Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்

Print PDF

தினமணி 01.12.2009

குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்

வேலூர்,நவ.30:வேலூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என மேயர் ப. கார்த்திகேயன் கூறினார்.

வேலூர் மாமன்றக் கூட்டம் மேயர் ப. கார்த்திகேயன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணை மேயர் தி.. முகமது சாதிக் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், வேலூரை அடுத்த சாத்துபாளையத்தில் மாநகராட்சி குப்பைகளை கொட்ட 8 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. அதன் நிலை என்ன என்று காங். உறுப்பினர் சீனிவாசகாந்தி கேள்வி எழுப்பினார்.

அந்த இடம் பாதுகாப்பாக உள்ளது. ஏற்கெனவே குப்பை கொட்டிவரும் சதுப்பேரியில் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க இரு நிறுவனங்கள் கேட்டுள்ளன. அரசின் முறையான அனுமதி கிடைத்ததும் அது செயல்படுத்த உள்ளதால் குப்பைகள் குறித்து இனி கவலையில்லை என்றார் மேயர்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சிஎம்சி மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளதா என்று திமுக உறுப்பினர் தயாள்ராஜ் கேள்வி எழுப்பினார்.

சிஎம்சியை சேர்க்க ஆட்சியரிடம் நானும், எம்எல்ஏவும் கோரிக்கைவிடுத்துள்ளோம். விரைவில் செயலாக்கத்திற்கு வரும்.

வேலூரில் இந்த திட்டத்துக்காக டிசம்பர் 7 முதல் 14}ம் தேதி வரை வருவாய்த்துறையினர் புகைப்படம் எடுக்க வருகின்றனர். உறுப்பினர்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் மேயர்.

நகரில் சிக்குன் குன்யா, வைரஸ் காய்ச்சல் ஆகியவை அதிகமாக பரவியுள்ளன. எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதற்கான மாத்திரைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக உறுப்பினர் நீதி வலியுறுத்தினார்.

மேலும் அதிமுக உறுப்பினர்கள் சண்முகம், பிச்சமுத்து,மதிமுக உறுப்பினர் கோபி, காங். உறுப்பினர்கள் பி.பி. ஜெயபிரகாஷ், பாபு, தேமுதிக உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர்.புதைசாக்கடை திட்டத்திற்கு திருத்திய மதிப்பீட்டின்படி ரூ.10.50 கோடி கூடுதலாக ஒதுக்குவது, ஆர்க்காடு சாலையில் சிஎம்சி மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தில் அடுக்குமாடி கட்டடம் கட்டிக்கொள்ள அனுமதிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

 

நாமக்கல் நகராட்சியை விரிவுபடுத்த நடவடிக்கை

Print PDF

தினமணி 01.12.2009

நாமக்கல் நகராட்சியை விரிவுபடுத்த நடவடிக்கை

நாமக்கல், நவ. 30: நாமக்கல் நகராட்சியுடன் மேலும் 12 ஊராட்சிகள் மற்றும் நகராட்சி எல்லையின் அருகாமையில் உள்ள பகுதிகளை சேர்த்து நகராட்சியை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நாமக்கல் நகராட்சிக்கு அருகாமையில் உள்ள 27 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்து எல்லையை விரிவாக்கம் செய்து தர வேண்டும் என நகர்மன்றத்தில் கடந்த ஜூன் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட ஆட்சியர் மூலமாக அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. இது தொடர்பாக பிரேரணைகளும் அனுப்பப்பட்டன. இதன் மீது மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் கடந்த 3-ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது. 27 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும்போது அதன் பரப்பளவு மிகவும் பெரியதாக இருக்கும். அனைத்து பகுதிகளுக்கும் அடிப்படை வசதிகளை செய்துதருவது என்பது கடினமாகும். எனவே, 12 ஊராட்சிகள் மற்றும் சில பகுதிகளை இணைத்து எல்லை விரிவாக்கம் செய்யலாம். இதற்கு அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்களின் கருத்துகளை பெறலாம் என முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, ரெட்டிப்பட்டி, பாப்பநாயக்கன்பட்டி, நல்லிபாளையம், தும்மங்குறிச்சி, வள்ளிபுரம், தொட்டிபட்டி, பெரியபட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேட்டாம்பாடி, வீசாணம் மற்றும் நாமக்கல் பகுதி ஆகியவை இணைக்கப்படவுள்ளது.

 

நகரில் தரமான சாலை: நகராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்

Print PDF

தினமணி 01.12.2009

நகரில் தரமான சாலை: நகராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை நவ. 30: அருப்புக்கோட்டை நகரில் நகராட்சி சார்பில் தரமான சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என, நகராட்சிக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அருப்புக்கோட்டை நகராட்சிக் கூட்டம், நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இதில், துணைத் தலைவர் பழனிசாமி,ஆணையர் முத்துராசு, பொறியாளர் கருணாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், நாடார் மேலரத வீதியில் இந்த ஆண்டு மட்டும் 3 முறை சாலைகள் போடப்பட்டும், சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

எனவே, இந்த முறை தரமான ஒப்பந்ததாரர் மூலம் தரமான சாலை அமைக்கப்பட வேண்டும் என, அதிமுக கவுன்சிலர் சிவசங்கரன் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு, ரூ. 38 லட்சத்தில் இந்த முறை தரமான சிமென்ட் சாலை அமைக்கப்படும் என, நகராட்சித் தலைவர் பதலளித்தார்.

பின்னர், நகரில் நாய்த் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், இதை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பல நாள்களாக வாருகால் சுத்தம் செய்யப்படவில்லை எனவும், வார்டுகளில் கொசு மருந்து அடிப்பதில்லை எனவும் கவுன்சிலர்கள் பலர் பல்வேறு விதமான புகார்களையும் கோரிக்கைகளையும் தெரிவித்தனர்.

இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் பதிலளித்தார்.

 


Page 745 of 841