Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சென்னை குடிநீர் வாரிய திறந்தவெளிக் கூட்டம்

Print PDF
தினமணி 12.11.2009

சென்னை குடிநீர் வாரிய திறந்தவெளிக் கூட்டம்

சென்னை, நவ.12: குடிநீர், கழிவு நீர் தொடர்பான பிரச்னைகள், கட்டணங்கள் தொடர்பான சந்தேகங்களை பொதுமக்கள் நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறிப்பிட்ட பகுதி அலுவலகங்களில் சனிக்கிழமை (நவ. 14) திறந்தவெளிக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை கொடுங்கையூர், தண்டையார்பேட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்காக, தண்டையார்பேட்டை சபாபதி தெருவில் அமைந்துள்ள பகுதி அலுவலகம் 1-ல் திறந்தவெளிக் கூட்டம் நடத்தப்படுகிறது.

ராயபுரம், வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக எம்.சி.ரோடு பகுதி அலுவலகம் 2-லும், பெரம்பூர், வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக எ.3 வடிவேலு 2-வது குறுக்குத் தெருவில் உள்ள பகுதி அலுவலகம் 3-லும், கீழ்பாக்கம், அயனாவரம் பகுதியை சேர்ந்தவர்களுக்காக நியூ ஆவடி சாலையில் உள்ள பகுதி அலுவலகம் 4-லும் திறந்தவெளிக் கூட்டம் நடத்தப்படுகிறது.

அண்ணாநகர், முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக அண்ணா நகரில் உள்ள பகுதி அலுவலகம் 5-லும், முகப்பேர் கிழக்கு, முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக டி.எஸ். கிருஷ்ணாநகர் பிரதான சாலையில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்திலும், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக டாக்டர் ரங்கா சாலையில் உள்ள பகுதி அலுவலகம் 6-லும், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக சத்திய மூர்த்தி சாலையில் உள்ள பகுதி அலுவலகம் 7-லும், தியாகராய நகர், கோடம்பாக்கம் பகுதி மக்களுக்காக முத்து கிருஷ்ணன் சாலையில் உள்ள பகுதி அலுவலகம் 8-லும் திறந்தவெளிக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக வி.வி. கோயில் தெருவில் உள்ள பகுதி அலுவலகம் 9-லும், ஆழ்வார்ப்பேட்டை, மயிலாப்பூர் பகுதி மக்களுக்காக இந்திரா நகரில் உள்ள பகுதி அலுவலகம் 10 ()-விலும், அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி பகுதி மக்களுக்காக இந்திரா நகரில் உள்ள பகுதி அலுவலகம் 10 ()-விலும் திறந்தவெளிக் கூட்டம் நடத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Last Updated on Friday, 13 November 2009 09:40
 

முதல்வர் காப்பீட்டு திட்டத்துக்கு புகைப்படம்: மாநகராட்சியில் 3 வார்டுகளுக்கு ஒரு மையம்

Print PDF

தினமணி 12.11.2009

முதல்வர் காப்பீட்டு திட்டத்துக்கு புகைப்படம்: மாநகராட்சியில் 3 வார்டுகளுக்கு ஒரு மையம்

ஈரோடு, நவ. 12: ஈரோடு மாநகராட்சி பகுதியில் முதல்வர் காப்பீட்டு திட்டத்துக்கு புகைப்படம் எடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. 3 வார்டுகளுக்கு ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி திருமண மண்டபம், விநாயகர் கோயில் வீதி மாநகராட்சி பள்ளி, காமராஜர் மேல்நிலைப்பள்ளி, திருநகர் காலனி மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட 6 மையங்களில் புகைப்படம் எடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

திருநகர் காலனி பள்ளியில் புகைப்படம் எடுக்கும் பணியை மேயர் குமார் முருகேஷ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்தது:

ஒரு மையத்துக்கு 3 வார்டுகள் வீதம் புகைப்படம் எடுக்கப்படும். ரூ.72 ஆயிரத்துக்கும் குறைவான குடும்ப ஆண்டு வருமானம் உள்ள அனைவரையும் இந்த திட்டத்தில் உறுப்பினராக சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

கவுன்சிலர்கள் அன்பழகன், குணசேகரன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.கே.பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 13 November 2009 09:29
 

மாநகராட்சி வார்டு இடஒதுக்கீடு பட்டியல்: அமைச்சர் தகவல்

Print PDF

தினமணி 12.11.2009

மாநகராட்சி வார்டு இடஒதுக்கீடு பட்டியல்: அமைச்சர் தகவல்

பெங்களூர், நவ. 12: பெங்களூர் மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு பட்டியல் விரைவில் மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்தார்.

பெங்களூர் பிளேஹள்ளி கழிவுநீர் கால்வாய் சீரமைப்புப் பணிகளை வியாழக்கிழமை பார்வையிட்டார் அசோக். அப்போது அவரிடம், பெங்களூர் மாநகராட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதே என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்குஅசோக் கூறியது: பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்குத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகவும், ஆனால் மாநில அரசு இன்னும் வார்டு இட ஒதுக்கீடு பட்டியலை அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று 18 மாதங்களே ஆகியுள்ளன. இந்த 18 மாதத்தில் மாநகராட்சி வார்டுகளின் எல்லைப் பிரிப்பு, வார்டுகளின் எண்ணிக்கையை 198 ஆக அதிகரித்துள்ளது.

பல்வேறு காரணங்களால் வார்டுகள் இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியிட முடியவில்லை. அப்பணியில் அரசு இப்போது தீவிரம் காட்டி வருகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் வார்டுகள் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டியல் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.

நகரில் உள்ள பெரிய கழிவு நீர்க் கால்வாய் பகுதிகளை ஆக்கிரமித்து பலர் வீடுகள் கட்டி உள்ளனர். அந்த வீடுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. இவ்வாறு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் பரத்லால் மீனாவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அப்பணியில் அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ தலையிட மாட்டார்கள். இவ்வாறு தலையிடக் கூடாது என்று எம்எல்ஏக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளால் கழிவு நீர்க் கால்வாய் சுருங்கி, மழை நேரத்தில் பெரும் தொந்தரவு ஏற்படுகிறது என்றார் அவர்.

Last Updated on Friday, 13 November 2009 09:27
 


Page 760 of 841