Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களில் சுவரொட்டிகள் அகற்றம

Print PDF

தினமணி 12.11.2009

மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களில் சுவரொட்டிகள் அகற்றம

சென்னை, நவ. 11: சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள், புதன்கிழமை அகற்றப்பட்டன.மாநகராட்சிக்கு சொந்தமான 3,464 கட்டடங்களில் நவம்பர் 11-ம் தேதி முதல் சுவரொட்டிகள் ஒட்டவும், விளம்பரங்களை எழுதவும் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதன்படி, ஏற்கெனவே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றும் பணியை, மாநகராட்சி ஊழியர்கள் புதன்கிழமை மேற்கொண்டனர்.'

இப்பணியை பார்வையிட்ட மேயர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:'

மாநகராட்சி விளையாட்டு மைதானங்கள், கழிப்பிடங்கள், பூங்காக்கள், மருந்தகங்கள், சுகாதார மையங்கள் உள்பட சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 3,464 கட்டடங்களின் சுற்றுச்சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கும், விளம்பரங்கள் எழுதுவதற்கும் புதன்கிழமை முதல் தடை விதிக்கப்படுகிறது.

சென்னை அண்ணா சாலையில் ஏற்கெனவே 10,700 சதுர அடி அளவுக்கு தமிழர் பண்பாட்டை விளக்கும் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் 42 ஆயிரம் சதுர அடி சித்திரம் வரையப்பட உள்ளது.

தீவுத்திடலில் பொருள்காட்சிகள் நடைபெறும் மைதான சுற்றுச்சுவரில் 30 ஆயிரம் சதுர அடி அளவில் சித்திரம் வரையப்பட்டுள்ளது. கதீட்ரல் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சுற்றுச் சுவர் ஆகியப் பகுதிகளிலும் சித்திரங்கள் வரையப்பட உள்ளன.

தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்தச் சாலைகள் முதலில் செங்கல் படிமானங்கள் கொண்டு சரி செய்யப்படும். பின்னர் போர்க்கால அடிப்படையில் தார்க் கலவை கொண்டு சரி செய்யும் பணி மேற்கொள்ளப்படும்.

நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் லிஃப்ட் வசதியுடன் கட்டப்பட்டுள்ள நடை மேம்பாலம், 10 நாள்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்படும் என்றார் மேயர்.

 

மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் போஸ்டர் ஒட்டினால்போலீஸ் மூலம் நடவடிக்கை; இன்று முதல் தடை

Print PDF

மாலை மலர் 11.11.2009

மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் போஸ்டர் ஒட்டினால்போலீஸ் மூலம் நடவடிக்கை; இன்று முதல் தடை

சென்னை, நவ. 11-

சென்னை மாநகராட்சி அலுவலகங்கள், கட்டிடங்களில் இன்று முதல் போஸ்டர் ஒட்ட தடை அமலுக்கு வந்தது. நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை ஊழியர்கள் அகற்றினார்கள். இதை மேயர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையை அழகு படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அண்ணாசாலை, காமராஜர் சாலையில் போஸ்டர் ஒட்ட தடை ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது. அண்ணாசாலையில் தமிழர் பண்பாட்டை சித்தரிக்கும் ஓவியங்கள் வரையப் படுகிறது. ஏற்கனவே 10,700 சதுர அடிக்கு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இன்னும் 42 ஆயிரம் சதுர அடிக்கு ஓவியங்கள் வரையப்பட உள்ளன.

ராஜ்பவன் சுற்றுச்சுவர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கதீட்ரல் சாலை, மேடவாக்கம் டேங்க் சாலை, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி சுவர் உள்பட 2 லட்சம் சதுர அடியில் ஓவியங்கள் வரைய ஏற்பாடுகள் நடக்கிறது.

இன்று முதல் மாநகராட்சி கட்டிடங்களில் போஸ்டர் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்கா, சாலையோர பூங்கா, விளையாட்டு மைதானம், பள்ளி சுவர்கள், கலையரங்கம், சமூதாய கூடங்கள் உள்பட 3464 மாநகராட்சி இடங்களில் போஸ்டர், சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தடையை மீறி போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, மண்டல தலைவர் மா.பா. அன்புதுரை உடனிருந்தனர்.

Last Updated on Wednesday, 11 November 2009 11:36
 

சாந்திமலை அறக்கட்டளை நன்கொடை தி.மலை நகராட்சிக்கு புதிய குடிநீர் லாரி

Print PDF

தினமணி 11.11.2009

சாந்திமலை அறக்கட்டளை நன்கொடை தி.மலை நகராட்சிக்கு புதிய குடிநீர் லாரி

திருவண்ணாமலை, நவ.10: திருவண்ணாமலை நகராட்சிக்கு ரூ.10 லட்சம் செலவில் புதிய குடிநீர் லாரியை சாந்திமலை அறக்கட்டளை நன்கொடையாக வழங்கியது.

இதற்கான நிகழ்ச்சி திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது. நகராட்சித் தலைவர் இரா.ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆர். செல்வம் வரவேற்றார்.

மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன் முன்னிலையில் அறக்கட்டளை மேலாண் இயக்குநர் டாக்டர் வெர்னர் நிக்கல் குடிநீர் லாரியின் பதிவு சான்றிதழை எம்.எல்.. கு.பிச்சாண்டியிடம் வழங்கினார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் கூறியது:

ஏற்கெனவே சாந்திமலை அறக்கட்டளை சார்பில் ரூ.8 லட்சம் செலவில் குப்பை வாரும் லாரி வழங்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று தற்போது குடிநீர் லாரியை வழங்கியுள்ளனர் என்றார்.

திருவண்ணாமலை நகரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த 30 ஆயிரம் வீடுகளுக்கு பிளாஸ்டிக் கூடைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்கும் குப்பைகளை பெறும் கூடை பச்சை நிறத்திலும், மக்காத குப்பைகளை பெறும் கூடை மஞ்சள் நிறத்திலும் என மொத்தம் 60 ஆயிரம் கூடைகள் தேவைப்படுகிறது.

பிளாஸ்டிக் கூடைகளை பெற சாந்திமலை அறக்கட்டளை நிறுவனத்தின் உதவி கோரி நகராட்சித் தலைவர் ஸ்ரீதரன் அதன் நிர்வாக இயக்குநர் வெர்னர் நிக்கலிடம் மனு அளித்தார். நகர திமுக செயலர் ப.கார்த்திவேல்மாறன், ஆணையர் சேகர், அறக்கட்டளை மேலாளர் மனோகரன் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 11 November 2009 09:36
 


Page 761 of 841