Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

வயர்லெஸ் சாலையில் 2 நாளில் ரோடு அமைச்சர் நேரு உறுதி

Print PDF

தினகரன் 30.12.2009

வயர்லெஸ் சாலையில் 2 நாளில் ரோடு அமைச்சர் நேரு உறுதி

திருச்சி: கனரக வாகனங்களின் போக்குவரத்தால் சேதமடைந்த வயர்லெஸ் சாலையில் 2 நாளில் ரோடு போடப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி மாநகராட்சி 35 மற்றும் 37வது வார்டு விமான நிலைய பகுதியில் இலவச கலர் டிவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று அன்னை ஆசிரம பள்ளி வளாகத்தில் நடைபெற் றது. கலெக்டர் சவுண் டையா தலைமை வகித்தார். கலர் டிவி வழங்கும் திட்டத்தை துவக்கிவைத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:

தமிழகத்தில் முதல்வர் அறிவித்தது போலவே அனைவருக்கும் இலவச கலர் டிவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. வரும் மார்ச்சுக்குள் 40 லட்சம் தொலைக் காட்சிப் பெட்டிகளை தயாரிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. எனவே இன்னும் இரு மாதத்தில் விடுபட்டுள்ள எல்லாருக்கும் டிவிக்கள் வழங்கப்படும்.

குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநகராட்சியில் அமைக்கப்பட்டு வரும் 35 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் 3 தொட்டிகள் விமான நிலைய பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றது. எனவே இன்னும் 6 மாதத்தில் இப்பகுதியில் குடிநீர் பிரச்னை முற்றிலும் தீர்ந்துவிடும்.

விமான நிலையப் விரிவாக்கப் பணிகளுக்காக, ஏர்போர்ட் மேற்கு பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக கிழக்கே நத்தமாடிப்பட்டி பகுதியில் தரிசு நிலங்கள்தான் கையகப்படுத்தப்பட உள்ளது. அங்கே நிலம் எடுப்பதற்கு பதிலாக உரிமையாளர்களுக்கு தற்போதுள்ள நிலவரப்படி தொகை கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீடு இடிக்கப்படும் நிலை வந்தால், வீடு கட்ட தொகையும், இடத்திற்கு மாற்று இடமும் கொடுக்கின்றோம். எனவே யாரும் அது பற்றி கவலைப்பட தேவையில்லை. மேலும் ஜவர்ஹர்லால் நேரு ஊரகப் பகுதிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகள் தலா ரூ.3 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்றுவிட்டன. திருச்சியிலும் அத்திட்டத்தின் கீழ் நிதியை பெற தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு பெற்றுவிட்டால் மாநகராட்சியில் எல்லா அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படும்.

வயர்லெஸ் ரோடு வழியாக வரும்போதுதான் அந்த ரோட்டின் நிலையை அறிந்தேன். போக்குவரத்து மாற்றப்பட்டு இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் திருப்பி விடப்பட்டதால்தான் ரோடு இவ்வாறு சேதமடைந்தது. ஏற்கனவே திமுக ஆட்சியில்தான் இந்த ரோடு போடப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரோடு போடப்பட உள்ளது. இன்னும் 2 நாளில் ரோடு போட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

35வது வார்டு பகுதியில் வசிக்கும் 1,950 குடும்பத்தினருக்கு இலவச வண்ண தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டன. அதேபோல இதே பகுதியில் உள்ள 37 வார்டுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 1,305 குடும்பத்தினருக்கும் டிவிக்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கவுன்சிலர் காளீஸ்வரன் செய்திருந்தார். டிஆர்ஓ தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி மேயர் சுஜாதா, எம்எல்ஏக்கள் சேகரன், அன்பில் பெரியசாமி, துணை மேயர் அன்பழகன், கமிஷைர் .

Last Updated on Wednesday, 30 December 2009 07:31
 

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

Print PDF

தினகரன் 30.12.2009

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

கோவை:உலக தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு கோவை மாநகரை மேம்படுத்த ரூ. 113 கோடி மதிப்பில் பணிகள் செய்ய மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறுவதை முன்னிட்டு மாநகரை மேம்படுத்த ரூ.112 கோடியே 84 லட்சத்திற்கு ஒப்புதல் வழங்க மாமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டன. அதன்படி மாநகராட்சி பொது நிதி மூலம் செயல்படுத்தப்பட உள்ள பள்ளி கட்டடங்கள், நிர்வாக கட்டடங்கள், மத்திய மற்றும் பேருந்து நிலையங்கள் மேம்படுத்தல், புதிய பூங்கா அமைத்தல், புதிய தெரு விளக்கு கம்பம், உயர்மட்ட கோபுர விளக்கு அமைத்தல், மாநாடு மற்றும் ஊர்வலம் நடக்கும் பகுதியில் குடிநீர் வசதிகள் செய்தல் ஆகியவற்றிற்கு ரூ.23 கோடியே 60 லட்சத்து 75 ஆயிரம் செலவிடப்பட உள்ளன.

அரசின் நிதிஉதவியுடன் பள்ளிகளில் உள்ள கழிவறைகள் மேம்படுத்தல், தற்காலிக துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமித்தல், புதிதாக நடமாடும் கழிவறை வாகனங்கள் வாங்குதல், பொது கழிப்பிடங்கள் மேம்படுத்தல், பிரதான சாலையில் இருந்து மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்லும் இணைப்பு மற்றும் அணுகு சாலைகளை புதுப்பித்தல் ஆகிய பணிக்கு ரூ.33 கோடியே 17 லட்சத்து 8 ஆயிரம் செலவிடப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் போக்குவரத்து திடல்கள் அமைத்தல் மற்றும் புதுப்பித்தல், மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, திருச்சி சாலைகளில் பாதசாரிகள் நடைபாதை அமைத்தல், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் மற்றும் கட்டண முறை கழிப்பிடங்களுக்கு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ரூ.56 கோடியே 6 லட்சமும் செலவிடப்பட உள்ளது. இத்தீர்மானம் அனைத்து கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் மன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Wednesday, 30 December 2009 07:27
 

ஆரணி பேரூராட்சி கூட்டம்

Print PDF

தினகரன் 30.12.2009

ஆரணி பேரூராட்சி கூட்டம்

கும்மிடிப்பூண்டி: ஆரணி பேரூராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் ஹேமபூஷணம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாபு, செயல் அலுவலர் முத்தையா முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், விவசாயிகள் நலன் கருதி ஆரணி பகுதியில் உழவர் சந்தை அமைக்க இடம் தேர்வு செய்ய வேண்டும், ஆரணியில் இருந்து புதுவாயல் வழியாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு பஸ் விட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புகாரின்படி, அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஸ்பெக்டர் முரளி, சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, நாகப்பனை நேற்று கைது செய்தனர்.

Last Updated on Wednesday, 30 December 2009 07:56
 


Page 726 of 841