிய பகுதியாக இந்த இடம் திகழ்ந்து வருகிறது. எந்த நேரத்திலும் இப் பகுதியில் ஏதாவது சில விளம்பர பலகைகள் இருந்து கொண்டே இருக்கும்.

இதனால், மாநகராட்சி அலுவலகம் வெளியே தெரிவதில்லை. மேலும், சாலையோரத்தில் இந்த விளம்பர பலகைகள் இருப்பதால் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக அமைந்துவிடுகிறது.

இந்த விளம்பர பலகைகளில் பெரும்பாலானவை மாநகராட்சியின் அனுமதி பெறாமலேயே வைக்கப்படுகின்றன. எனவே, மாநகராட்சி அலுவலகம் முன் விளம்பர பலகைகளை வைக்க தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கூறிவருகின்றனர். இதனை ஏற்று மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்னால் விளம்பர பலகைகள் வைக்க நிரந்தரமாக தடை விதிப்பது என மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவுடன் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Tuesday, 05 January 2010 10:29
 


Page 717 of 841