Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

நகராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டடம்: நகராட்சி கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமலர் 05.01.2010

நகராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டடம்: நகராட்சி கூட்டத்தில் முடிவு

மதுராந்தகம்:மாம்பாக்கம் நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.மதுராந்தகம் நகராட்சி சாதாரண கூட்டம், நகராட்சி தலைவர் மலர்விழிகுமார் தலைமையில் நடந் தது.துணைத் தலைவர் பிரேம்சந்த் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டம் துவங்கியதும் துணைத் தலைவர் பிரேம் சந்த் எழுந்து, நகராட்சியில் குடிசைப் பகுதிக்கு முதல் முறையாக இலவச கலர் "டிவி' வழங்கி உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பரசன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண் டும் என்றார்.அதைத் தொடர்ந்து, அனைத்து கவுன்சிலர்கள் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாம்பாக்கம் நகராட்சி தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் பள்ளிக் கட்டடம் மற்றும் சமையல் அறையுடன் கூடிய இருப்பு அறை கட்டடம் கட்ட நான்கு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், மதுராந்தகம் எம்.எல்.., தொகுதியிலிருந்து மோச்சேரியில் ரேஷன் கடை கட்ட இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

Last Updated on Tuesday, 05 January 2010 07:06
 

ஒசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்

Print PDF

தினமணி 04.01.2010

ஒசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்

ஒசூர், ஜன. 3: ஒசூரை மாநகராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும் என நகர்மன்றத் தலைவர் எஸ்..சத்யா (படம்) வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் துணை முதல்வர் மு..ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது:

ஒசூரில் இரு தொழிற்பேட்டைகள் அமைந்ததால், டி.வி.எஸ், அசோக் லேலண்ட், டைட்டான் உள்ளிட்ட பெரிய தொழிற்சாலைகளும், 1000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் உருவெடுத்தன.

இந்தத் தொழிற்சாலைகள் ஒசூர் நகரைச் சுற்றியுள்ள மூக்கண்டப்பள்ளி, சூசூவாடி, பேரண்டப்பள்ளி, கொத்தகொண்டப்பள்ளி, சென்னத்தூர், ஆவளப்பள்ளி, பேகேப்பள்ளி ஆகிய ஊராட்சிகளிலும், மத்திகிரி பேரூராட்சியிலும் அமைந்துள்ளன.

தொழிலாளர்களில் பெரும்பாலானோர் ஒசூர் நகரில் வசித்து வருகின்றனர். தொழிலாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நகராட்சி செய்து வருகிறது. ஆனால், தொழிற்சாலை வரி, சேவை வரி ஆகியவற்றை ஊராட்சிகள் வசூலித்து விடுகின்றன. குறிப்பாக சேவை செய்வது நகராட்சி, வருவாய் ஈட்டுவது ஊராட்சிகள். எனவே மேற்கண்ட ஊராட்சிகளையும், மத்திகிரி பேரூராட்சியையும் ஒசூர் நகராட்சியுடன் இணைத்து ஒசூரை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும்.

2008-ம் ஆண்டு நடைபெற்ற ஊராட்சிகள் எல்லைகள் குறித்த ஆய்வின்போது, முழுமையான அறிக்கை தமிழக அரசுக்கு ஒசூர் நகராட்சி சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரிலேயே மாநகராட்சியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது

Last Updated on Monday, 04 January 2010 09:25
 

தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு பெற வைப்புத் தொகை, கட்டணத்தை உயர்த்த முடிவு

Print PDF

தினமணி 04.01.2010

தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு பெற வைப்புத் தொகை, கட்டணத்தை உயர்த்த முடிவு

தூத்துக்குடி, ஜன. 3: தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டத்தில் குழாய் இணைப்பு பெற வைப்பு தொகை மற்றும் மாதாந்திர கட்டணம் உயர்த்தப்படுவதற்கு மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தூத்துக்குடி மாநகர செயலர் கே.எஸ். அர்ச்சுணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் ரூ. 68 கோடியில் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் நிறைவடைந்து குழாய் இணைப்பு பெற வீட்டு உபயோகத்திற்கு ரூ. 3000 வைப்புத் தொகையாகவும், மாதாந்திர கட்டணம் ரூ. 60 எனவும், வணிக உபயோகத்திற்கு வைப்புத் தொகை ரூ. 7,500, மாதாந்திர கட்டணம் ரூ. 150, தொழிற்சாலை உபயோகத்திற்கு வைப்புத் தொகை ரூ. 10 ஆயிரம், மாதாந்திர கட்டணம் ரூ. 200 எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நவீன முறைக்கு மாற்றியது என்ற பெயரில் வைப்பு தொகையையும், மாதாந்திர கட்டணத்தையும் உயர்த்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி 500 சதுர அடிக்கு உள்பட்ட குடியிருப்புக்கு வைப்புத் தொகை ரூ. 4000, மாதாந்திர கட்டணம் ரூ. 75, 500 முதல் 1200 சதுர அடி வரை உள்ள குடியிருப்புக்கு வைப்புத் தொகை ரூ. 5000, மாதாந்திர கட்டணம் ரூ. 90, 1200 முதல் 2400 சதுர அடி வரை வைப்புத் தொகை ரூ. 6000, மாதாந்திர கட்டணம் ரூ 110, 2400 சதுர அடிக்கு மேல் வைப்புத் தொகை ரூ. 7000, மாதாந்திர கட்டணம் ரூ. 130 வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கும் வைப்புத் தொகை மற்றும் மாதாந்திர கட்டணத்தை கணிசமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விலைவாசி உயர்வால் நொந்து போய் இருக்கும் மக்களிடம் மாநகராட்சி ஆகி ஓராண்டு ஆன பின்பும் சாலை, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்றாத நிலையில், பாதாளச் சாக்கடை திட்டத்திற்கு கூடுதல் தொகை வசூலிப்பது மக்களை கசக்கி பிழியும் நடவடிக்கையாகும்.

மேலும், இந்த புதிய முறை ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும். எனவே மாநகராட்சி முடிவைக் கைவிட வேண்டும் என்றார் அவர்.

Last Updated on Monday, 04 January 2010 09:03
 


Page 719 of 841