Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

இன்று பெரியசேமூர் நகராட்சி தலைவருக்கான தேர்தல்

Print PDF

தினமலர் 31.12.2009

இன்று பெரியசேமூர் நகராட்சி தலைவருக்கான தேர்தல்

ஈரோடு: பெரியசேமூர் மூன்றாம் நிலை நகராட்சி தலைவர் தேர்தல் இன்று நடக்கிறது. ஈரோடு அடுத்த பெரியசேமூர் மூன்றாம் நிலை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. கம்யூனிஸ்ட் இரண்டு, தி.மு.., ஒன்பது, .தி.மு.., மூன்று, தே.மு.தி.., பா..., காங்கிரஸ், சுயேச்சை என தலா ஒரு கவுன்சிலர் உள்ளனர். தி.மு.., உதவியுடன் பெரியசேமூர் நகராட்சி தலைவராக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரபாகரன் இருந்தார். மினிட் புத்தகத்தில் தன்னிச்சையாக திருத்தம் செய்வது; வளர்ச்சி திட்டங்களில் அக்கறை காட்டாதது போன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது கூறப்பட்டன.

பிரபாகரன் மீது நகராட்சி துணைத் தலைவரான தி.மு..,வை சேர்ந்த சுப்பு, கவுன்சிலர்கள் சக்திவேல், பூபதி ஆகியோர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தீர்மானத்தை ஆதரித்து 15 பேர் ஓட்டு போட்டனர். எதிராக மூன்று பேர் மட்டுமே ஓட்டு போட்டனர். இதனால், நகராட்சி தலைவர் பதவியை பிரபாகரன் இழந்தார். செப்., 22 முதல் நகராட்சி தலைவர் பதவியில் இருந்து பிரபாகரன் முழுமையாக விடுவிக்கப்பட்டார். நகராட்சி துணைத்தலைவர் தி.மு..,வை சேர்ந்த சுப்பு தலைவர் பொறுப்பு பதவி வகித்தார். நகராட்சி தலைவருக்கான தேர்தல் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது. தேர்தலில் சுப்பு மட்டுமே போட்டியிடுவதால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.

Last Updated on Thursday, 31 December 2009 07:01
 

எம்.எல்.ஏ., எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கப்பட்ட பணிகள் தீர்மானம்

Print PDF

தினமலர் 31.12.2009

எம்.எல்.., எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கப்பட்ட பணிகள் தீர்மானம்

கரூர்: கரூர் எம்.எல்.., மற்றும் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்தான இரண்டு தீர்மானங்களும் கரூர் நகராட்சி கூட்டத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. கரூர் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் சிவகாமசுந்தரி தலைமையில் நடந்தது. துணை தலைவர் கனகராஜ், கமிஷனர்(பொ)ராஜா முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், முதல் தீர்மானமாக மறைந்த தி.மு.., மாவட்ட செயலாளர் வாசுகி மற்றும் நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் மாரிமுத்து ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது. இரங்கல் தீர்மானம் முடிந்த பிறகு அ.தி.மு.., கவுன்சிலர்கள், மன்றத்தில் நுழைந்தனர்.

பின்னர் 19வது தீர்மானமாக கரூர் எம்.எல்.., தொகுதி மேம்பாட்டு நிதியில் சி.எஸ்.., ஆண் மற்றும் பெண்கள் பள்ளிக்கு 2.29 லட்சம் மதிப்பில் 17 கம்ப்யூட்டர் வழங்க மன்றத்தில் பொருள் வைக்கப்பட்டது. "தனியார் பள்ளிக்கு, நகராட்சியில் இருந்து எந்த நலத்திட்ட உதவியும் அளிக்க முடியாது' என்று கூறி, தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது.

தொடர்ந்து 20வது தீர்மானத்தில் கரூர் எம்.பி., உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருமாநிலையூரில் 2.5 லட்சம் ரூபாய் மதிப்பில் பொதுசுகாதார வளாகம், உழவர் சந்தை அருகில் பயணிகள் நிழற்குடை உட்பட 10 லட்சம் ரூபாய் மதிப்பில் நான்கு பணிகள் அறிவிக்கப்பட்டன.

கவுன்சிலர் பிரபு(தி.மு..,) இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். "அனுமதிக்கப்பட்டுள்ள தொகையில் சுகாதார வளாகத்துக்கு சுவர் கூட கட்டமுடியாது. கூடுதல் தொகை ஒதுக்கினால்தான் சுகாதார வளாகத்துக்கு அனுமதிக்க முடியும்' என்றார்.

மேலும், "உழவர் சந்தை பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ளதால் இங்கு இடையூறாக நிழற்குடை தேவையில்லை' என்று தலைவர் சிவகாமசுந்தரி கூறினார். இதற்கு கவுன்சிலர் முத்துசாமி(.தி.மு..,) எதிர்ப்பு தெரிவித்தார்.

முடிவில், 19 மற்றும் 20வது தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டு மற்றவை நிறைவேற்றப் பட்டன. இறுதியாக, திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் தி.மு.., வெற்றி பெற ஆதரவாக இருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கவுன்சிலர் கதிரவன்(தி.மு..,) தீர்மானம் கொண்டுவந்தார்.

இதைக்கண்டித்து அ.தி.மு.., கவுன்சிலர்கள் முத்துசாமி, நெடுஞ்செழியன், பரமசிவம், வளர்மதி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். மொத்தத்தில் 45 நிமிடத்தில் கூட்டம் முடிந்தது.

Last Updated on Thursday, 31 December 2009 06:59
 

புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்துக்கு எதிராக போராட திட்டம்: 15 வேலம்பாளையம் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 31.12.2009

புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்துக்கு எதிராக போராட திட்டம்: 15 வேலம்பாளையம் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

திருப்பூர்: "திருப்பூர் 15 வேலம்பாளை யம் நகராட்சிக்கு சப்ளை செய்ய வேண்டிய குடிநீர் அளவை, ஒப்பந்தப்படி வழங்க வேண்டும். இல்லையெனில், புதிய திருப்பூர் பகுதி மேம் பாட்டு கழக அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்' என, நகராட்சி தலைவர் மணி எச்சரித்துள்ளார்.

திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி களுக்கு, புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்தால், தினமும் 33 லட்சம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த அளவு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வழங்க முடியாமல், நகராட்சி நிர்வாகம் தடுமாறி வரு கிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவை குறைக்காமல், ஒப்பந்தப்படி குடி நீர் வழங்கக்கோரி, புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்துக்கு நகராட்சி தலைவர் மணி கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடித விபரம்: 15 வேலம்பாளையம் நகராட் சிக்கு, புதிய திருப்பூர் பகுதி மேம் பாட்டு கழகம் நாளொன்றுக்கு 33 லட்சம் குடிநீர் வழங்க வேண்டும்; மாதம் ஒன்றுக்கு ஒரு கோடி லிட் டர் குடிநீர் குறைவாக வழங்கப் பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் 3.5 கோடி லிட்டர் குறைவாக வழங்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு சரிவர குடிநீர் வழங்க முடியவில்லை; 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையே சப்ளை செய்ய முடிகிறது. இப்பிரச்னை தொடர்பாக, செயல் அலுவலரும், நகராட்சி பொறியாளரும் பலமுறை வலி யுறுத்தியுள்ளனர்; செயல் அலுவ லரும் கடிதம் அனுப்பியுள்ளார்; எந்த முன்னேற்றமும் இல்லை.

ஒப்பந்தப்படி, எங்கள் நகராட் சிக்கு தினமும் கொடுக்க வேண் டிய 33 லட்சம் லிட்டர் குடிநீரும், மூன்று மாதங்களாக சப்ளையை குறைத்து, நிலுவை வைத்துள்ள குடிநீரையும் வழங்க வேண்டும். இல்லையெனில், எனது தலை மையில் அனைத்து கவுன்சிலர் களும் சேர்ந்து, புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழக அலுவல கத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன்பின்பும் உடன்படவில்லை எனில், நகராட்சி மக்களை திரட்டி, புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழக நீரேற்று நிலையம் முன் போராட வேண்டியிருக்கும். எனவே, ஒரு வாரத்துக்குள் முறையான அறி விப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு, நகராட்சி தலைவர் மணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, புதிய திருப் பூர் பகுதி மேம்பாட்டு கழக பொது மேலாளர் பழனிச்சாமியிடம் கேட்ட போது, ""எங்களது நிறு வனத்தால் கொடுக்கப்படும் குடி நீரின் அளவில், எவ்விதமான மாற் றமும் செய்யவில்லை; தற்போதும் 33 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க, நாங்கள் தயாராக உள்ளோம்; திருப் பூர் மாநகராட்சி மற்றும் 16 ஊராட்சி களுக்கு குடிநீர் வழங்கி வரு கிறோம்; இதுவரை எவ்விதமான குறைபாடும் இல்லை. அப்படியே குறைபாடு இருந்தாலும், ஒரு லிட் டர் அளவுக்கே இருக்கும்; இதுவும் "பவர் சப்ளை ' ஏற்பட்டு இருந் தால் மட்டுமே குறையும். 15 வேலம்பாளையம் நக ராட்சியை பொறுத்தவரை எவ்வித மான குறைபாடுகளும் இருக்க வாய்ப்பில்லை. நிலுவைத்தொகை இல்லாமல் உரிய தேதியில் பணம் செலுத்தி வருகின்றனர்; அதற் கேற்ப, நாங்களும் குடிநீர் வழங்கி வருகிறோம்; எடுத்து செல்வதற்கோ, முறையாக வினியோகம் செய் வதற்கோ, போதுமான வசதிகள் இல் லாமல் இருக்கலாம்,'' என்றார

Last Updated on Thursday, 31 December 2009 06:58
 


Page 723 of 841