Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

காஞ்சிபுரம் நகர்மன்றக் கூட்டம் தரமான மின் வயர்களை பயன்படுத்த கவுன்சிலர்கள் கோரிக்கை

Print PDF

தினமணி 01.12.2009

காஞ்சிபுரம் நகர்மன்றக் கூட்டம் தரமான மின் வயர்களை பயன்படுத்த கவுன்சிலர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம், நவ. 30: காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தரமான மின் ஒயர்களை பயன்படுத்த வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

காஞ்சிபுரம் நகர்மன்ற கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் வி.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

இக் கூட்டத்தில் நகரப்பகுதிகளில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை என

உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். பறவைகள் மற்றும் குரங்குகளால் மின் ஒயர்கள் அறுபடுகின்றன. எனவே தரமான மின் ஒயர்களை பயன்படுத்த வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக நகர்மன்றத் தலைவர் உறுதியளித்தார். கூட்டத்தில் காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் மகாலட்சுமி தேவி, நகராட்சி பொறியாளர் கருப்பையா, நகர்நல அலுவலர் பரணிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Tuesday, 01 December 2009 07:57
 

உத்தரமேரூர் பேரூராட்சியில் உழவர் சந்தை ஏற்படுத்த தீர்மானம்

Print PDF

தினமணி 01.12.2009

உத்தரமேரூர் பேரூராட்சியில் உழவர் சந்தை ஏற்படுத்த தீர்மானம்

காஞ்சிபுரம்,நவ.29: உத்தரமேரூர் பேரூராட்சியில் உழவர் சந்தை ஏற்படுத்த வேண்டும் என்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புக்குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வி.மீனாட்சிசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து பேசினார்.

உத்தரமேரூர் வட்டத்தில் உள்ள புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டியுள்ள மக்களுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். உத்தரமேரூர் பேரூராட்சியில் உழலர் சந்தை ஏற்படுத்த வேண்டும். படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை, கூட்டுறவுத்துறை மூலமாக திறக்கப்பட வேண்டும். அனுமதியின்றி செயல்படும் கல்குவாரி, கிரஷர்களை மூட வேண்டுóம். பாலாறு மற்றும் செய்யாற்றில் தடுப்பு அணை கட்ட வேண்டும். உத்தரமேரூரில் பஸ் பணிமனையை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியன் தேர்வுக்குழு கூட்டத்தில் உத்தரமேரூர் வட்ட அமைப்பாளராக சி.பாஸ்கரன் தேர்வு செய்யப்பட்டார். அமைப்பு குழு உறுப்பினர்களாக வி,மன்னார் கிருஷ்ணன், வை.ஆனந்தகுமார், பி.தர்மராஜ், பி.ஜெயந்தி, எஸ்.பெருமாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜி.மோகணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எ.வி.சிவக்குமார், மதுராந்தகம் வட்டச் செயலாளர் எ.வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

கோவை மாநகராட்சி 13 வார்டுகளில் ரூ.3 கோடியில் பூங்காக்கள், விளையாட்டு உபகரணங்கள்

Print PDF

தினத்தந்தி 30.11.2009

 


Page 746 of 841