Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தி.மலையில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்

Print PDF

தினமணி 05.01.2010

தி.மலையில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்

திருவண்ணாமலை, ஜன.4: திருவண்ணாமலை நகரில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சித் தலைவர் இரா.ஸ்ரீதரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர் (படம்).

ஆன்மிக நகராகவும், மாவட்டத் தலைநகராகவும் உள்ள திருவண்ணாமலையில் முக்கிய சாலைகளில் மாடுகள் புகுந்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு விளைவித்து வந்தன. இதனால் கடந்த சில நாள்களுக்கு முன் நடந்த நகராட்சிக் கூட்டத்தில் மாடுகளை பிடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் அடிப்படையில் திங்கள்கிழமை இரவு நகராட்சித் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் துணைத் தலைவர் ஆர்.செல்வம், ஆணையர் சேகர் மற்றும் ஊழியர்கள் முக்கிய சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து வண்டியில் ஏற்றினர். மொத்தம் 16 மாடுகள் பிடித்துச் செல்லப்பட்டன.

மாடுகளின் உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி மாடுகளை பிடித்துச் செல்லலாம். தொடர்ந்து சாலையில் திரியும் மாடுகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 05 January 2010 10:25
 

திருவண்ணாமலையில் ரூ.14.5 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

Print PDF

தினமணி 05.01.2010

திருவண்ணாமலையில் ரூ.14.5 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

திருவணணாமலை, ஜன.4: திருவண்ணாமலையில் ரூ.14.5 கோடி செலவில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் கட்டப்படும் என உணவுத் துறை அமைச்சர் எ..வேலு கூறினார்.

திருவணணாமலை நகராட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 19 மற்றும் 24-வது வார்டுகளில் 520 பேருக்கு இலவச காஸ் அடுப்புகள், 6 ஆயிரம் குடும்பங்களுக்கு கலைஞர் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகள் வழங்குதல், இந்தியன் வங்கி சார்பில் 10 மகளிர் குழுக்களுக்கு ரூ.22 லட்சம் கடனுதவி, முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் 83 பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் வேலு பேசியது:

திருவண்ணாமலையில் எம்எல்ஏ கு. பிச்சாண்டியின் முயற்சியால் ரூ.14.5 கோடி செலவில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான அனுமதி கடந்த மாதம் கையெழுத்தானது.

புதிய நீதிமன்ற வளாகத்தில் 12 நீதிபதிகள் விசாரணை நடத்தும் வகையில் கட்டடங்கள், தபால் நிலையம், வங்கிகள், சட்ட உதவி ஆலோசனை மையங்கள், கூட்டரங்கம், வழக்கறிஞர்கள் அறை, குடியிருப்புகள் கட்டப்படஉள்ளன.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் 53 வகையான நோய்களுக்கு சிகிச்சை தரப்படுகிறது. இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

பெண்களின் சிரமத்தைப் போக்க இலவச காஸ் அடுப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உள்ளாட்சிகளில் 33 சதவீத இடஒதுக்கீடு, சொத்துரிமை என பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் என்றார் எ..வேலு. ஆட்சியர் மு.ராஜேந்திரன், மக்களவை உறுப்பினர் வேணுகோபால், கு.பிச்சாண்டி எம்.எல்.., நகராட்சித் தலைவர் இரா. ஸ்ரீதரன், துணைத் தலைவர் ஆர்.செல்வம், நகர திமுக செயலர் கார்த்திவேல்மாறன், ஆணையர் சேகர், பொறியாளர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 05 January 2010 10:23
 

கோவை நகரிலுள்ள 8 குளங்கள் மாநகராட்சியிடம் ஒப்படைப்பு

Print PDF

தினமலர் 05.01.2010

கோவை நகரிலுள்ள 8 குளங்கள் மாநகராட்சியிடம் ஒப்படைப்பு

கோவை : கோவையில் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் இருந்த எட்டு குளங்கள், 90 ஆண்டு குத்தகை அடிப்படையில் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டன.கோவை மாநகராட்சி எல்லைக்குள் கிருஷ்ணாம்பதி குளம், செல்வாம்பதி குளம், முத்தண்ணன் குளம், பெரியகுளம், நரசம்பதி குளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளம் மற்றும் சிங்காநல்லூர் குளம் உள்ளது. இதுவரை, இக்குளங்களை பொதுப்பணித்துறை பராமரித்து வந்தது. இவற்றை குத்தகை அடிப்படையில் மாநகராட்சி வசம் வழங்க வேண்டும், என்று கோவை மாநகராட்சி தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்நிலையில், தமிழக அரசு மேற்கண்ட எட்டு குளங்களையும் 90 ஆண்டு குத்தகைக்கு கோவை மாநகராட்சி வசம் ஒப்படைத்துள்ளது. இக்குளங்கள், ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளன. மழைநீர் சேகரிக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மேலும், குளங்கள் சீரமைக்கப்பட்டு, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் குளக்கரைகளை ஒட்டியுள்ள பகுதியில் நடைபாதை, பூங்கா உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி மாநகருக்கு அழகு சேர்க்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Last Updated on Tuesday, 05 January 2010 07:14
 


Page 718 of 841