Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பெங்களூர் மாநகராட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு?

Print PDF

தினமணி 0 7.12.2009

பெங்களூர் மாநகராட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு?

பெங்களூர்,டிச.6: உயர்நீதிமன்றம் விதித்த காலக்கெடுவின்படி பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கான தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாத இறுதிக்குள் தேர்தல் மாநகராட்சித் தேர்தல் நடக்கும் என்று கூறப்படுகிறது.

பெங்களூர் மாநகராட்சி மன்றத்தின் பதவிக்காலம் 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்தது. இதை அடுத்து பெருநகர மாநகராட்சியாக மாற்றப்பட்ட மன்றத்துக்கு 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் மாநிலத்தில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு 7 நகரசபை, டவுன் பஞ்சாயத்து, 110 கிராமங்களை மாநகராட்சியுடன் இணைத்து வார்டுகளின் எண்ணிக்கையை 100-ல் இருந்து 198 ஆக அதிகரித்தது.

மாநகராட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் நவம்பர் மாதம் 16-ம் தேதி தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், மாநகராட்சி வார்டு இடஒதுக்கீடு பட்டியலை நவம்பர் 30-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும், மாநகராட்சித் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் டிசம்பர் 7-ம் தேதிக்குள்ó அறிவிக்க வேண்டும் என்று இறுதி உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த மாதம் வார்டு இடஒதுக்கீடு பட்டியலை அரசு வெளியிட்டது. மொத்தம் 198 வார்டுகளில் 67 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநகராட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் காலக்கெடு திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது.

உத்தரவுப்படி திங்கள்கிழமை மாலைக்குள் மாநகராட்சி மன்றத்துக்கான தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநகராட்சிக்கு அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆளும்கட்சியான பாஜகவும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளமும் தேர்தல் அறிவிப்பை ஆவலனுடன் எதிர்பார்த்துள்ளன.

Last Updated on Monday, 07 December 2009 07:29
 

ஆரணி நகராட்சித் திட்டப் பணிகள்: வேலூர் மண்டல அலுவலர் ஆய்வு

Print PDF

தினமணி 04.12.2009

ஆரணி நகராட்சித் திட்டப் பணிகள்: வேலூர் மண்டல அலுவலர் ஆய்வு

ஆரணி, டிச.3: ஆரணி நகராட்சியில் நடைபெற்றுவரும் திட்டப் பணிகளை வேலூர் மண்டல அலுவலர் சுப்பிரமணி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

எரிவாயு தகன மேடை, இறைச்சிக் கூடம், திருவள்ளுவர் நகரில் உள்ள தாய்சேய் நல டுதி ஆகியவற்றின் பணிகளை சுப்பிரமணி ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:

எரிவாயு தகன மேடை பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயல்படும். பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் நவீன கழிவறைகள், இலவச சிறுநீர்

கழிப்பிடம் சீரமைக்கும் பணி ஆகியவற்றுக்கான வரைபடங்கள் தயார் செய்து பணி ஆரம்பிக்கும் நிலையில் உள்ளது. இடைத்தேர்தல் முடிந்ததும் இப்பணிகள் ஆரம்பிóக்கப்படும் என்றார்.

நகராட்சி மேலாளர் ராமசாமி, வருவாய் அலுவலர் கீதா, உதவிப்பொறியாளர் சம்பத், சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

சாலையில் திரிந்த 50 மாடுகள் நகராட்சி பட்டியில் அடைப்பு

Print PDF

தினமணி 04.12.2009

சாலையில் திரிந்த 50 மாடுகள் நகராட்சி பட்டியில் அடைப்பு

கும்பகோணம், டிச. 3: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரிந்த 50-க்கும் அதிகமான மாடுகள் பிடிக்கப்பட்டு, நகராட்சிக்குச் சொந்தமான பட்டியில் அடைக்கப்பட்டன.

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால், போக்குவரத்து பாதிப்படைவதுடன், விபத்துகள் நேரிடுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, கடந்த 30-ம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், கோட்டாட்சியர் செங்குட்டுவன், டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் சுமார் 50 காவல் துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள், வியாழக்கிழமை கும்பகோணம் நகரச் சாலைகளில் சுற்றித் திரிந்த சுமார் 50-க்கும் அதிகமான மாடுகளைப் பிடித்து, பைராகி தோப்பில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான பட்டியில் அடைத்தனர்.

 


Page 742 of 841