Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ராசிபுரத்தில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி 3.11.2009

ராசிபுரத்தில் உள்ளாட்சி தின விழா

ராசிபுரம், நவ. 2: ராசிபுரம் நகராட்சி சார்பில் உள்ளாட்சிகள் தினவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

முன்னதாக நகராட்சி அலுவலகம் முன்பு துவங்கிய பேரணியை நகர்மன்றத் தலைவர் என்.ஆர்.ராமதாஸ் துவக்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று சுற்றுப்புற தூய்மை குறித்த விழிப்புணர்வு தட்டிகள் ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர்.

நகராட்சி ஆணையாளர் வே.மாணிக்கவாசகம், பொறியாளர் இளங்கோவன், மேலாளர் அத்தியப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள் வி.பாலு, காதர்பாட்சா, ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 03 November 2009 07:10
 

கொடைக்கானலில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினமணி 3.11.2009

கொடைக்கானலில் உள்ளாட்சி தின விழா

கொடைக்கானல், நவ. 2: கொடைக்கானல் நகர்மன்றம் சார்பில், உள்ளாட்சி தின விழா நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்றது.

நகர்மன்றத் தலைவர் முகமது இப்ராஹிம் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் விஜயகுமார் வரவேற்றார்.

விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நகர்மன்றத் தலைவர் பரிசுகளை வழங்கிப் பேசினார்.

விழாவில் நகர்மன்ற துணைத் தலைவர் செல்லத்துரை, உறுப்பினர்கள், நகராட்சி பொறியாளர் ராஜாராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.நகரமைப்பு அலுவலர் சீனிவாசன் நன்றி கூறினார். முன்னதாக மூஞ்சிக்கல் பஸ் நிலையத்திலிருந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர்வலமாக வந்தனர்.

Last Updated on Tuesday, 03 November 2009 06:54
 

நகராட்சிக் குழு உறுப்பினர் தேர்தல்

Print PDF

தினமணி 3.11.2009

நகராட்சிக் குழு உறுப்பினர் தேர்தல்

ராஜபாளையம், நவ.2: ராஜபாளையம் நகராட்சியில் புதிய நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குழு உறுப்பினர்கள் தேர்தல் திங்கள்கிழமை நகர்மன்றக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

தேர்தல் அதிகாரியாக நகராட்சி ஆணையாளர் சித்திக் செயல்பட்டார்.

முதலில் நியமனக் குழு உறுப்பினர்க்கான தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் துணைத் தலைவர் சுப்பராஜா 29 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

நகர்மன்ற வரிவிதிப்புக் குழு, மேல்முறையீட்டுக் குழுவில் 4 உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வைகுண்டராமு, மாரியப்பன், தி.மு.. கவுன்சிலர்கள் ஆர்.எஸ்.மோகன், நயினார்முகமது ஆகியோர் 29 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றனர்.

ஒப்பந்தக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திமுக கவுன்சிலர் சுபா 30 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

வெற்றிபெற்ற குழு உறுப்பினர்களை தலைவர் மகாலட்சுமி, துணைத் தலைவர் சுப்பராஜா ஆகியோர் பாராட்டினர். ஆணையாளர் சித்திக் சான்றிதழ்களை வழங்கினார்.

Last Updated on Tuesday, 03 November 2009 06:53
 


Page 776 of 841