Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ஆரணியை எழில்மிகு நகராட்சியாக மாற்றுவோம்

Print PDF

தினமணி 02.11.2009

ஆரணியை எழில்மிகு நகராட்சியாக மாற்றுவோம்

ஆரணி, நவ.1: ஆரணி நகராட்சியை எழில்மிகு நகராட்சியாக மாற்றுவோம் என்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சி தினவிழாவில் ஆரணி எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் உறுதி கூறினார்.

ஆரணி நகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை உள்ளாட்சி தினவிழா நடைபெற்றது. இதில் அவர் பேசியது:

நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.5 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் நிறைவேறியுள்ளன. காமராஜர் சிலை முதல் அண்ணாசிலை வரை சிமென்ட் சாலை அமைத்து நடைபாதையுடன் கூடிய இரு வழிப்பாதை அமைக்கப்படவுள்ளது.

இதற்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பழக் கடைகளுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆரணி நகராட்சி நுழைவு வாயில்களில் வளைவுகள் அமைக்கவும், சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவுத் தூண் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும். ஆரணியை எழில்மிகு நகராக மாற்றுவோம் என்றார்.

நகரமன்றத் தலைவர் சாந்திலோகநாதன், தொழிலதிபர் லோகநாதன், துணைத் தலைவர் லட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

உள்ளாட்சி தினவிழா பேரணி

Print PDF

தினமணி 2.11.2009

உள்ளாட்சி தினவிழா பேரணி

வேலூர், நவ. 1: வேலூர் மாநகராட்சி சார்பில் உள்ளாட்சிகள் தினவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. மாநகராட்சியின் முன் துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் செ. ராஜேந்திரன் தொடங்கி வைத்தார் (படம்).

இதில் எம்எல்ஏ சி. ஞானசேகரன், மேயர் ப. கார்த்திகேயன், துணை மேயர் தி.. முகமது சாதிக், இந்திய உணவுக் கழக ஆலோசனைக் குழு உறுப்பினர் தி.. முகமது சகி, பொறியாளர் தேவகுமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கதிரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, மாநகராட்சி வளாகத்தை அடைந்தது. அங்கு நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி மேயர் ப. கார்த்திகேயன் பேசினார்.

இன்னிசை நிகழ்ச்சியும், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

 

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளாட்சிகள் தின விழா

Print PDF

தினமணி 2.11.2009

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளாட்சிகள் தின விழா

தூத்துக்குடி, நவ. 1: தூத்துக்குடி மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை உள்ளாட்சிகள் தின விழா நடைபெற்றது.

இதையொட்டி மாமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

விழாவுக்கு மேயர் இரா. கஸ்தூரி தங்கம் தலைமை வகித்தார். மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்ட கயிறு இழுத்தல், இசை நாற்காலி, சாக்குப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மாவட்ட வேலைவாய்ப்பு நடுநிலைக்குழு உறுப்பினர் என். பெரியசாமி பங்கேற்று, வென்றோருக்குப் பரிசுகளை வழங்கினார்.

மாநகராட்சி ஆணையர் பெ. குபேந்திரன், துணை மேயர் சே. தொம்மை சேசுவடியான், பொறியாளர் சொ. . ராஜகோபாலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை உள்ளாட்சிகள் தின விழா கொண்டாடப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

 


Page 779 of 841