Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தாங்கள் ஏரி உடைப்பை நகராட்சி ஊழியர்களால் சரிசெய்யப்பட்டன

Print PDF

தினமலர் 17.11.2009

 

பொது இடங்களில் கால்நடைகள் திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம்: ஆட்சியர்

Print PDF

தினமணி 17.11.2009

பொது இடங்களில் கால்நடைகள் திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம்: ஆட்சியர்

புதுக்கோட்டை, நவ. 16: சாலைகள் மற்றும் பொது இடங்களில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால், அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் ஆ. சுகந்தி.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சிப் பகுதிகளில் ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகள் சாலைகள் மற்றும் பொது இடங்களில் உலவுவதால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவதுடன் சில நேரங்களில் விபத்தும் ஏற்படும் நிலை உருவாகிறது.

இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து மாவட்ட நிர்வாகத்துக்குப் புகார்கள் வந்துள்ளன. எனவே, கால்நடை உரிமையாளர்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை தங்களுக்குச் சொந்தமான இடங்களில் கட்டிவைத்து பராமரிக்க வேண்டும்; மீறி பொது இடங்களில் கால்நடை கள் உலவினால் அவை நகராட்சி ஊழியர்கள் மூலம் பிடிக்கப்பட்டு அரசு கால்நடைப் பட்டிகளில் அடைக்கப்படும். மேலும், உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் விபத்து ஏற்படக் காரணமாக இருந்ததாக குற்ற வழக்கு பதிவுசெய்து கடும் நடவடிக்கையும் எடுக்க நேரிடும்.''

Last Updated on Tuesday, 17 November 2009 07:23
 

ராமநாதபுரம் நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு

Print PDF

தினமணி 17.11.2009

ராமநாதபுரம் நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு

ராமநாதபுரம், நவ. 16: ராமநாதபுரம் நகராட்சி புதிய ஆணையாளராக முஜிபுர் ரகுமான் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் இதற்கு முன் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி ஆணையாளராக இருந்தார். ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளராக இருந்த கே.வி.பாலகிருஷ்ணன், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Last Updated on Tuesday, 17 November 2009 07:18
 


Page 756 of 841