Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க ரூ.1,400 கோடியில் திட்டம்

Print PDF

தினமணி 31.12.2009

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க ரூ.1,400 கோடியில் திட்டம்

திருப்பூர், டிச.30:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க ரூ.1,400 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக புதன்கிழமை நடந்த மாமன்ற கூட்டத்தில் ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி தெரிவித்தார்.

திருப்பூர் மாநகராட்சி கூட்டம் மேயர் க.செல்வராஜ் தலைமையில் புதன்கிழமை நடந்தது. துணைமேயர் கெ.செந்தில்குமார், ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் இந்திய கம்யூ., உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், திருப்பூர் மா நகராட்சியில் குப்பைகள் அப்புறப்படுத்துவது மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகி றது.

அதற்காக இடுவாயில் துவக்க அறிவிக்கப்பட்ட உரத்தொழிற்சாலைக்கு சுற்றுசுவர் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட ரூ.30 லட்சம் நிதியை, தற்போது குப்பை கன்டெய்னர்கள் வாங்குவதற்கு ஒதுக்க மாமன்ற அனுமதி கோரப்பட்டுள்ளது.

அப்படியென்றால் இடுவா யில் உரத்தொழிற்சாலை திட்டம் கைவிடப்பட்டதா தவிர, தனியார் பராமரிப்பில் இருந்த கோயில்வழி உரத்தொழிற்சாலையில் தற்போதைய நிலை குறித்தும் மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி, கோயில்வழி உரத்தொழிற்சாலை செயல்பாடு குறித்து 15 நாட்களுக்குள் பதிலளிக்கும்படி நிர்வாகித்து வந்த தனியாரிடம் கேட்கப்பட்டது. ஆனால், 15 நாட்கள் கடந்தும் இதுவரை பதில் வராததால் அரசு உத்தரவை அடுத்து அந்த உரத்தொழிற்சாலையை மாநகராட்சி நிர்வாகமே ஏற்று நடத்த முடிவு செய்துள்ளது.

அடுத்த மாதத்தில் கோயில்வழி உரத்தொழிற்சாலையை மாநகரா ட்சி நிர்வாகம் கையகப்படுத்தும்.மேலும், இடுவாய் உரத்தொழிற்சாலையில் இயந்திரம், கட்டடம் உள்ளிóட்டவற்ற திடக் கழிவு மேலாண்மை திட்டம் மூலம் திட்டவரைவு தயாரிக்கப்பட்டு வருவதால் அதற்கா ன நிதி அரசிடம் இருந்தே பெற முடியும்.

இதையடுத்து, சுற்றுச்சுவருக்கு ஒதுக்கப்பட்ட நிதி கன்டெய்னர் பெட்டிகள் வாங்க ஒதுக்கப்பட்டுள்ளது.

மாமன்ற ஒப்புதல் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் அந்நிதி உரத்தொழிற்சாலை சுற்றுச்சுவர் கட்ட பயன்படுத்தப்படும்.

தவிர, திருப்பூரில் சேகரிக்கப்படும் குப்பைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க அமெரிக்க தனியார் நிறுவனம் சார்பில் சுமார் ரூ.1,400 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கடந்த மாதம் 27-ம் தேதி நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து அமெரிக்க வல்லுநர்களுடன் ஜன.5, 6, 7ம் தேதிகளில் திருப்பூர் மாநகராட் சியில் கலந்தாலோசனை செய்யப்பட்டு, தொடர்ச்சியாக ஜன.11ல் மீண்டும் நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் விவாதித்து இத்திட்டம் நிறைவேற்றுதல் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

Last Updated on Thursday, 31 December 2009 10:00
 

மாநகராட்சி கூட்டத்தில் பேசிய பனைமரத்துப்பட்டி எம்.எல்.ஏ.

Print PDF

தினமணி 31.12.2009

மாநகராட்சி கூட்டத்தில் பேசிய பனைமரத்துப்பட்டி எம்.எல்..

சேலம் மாநகராட்சிக் கூட்டத்துக்கு புதன்கிழமை வந்திருந்த பனைமரத்துப்பட்டி எம்.எல்.. ராஜேந்திரன், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தனது தொகுதிப் பிரச்னை குறித்துப் பேசினார்.

அவர் பேசும் போது, "51, 52-வது வார்டுகளான நெய்க்காரப்பட்டி பகுதியில் ராஜ வாய்க்கால் ஓடுகிறது. இதில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நிற்கின்றன. இதனால் மழைக் காலத்தில் ஓடை அடைபட்டு கழிவு நீர் வீடுகளில் புகுந்து விடுகிறது. எனவே இந்த ஓடையை ரூ.2.20 கோடியில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப் பணி ஆரம்பிக்கும்போது ஓடைக் கரையில் உள்ள கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியுள்ளது. எனவே அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும். ஓடை சீரமைக்கப்பட்டதும் கடைகள் கட்டி மாநகராட்சியே வாடகைக்கு விடலாம்.

இதற்குத் தேவைப்படும் நிதியை சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து ஒதுக்கித் தர தயாராக இருக்கிறேன் என்றார் ராஜேந்திரன்.

Last Updated on Thursday, 31 December 2009 09:59
 

திண்டுக்கல்லில் மேலும் உழவர்சந்தை அமைக்க ஏற்பாடு

Print PDF

தினமலர் 31.12.2009

திண்டுக்கல்லில் மேலும் உழவர்சந்தை அமைக்க ஏற்பாடு

திண்டுக்கல் : திண்டுக்கல் நகராட்சி பகுதியில் மேலும் ஒரு உழவர்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திண்டுக்கல் உழவர் சந்தை துவங்கி 10 ஆண்டு நிறைவு விழா நடந்தது.கலெக்டர் வள்ளலார்,காந்திகிராம சர்வோதய சித்த மூலிகை மருத் துவ பொருட்கள் விற் பனையை துவக்கி வைத்து பேசியதாவது:

உழவர் சந்தையில் விவசாயிகளே விற்பனை செய் வதால், பொதுமக்கள் லாபம் அடைகின்றனர். திண்டுக்கல்லில் மலைக் காய்கறி, மருத்துவ மூலி கை பொருட்கள் கிடைக்கிறது. பருப்பு, கைக்குத்தல் அரிசி, அனைத்து பலசரக்கு பொருட்கள், கிராமப் புற உணவுகளான கம்பங் கூழ், கேப்பைகஞ்சி, புட்டு, பயிறு வகைகள், காய்கறி சூப் ஆகியவை விற்பனை செய்யப்படும். இங்குள்ள விவசாயிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் எலக்ட்ரானிக் தராசு விரைவில் பயன்படுத்தப்படும். திண்டுக்கல் நகரில் மேலும் ஒரு உழவர் சந்தை அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். மேலும் உழவர் சந்தை அருகில் சிறுவர் நூலகம், மகளிர் பிரிவு நூலகமும் துவக்கி வைக் கப்பட்டது. சந்தை அலுவலர் நாகேந்திரன், விற்பனைக்குழு தலைவர் மணிமுருகன், நகராட்சி தலைவர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 31 December 2009 07:02
 


Page 722 of 841