Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தெற்குமாரட் வீதி சாலையோர சந்தையை இடமாற்றம் செய்ய மாநகராட்சி திட்டம்

Print PDF

தினமணி 24.11.2009

தெற்குமாரட் வீதி சாலையோர சந்தையை இடமாற்றம் செய்ய மாநகராட்சி திட்டம்

மதுரை, நவ. 23: மதுரை தெற்குமாரட் வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோரச் சந்தையை இடமாற்றம் செய்ய, மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் மற்றும் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் மகுடபதி ஆகியோர், அங்கு ஆய்வை மேற்கொண்டனர்.

மதுரை நகரில் தெற்குவெளிவீதி மற்றும் தெற்குமாரட் வீதி ஆகியவை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், தெற்குவாசல் அருகே தெற்குமாரட் வீதியில் சாலையோரத்தில் காய்கறிகளை விற்போர் கடை அமைக்க, மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக உள்ளது. மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், தர்ஹா என பல முக்கிய இடங்கள் உள்ள நிலையில் தெற்குமாரட் வீதியில் சாலையோர காய்கறி கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை போக்குவரத்து போலீஸôர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

சாலையோர காய்கறி விற்பனை சந்தையை இடமாற்றம் செய்வதற்கு, வியாபாரிகள் சம்மதிக்கவில்லை. ஆனால், வியாபாரிகள் விரும்பும் 3 மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் ஓரிடத்தை மாநகராட்சிக் கூட்டத்தின் தீர்மானத்துக்குப் பிறகு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரம் கூறுகிறது.

Last Updated on Tuesday, 24 November 2009 06:26
 

பல்லடம் நகராட்சியில் வார்டுக்கு 10 புதிய தெரு விளக்குகள்

Print PDF

தினமணி 24.11.2009

பல்லடம் நகராட்சியில் வார்டுக்கு 10 புதிய தெரு விளக்குகள்

பல்லடம் நவ 23: பல்லடம் நகராட்சி பகுதியில் வார்டுக்கு 10 புதிய தெரு விளக்குகள் அமைக்கப்படும் என்றும் அதற்குரிய இடத்தை வார்டு கவுன்சிலர்கள் தேர்வு செய்வார்கள் என்று நகராட்சி தலைவர் ஆர்.ராமமூர்த்தி திங்கள்கிழமை தெரிவித்தார்.

திட்டப்பணிகள் குறித்து அவர் மேலும் கூறியது: பல்லடம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் இப்போதைக்கு இல்லை. காற்றாலை திட்டம் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்துயுள்ளோம். புதிய குடிநீர் இணைப்பு ஒன்றுக்கு ரூ.7ஆயிரம் டெபாசிட் தொகை பெற்றும், ரூ.2 கோடி கடன் பெற்றும் அத்திகடவு இரண்டாவது திட்டத்தை நிறைவேற்ற அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். ஆனால் நாங்கள் ரூ.5 ஆயிரம் மக்களிடம் டெபாசிட் வசூலித்து தருகிறோம் மீதியை அரசு மானியமாக வழங்க வேண்டும் என்கிறோம் ஆனால் அதிகாரிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. என்றார்

Last Updated on Wednesday, 25 November 2009 06:39
 

கருங்கல் சிறுவர் பூங்காவில் கொட்டும் மழையில் தூய்மைப் பணி

Print PDF

தினமணி 23.11.2009

கருங்கல் சிறுவர் பூங்காவில் கொட்டும் மழையில் தூய்மைப் பணி

கருங்கல், நவ. 22: கருங்கல் பேரூராட்சிக்குள்பட்ட திருஞானபுரம் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவில் கொட்டும் மழையில் தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருஞானபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிறுவர்கள் விளையாடுவதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 2 லட்சத்தில் சிறுவர் பூங்கா கட்டப்பட்டது. இப் பூங்காவை ஆரம்பம் முதலே பேரூராட்சி நிர்வாகம் சரிவர பராமரிக்காததால் உள் பகுதியில் புல், புதர்கள் காணப்பட்டு சிறுவர்களுக்கு பயனற்ற நிலையில் இருந்தது.

இந்நிலையில், பூங்காவின் உள் பகுதியில் சிலர் மது அருந்துவதும் நடைபெற்றது. இவர்கள் வீசியெறிந்த பிளாஸ்டிக் பொருள் மற்றும் மது பாட்டில்களால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்தி கடந்த 13- ம் தேதி வெள்ளிக்கிழமை தினமணியில் படத்துடன் வெளியானது.

இதையடுத்து, கருங்கல் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயசந்திரன் (பொறுப்பு) உத்தரவின் பேரில் இரண்டு பேரூராட்சி பணியாளர்கள் வெள்ளிக்கிழமை கொட்டும் மழையில் பூங்காவில் தூய்மைப் பணி மேற்கொண்டனர்

Last Updated on Monday, 23 November 2009 06:48
 


Page 750 of 841