Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

அரக்கோணம் நகராட்சி ஊழியர் குடியிருப்புகள் பணிஓய்வு பெற்றவர்கள் வீட்டை காலி செய்ய இறுதிக்கெடு

Print PDF

தினமணி 03.12.2009

அரக்கோணம் நகராட்சி ஊழியர் குடியிருப்புகள் பணிஓய்வு பெற்றவர்கள் வீட்டை காலி செய்ய இறுதிக்கெடு

அரக்கோணம், டிச 2: அரக்கோணம் நகராட்சி ஊழியர்களுக்கான குடியிருப்புகளில் பணி ஓய்வுபெற்றும் குடியிருப்புகளை காலி செய்யாமல் பல வருடங்களாக தங்கியிருப்போர் அந்த வீடுகளை காலி செய்ய இறுதி கெடு விதித்து அரக்கோணம் நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

அரக்கோணம் நகராட்சியில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கென கடந்த 1965ஆம் ஆண்டு நகராட்சிக்குட்பட்ட விண்டர்பேட்டை மெயின்சாலையில் 20 வீடுகள் கட்டித்தரப்பட்டன. பணி ஒய்விற்கு பிறகு அவர்கள் அந்த வீடுகளை காலி செய்து தர வேண்டும் என ஆணையுடன் அந்த வீடுகள் தரப்பட்டன.

இந்த வீடுகளில் அப்போது குடியேறியோர், நகராட்சி பணிகளில் இருந்து பணி ஒய்வுபெற்று விட்ட நிலையிலும் வீடுகளை காலி செய்யாமல் அதிலேயே குடியிருந்து வருகின்றனர். இதில் பலர் இறந்துவிட்டநிலையிலும் அவர்களது வாரிசுகள் அக்குடியிருப்புகளில் குடியிருந்து வருவதாக தெரிகிறது. ஒரு சில வீடுகளை சிலர் வாடகைக்கு விட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த குடியிருப்புகளில் இருந்தவர்களை திடீர் என ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகம், இரண்டு குடியிருப்புகளில் மட்டும் தற்போதைய பணியாளர்கள் குடியிருப்பதாகவும் மீதி 18 குடியிருப்புகளில் குடியிருப்போர் வீடுகளை காலி செய்யவேண்டும் என அந்த வீடுகளில் குடியிருப்போர்களுக்கு 15 நாள் கெடு விதித்து நோட்டீஸ் அளித்திருந்தது.

இந்நிலையில் அந்த நோட்டீஸின் கெடு டிசம்பர் 1ந்தேதி முடிவடைந்தநிலையிலும் அவர்கள் வீடுகளை காலி செய்யவில்லை. எனவே இது குறித்து இறுதி கெடு விதித்து புதன்கிழமை நகராட்சி ஆணையர் விமலா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் தினமணி நிருபரிடம் தெரிவிக்கையில், இந்த இறுதி கெடுவிற்கு பிறகும் அவர்கள் அந்த வீடுகளை காலி செய்யவில்லை எனில் குடியிருப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், அந்த வீடுகளை சீல் வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Last Updated on Thursday, 03 December 2009 08:08
 

பாலங்களை ஆய்வுசெய்த நகர்மன்றத் தலைவர்

Print PDF

தினமணி 03.12.2009

பாலங்களை ஆய்வுசெய்த நகர்மன்றத் தலைவர்

திண்டுக்கல், டிச. 2: திண்டுக்கல் நகராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பாலங்களை நகர்மன்றத் தலைவர் புதன்கிழமை பார்வையிட்டார்.

திண்டுக்கல் வேடபட்டி சாலை ஒத்தக்கண் பாலத்தின் கீழே ஆண்டுதோறும் தண்ணீர் தேங்கி நிற்பதால், இப்பகுதியில் செல்லும் இருசக்கர வாகனங்களும் பொது மக்களும் பெரும் சிரமப்பட்டு வந்தனர். கடந்த பல ஆண்டுகளாகவே இந்நிலை நீடித்து வருவதை ஒட்டி, தரைசாலையின் உயரத்தை அதிகரித்தும், பாலத்திற்கு கீழே வரும் தண்ணீரை வெளியேற்றும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை நகர்மன்றத் தலைவர் ஆர்.நடராஜன், நகராட்சி ஆணையர் அர.லெட்சுமி, நகராட்சிப் பொறியாளர் எம். ராமசாமி, உதவிப் பொறியாளர் ப. வெற்றிச்செல்வி ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் 45ஆவது வார்டில் 2008-09 ஆம் ஆண்டிற்கான பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் 24 கழிப்பறை கொண்ட நவீன கட்டடத்தை நகர்மன்றத் தலைவர் ஆர். நடராஜன் திறந்து வைத்துப் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் ஆ. மார்த்தாண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

 

மேயர் ஆய்வு

Print PDF

தினமணி 03.12.2009

மேயர் ஆய்வு

சென்னை சிஐடி நகர் 4-வது பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளியை புதன்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன். இதுபோல் அங்குள்ள உயர்நிலைப் பள்ளி, சத்துணவுக்கூடம், மருந்தகம், நலவாழ்வு மையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்து பொது மக்களிடம் குறைகளை மேயர் கேட்டறிந்தார்.

Last Updated on Thursday, 03 December 2009 07:56
 


Page 743 of 841