Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பருவ மழையை சமாளிக்க மாநகராட்சி தயார்

Print PDF

தினமலர் 05.11.2009

 

மன்னார்குடி நகராட்சியில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி 5.11.2009

மன்னார்குடி நகராட்சியில் உள்ளாட்சி தின விழா

மன்னார்குடி, நவ. 4: மன்னார்குடி நகராட்சி சார்பில் திங்கள்கிழமை உள்ளாட்சி தினவிழா மற்றும் பேரணி நடைபெற்றது.

விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் த.கார்த்திகா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மின்வாரிய ஆலோசனைக்குழு உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் கலந்து கொண்டு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கும் காசோலைகள் வழங்கிப் பேசினார்.

இந்நிகழ்ச்சியையொட்டி, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், நகராட்சி அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்ட உள்ளாட்சி தின விழிப்புணர்வுப் பேரணி ராஜகோபால சுவாமி கோயிலிலிருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகராட்சி அலுவலகம் வந்தது. அங்கு மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நாகநாதசுவாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மீனாட்சி சூரிய பிரகாஷ், அரசுக் கல்லூரி என்.சி.சி. தலைவர் ஜி. இருளப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள் எம்.எஸ். வீரக்குமார், கே. ஜீவானந்தம், ஆர். பரிமளா ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, நகராட்சிப் பொறியாளர் ஏ. முருகானந்தம் வரவேற்றார். மேலாளர் (பொ) சி. ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Last Updated on Thursday, 05 November 2009 06:22
 

நகராட்சிப் பள்ளியில் உள்ளாட்சி தின போட்டி

Print PDF

தினமணி 5.11.2009

நகராட்சிப் பள்ளியில் உள்ளாட்சி தின போட்டி

சிவகங்கை, நவ.4: சிவகங்கை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ளாட்சி தினவிழா கொண்டாடப்பட்டது. நகராட்சி ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார் பள்ளி கல்விக்குழு தலைவரும் நகர்மன்ற உறுப்பினமான சரவணன் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை மரியசெல்வி வரவேற்றார்.

உள்ளாட்சி தினத்தில் மாணவர்களுக்குப் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நகராட்சி ஆணையர் சுந்தரமூர்த்தி மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் நடராஜன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

விழாவில் ஆசிரியப் பயிற்றுநர் ராதாகெüரி, ஆசிரியர்கள் சுந்தரி, சபரிநாதசிவா, கற்பகம் மற்றும் பெற்றோர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 05 November 2009 06:19
 


Page 769 of 841