Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

உள்ளாட்சி தின விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி 4.11.2009

உள்ளாட்சி தின விழிப்புணர்வுப் பேரணி

பட்டுக்கோட்டை, நவ. 3: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் உள்ளாட்சி தின விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. பேரணியை, நகர்மன்றத் தலைவர் இ. பிரியா கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.

நகர்மன்ற துணைத் தலைவர் செ. கண்ணன் தலைமை வகித்தார். பேரணியில், மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், நகராட்சி உறுப்பினர்டி. சுவாமிநாதன், மேலாளர் ராமமூர்த்தி, கணக்கர் ஷேக் நசுருதீன், நகரமைப்பு அலுவலர் கருப்பையன், உதவிப் பொறியாளர் கே. குமார், சுகாதார அலுவலர் (பொறுப்பு) என். ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் வை. நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 04 November 2009 06:23
 

ராஜபாளையம் நகராட்சி குழு உறுப்பினர் தேர்தல்

Print PDF

தினமணி 4.11.2009

ராஜபாளையம் நகராட்சி குழு உறுப்பினர் தேர்தல்

ராஜபாளையம், நவ.3; ராஜபாளையம் நகராட்சியில் புதிய நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குழு உறுப்பினர்கள் தேர்தல் திங்கள்கிழமை நகர்மன்றக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

தேர்தல் அதிகாரியாக நகராட்சி ஆணையாளர் சித்திக் செயல்பட்டார்.

முதலில் நியமனக் குழு உறுப்பினர்க்கான தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் துணைத் தலைவர் சுப்பராஜா 29 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

நகர்மன்ற வரிவிதிப்புக் குழு, மேல்முறையீட்டுக் குழுவில் 4 உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வைகுண்டராமு, மாரியப்பன், தி.மு.. கவுன்சிலர்கள் ஆர்.எஸ்.மோகன், நயினார்முகமது ஆகியோர் 29 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றனர்.

ஒப்பந்தக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக கவுன்சிலர் சுபா 30 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

வெற்றிபெற்ற குழு உறுப்பினர்களை தலைவர் மகாலட்சுமி, துணைத் தலைவர் சுப்பராஜா ஆகியோர் பாராட்டினர். ஆணையாளர் சித்திக் சான்றிதழ்களை வழங்கினார்.

Last Updated on Wednesday, 04 November 2009 06:15
 

விழுப்புரம்: மாநகராட்சியாக மாற வாய்ப்பு

Print PDF

தினமணி 4.11.2009

விழுப்புரம்: மாநகராட்சியாக மாற வாய்ப்பு

விழுப்புரம், நவ. 3: விழுப்புரம் நகராட்சியுடன் கூடுதல் ஊராட்சிகள் இணைக்கப்படும் போது அது மாநாகராட்சியாக மாற வாய்ப்பு உள்ளது என மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் அவர் பேசியது:

கோலியனூர் ஒன்றியத்தில் உள்ள காகுப்பம், பானாம்பட்டு, சாலாமேடு, வழுதரெட்டி ஆகிய ஊராட்சிகளை விழுப்புரம் நகராட்சியுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கூடுதல் ஊராட்சிகள் விழுப்புரம் நகராட்சியுடன் சேர்க்கப்படுவதால் வருங்காலத்தில் விழுப்புரம் மாநகராட்சியாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

இதேபோல, திண்டிவனம் நகராட்சியுடன் நிர்வாக வசதிக்காக சலவாதி, மானூர், ஜக்காம்பேட்டை ஆகிய ஊராட்சிகளை இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல, பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களிலும் நிர்வாக வசதிக்காக சில ஊராட்சிகளை மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இந்த மாற்றம் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அனைத்து ஊராட்சிகளும், சட்டப்பேரவைத் தொகுதியின் கீழ் வரும்படி அமைக்கப்படும்.

இதன் மூலம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை அந்தந்த ஒன்றியங்களுக்கு ஒதுக்கீடு செய்து பணியாற்ற முடியும்.

இந்த ஊராட்சி ஒன்றியங்களின் எல்லை மறுசீரமைப்புக்கு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஆர். பழனிச்சாமி தலைமை வகித்தார்.

மக்களவை உறுப்பினர் ஆதி. சங்கர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தா. உதயசூரியன், திருநாவுக்கரசு, அங்கையற்கண்ணி, செ.புஷ்பராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவி வசுந்தராதேவி, துணைத் தலைவர் மைதிலி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 04 November 2009 06:14
 


Page 772 of 841